Breaking News

Tag Archives: MMK CONDEMN

சுற்றுச் சுவரைக் கட்டியவர்களைக் கைது செய்யாமல் நியாயம் கேட்டுப் போராடிய நாகை திருவள்ளுவன் உள்ளிட்டோரைத் தாக்கி கைது செய்திருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது!!

சுற்றுச் சுவரைக் கட்டியவர்களைக் கைது செய்யாமல் நியாயம் கேட்டுப் போராடிய நாகை திருவள்ளுவன் உள்ளிட்டோரைத் தாக்கி கைது செய்திருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது!!   மனிதநேய மக்கள் கட்சி தலைவர்  பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் நடூர் கண்ணப்பன் லே-அவுட் பகுதியில்  ஒரு தனியார் துணிக்கடை உரிமையாளர் எழுப்பியிருந்த  சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் 17 பேர் உயிரிழந்த சம்பவம் மிகப்பெரும் அதிர்ச்சியை அளிக்கின்றது. இந்த உயிர் இழப்பிற்கு …

Read More »

5 மற்றும் 8ஆம் வகுப்பு அரசு பொதுத் தேர்வு வழிமுறைகள் வெளியீடு! மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்!!

5 மற்றும் 8ஆம் வகுப்பு அரசு பொதுத் தேர்வு வழிமுறைகள் வெளியீடு! மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்!! மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: தமிழகத்தில் 2019-2020 கல்வியாண்டில் 5 மற்றும் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அரசு பொதுத் தேர்வு நடத்தப்படும் என அரசாணை வெளியிடப்பட்டு அதற்கான வழிமுறையையும் பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ளது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. தமிழக அரசின் இந்த அறிவிப்பு மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் …

Read More »

மின் இணைப்பிற்கான கட்டணம் பல மடங்கு உயர்வு: மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்!

மின் இணைப்பிற்கான கட்டணம் பல மடங்கு உயர்வு:  மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்! மனிதநேய மக்கள் கட்சி தலைவர்  பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: தமிழகத்தில் புதிதாக மின் இணைப்பு வழங்க வசூலிக்கப்பட்ட கட்டணம் பல மடங்காக மின்சார ஒழுங்குமுறை ஆணையம் உயர்த்தியுள்ளதை மனிதநேய மக்கள் கட்சி கண்டிக்கிறது. இதுவரை ஒருமுறை மட்டும் வசூலிக்கப்பட்டு வந்த மின் இணைப்பு கட்டணம், பதிவு கட்டணம், மீட்டர் வைப்புத் தொகை, வளர்ச்சிக் கட்டணம், …

Read More »

5 மற்றும் 8ஆம் வகுப்பு அரசு பொதுத் தேர்வு! மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்!!

5 மற்றும் 8ஆம் வகுப்பு அரசு பொதுத் தேர்வு! மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்!! மனிதநேய மக்கள் கட்சி தலைவர்  பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: தமிழகத்தில் 2019-2020 கல்வியாண்டில் 5 மற்றும் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அரசு பொதுத் தேர்வு நடத்தப்படும் என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இந்த பொதுத் தேர்வுக்கான உரிய அறிவிப்புகளை வெளியிடவும், நடவடிக்கைகள் மேற்கொள்ளவும் சம்மந்தப்பட்ட இயக்குநர்களை அரசு அறிவுறுத்தி உள்ளது. தமிழக அரசின் இந்த …

Read More »

பெரும்பான்மையான இந்திய மக்களின் மொழியாக இல்லாத இந்திதான் இந்தியாவின் மொழி என்ற அமித்ஷாவின் பேச்சு வன்மையாக கண்டிக்கத்தக்கது!!

பெரும்பான்மையான இந்திய மக்களின் மொழியாக இல்லாத இந்திதான் இந்தியாவின் மொழி என்ற அமித்ஷாவின் பேச்சு வன்மையாக கண்டிக்கத்தக்கது!! மனிதநேய மக்கள் கட்சி தலைவர்  பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: இந்திதான் இந்தியாவின் தாய்மொழி என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியிருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது. உண்மையில் இந்தி மொழி இந்தியா முழுமைக்கும் ஏற்ற மொழி இல்லை. இந்தி பேசுபவர்கள் இந்திய மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்குக்கும் குறைவானவர்களே. மேலும் இந்தி …

Read More »

பள்ளிகளின் மெத்தனத்தால் பறிபோகவிருக்கும் மாணவர்களின் கல்வி உதவித் தொகை! தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்!!

பள்ளிகளின் மெத்தனத்தால் பறிபோகவிருக்கும் மாணவர்களின் கல்வி உதவித் தொகை!  தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்!! மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேரா. எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: தேசிய அளவிலான தகுதி -வழியுதவி கல்வி உதவித் தொகைத் திட்டம் (National Merit Cum Means Scholarship) 2008 மே மாதம் தொடங்கப்பட்டது. நலிந்த பிரிவைச் சேர்ந்த திறமையான மாணவர்கள் எட்டாம் வகுப்புக்குப் பிறகு படிப்பை நிறுத்திவிடக் கூடாது என்பதற்காகக்  கொண்டு …

Read More »

ஒரே நாடு, ஒரே குடும்ப அட்டை திட்டத்தில் இணைய தமிழக அரசு ஒப்புதல்! மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்!!

ஒரே நாடு, ஒரே குடும்ப அட்டை திட்டத்தில் இணைய தமிழக அரசு ஒப்புதல்! மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்!!   மனிதநேய மக்கள் கட்சி தலைவர்  பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை திட்டத்தை நாடு முழுவதும், அமல்படுத்திட நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அரசு அறிவித்திருந்தது. இந்தியாவில் வழங்கப்படும் பொது விநியோக திட்டத்தைப் பல ஆண்டுகளாக எதிர்த்து வரும் உலக வர்த்தக நிறுவனத்தைத் …

Read More »

சிறுமைப்படுத்தப்படும் வரலாற்றாசிரியர் ரொமிலா தாப்பர்! மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்!!

சிறுமைப்படுத்தப்படும் வரலாற்றாசிரியர்  ரொமிலா தாப்பர்! மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்!! மனிதநேய மக்கள் கட்சி தலைவர்  பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: வரலாற்று ஆய்வாளரும், டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் சிறப்பு அந்தஸ்து பேராசிரியருமான ரொமிலா தாப்பர் தனது தன்விவரக்குறிப்பு ஆவணத்தை(Curriculum vitae) பல்கலைக்கழக நிர்வாகம் பரிசீலனைக்காகக் கேட்டுள்ளது கண்டனத்திற்குரியது. 87 வயதான ரொமிலா தாப்பர் அவர்கள் பண்டைக்கால வரலாறுகளை  ஆய்வு செய்து அதில் உள்ள உண்மைகளைப் புத்தகமாக்கி வருபவர். …

Read More »

புழல் சிறைவாசிகள் மீது தாக்குதல் நடத்திவிட்டு சிறைவாசிகள் பொய் குற்றச்சாட்டை சுமத்தும் சிறைத் துறை! மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்!!

புழல் சிறைவாசிகள் மீது தாக்குதல் நடத்திவிட்டு  சிறைவாசிகள் பொய் குற்றச்சாட்டை சுமத்தும் சிறைத் துறை! மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்!! மனிதநேய மக்கள் கட்சி தலைவர்  பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: புழல் சிறையில் தண்டனைக் கைதிகள், விசாரணை கைதி என ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறைவாசிகள் உள்ள நிலையில், சிறைவாசிகள் குறைதீர்ப்பு கூட்டத்திற்கு ஏன் வரவில்லை எனக் கூறி முஸ்லிம் சிறைவாசிகள் பன்னா இஸ்மாயில், பிலால் மாலிக் ஆகியோர் சிறைக் …

Read More »

சூழலியல் செயற்பாட்டாளர் பியூஸ் மானுஷ் மீது தாக்குதல்! மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்!!

சூழலியல் செயற்பாட்டாளர் பியூஸ் மானுஷ் மீது தாக்குதல்! மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்!! மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த இயற்கை ஆர்வலரும், சூழலியல் செயற்பட்டாளருமான பியூஸ் மானுஷ் மீது பாஜகவினர் தாக்குதல் நடத்தியுள்ளது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. நாட்டின் உள்ள பொருளாதார மந்தநிலை குறித்து அறிய சேலத்திலுள்ள பா.ஜ.க அலுவலகத்துக்குச் சென்ற சூழலியல் செயற்பட்டாளர் பியூஸ் மானுஷை காவல்துறையினர் முன்னிலையிலேயே தாக்குதல் …

Read More »