Breaking News

Tag Archives: COVID 19

விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் இறந்த முதியோரின் உடலை அடக்கம் செய்த திண்டிவனம் தமுமுகவினர்

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தை சேர்ந்த 70 வயது மதிக்கத்தக்க முதியோர் சில தினங்களுக்கு முன்பு புதுச்சேரி காலாப்பட்டு பிம்ஸ் மருத்துவமனையில் உடல்நிலை சரியில்லாமல் அனுமதிக்கப்பட்டிருந்தார் அங்கு அவருக்கு பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டு பின்பு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த மூன்று தினங்களாக சிகிச்சை பெற்று வந்தார்.அங்கு அவருக்கு மீண்டும் பரிசோதனை செய்யப்பட்டதில். (Negative)நோய் தொற்று இல்லை என்று உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில்.அவர் மூச்சுத்திணறல் காரணமாக வஃபாத் …

Read More »

ஆம்பூரில் கொரோனா தொற்றால் உயிரிழந்த 38 வயது மதிக்கத்தக்க ஒருவர் உடலை நல்லடக்கம் செய்த தமுமுகவினர்

  ஆம்பூர் துத்திபட்டு பகுதியை சேர்ந்த 38 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் வேலூர் அடுக்கம்பாறை மருத்துவமனையில், சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார் அவரின் உடலை பெற்று தமுமுக டிரஸ்ட் ஆம்புலன்ஸ் மூலமாக ஆம்பூர் கொண்டு வந்தனர். பிறகு ஜமாஅத்தார்கள், அரசு அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் முன்னிலையில் அன்னாரது ஜனாஸா தொழுகை நடத்தப்பட்டு பிறகு நல்லடக்கம் செய்த தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சகோதரர்கள்

Read More »

புளியங்குடியை சேர்ந்த ஒருவர் கொரோனா தொற்றால் இறந்து விட்டார் அவரது உடலை தமுமுகவினர் நல்லடக்கம் செய்தனர்.

தென்காசி மாவட்டம் புளியங்குடியில் பெண் ஒருவர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டு பாளையங்கோட்டையில் மரணம் அடைந்தார். அவரது உடலை அடக்கம் செய்ய கோரி அவரது குடும்பத்தினர் தமுமுக மாவட்ட துணைத் தலைவர் M.S அப்துர் ரஹ்மான் அவர்களிடம் தெரிவித்தனர். இதையடுத்து அவரது உடலை பாளையங்கோட்டை ஐகிரவுண்டு ஆஸ்பத்திரியில் இருந்து தமுமுக ஆம்புலன்ஸ் மூலம் புளியங்குடி நகர தலைவர் செய்யது அலி பாதுஷா, கடையநல்லூர் நகர தலைவர் பாதுஷா ஆகியோர் ஏற்பாட்டில் புளியங்குடி மேலப்பள்ளிவாசல் …

Read More »

காஞ்சி மாவட்டம் பட்டூரில் கொரோனா தொற்றால் இறந்த உடலை அடக்கம் செய்த தமுமுக மமகவினர்.

காஞ்சிமாவட்டம் பட்டூரில் கொரோனா தொற்றால் ஒருவர் மரணமடைந்தார் அவரின் உடலை தமுமுக மாவட்டசெயலாளர் A. அமீத்கான் தலமையிலான நல்லடக்க குழுவினர் துனை செயலாளர்கள் பட்டூர் அஹமது குன்றத்தூர் குர்ஷித் மாவட்ட வணிகர்அணி செயலாளர் சாகுல் ஹமீது குன்றத்தூர் நகர செயலாளர் நிஸார்அகமது பேரூர் தலைவர் Ak. ஜாஹிர்உசேன் மாங்காடு பதுருதீன் இத்ரிஸ்கான் ஆகியோர் உடலை அடக்கம் செய்தனர்

Read More »

கொரோனா தொற்றால் உயிரிழந்த பெண் ஒருவரை அடக்கம் செய்த விழுப்புரம் மாவட்ட தமுமுக மமகவினர்

விழுப்புரத்தைச் சேர்ந்த சுமார் 60 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் கொரோனோ தொற்று ஏற்பட்டு விழுப்புரம் மெடிக்கல் காலேஜ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார் இந்நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு தொற்றில் இருந்து விடுபட்டார் மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கும் போது அவர் இறந்து விட்டார் அன்னாருடைய ஜனாஸாவை தமுமுக வினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொரோனா பாதுகாப்பு உடை அணிந்து நல்லடக்கம் செய்தனர்

Read More »

கொரோனா தொற்றால் உயிரிழந்த முதியவரை அடக்கம் செய்த வடசென்னை திருவிக நகர் தமுமுகவினர்

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு அண்ணா நகரை சேர்ந்த 65 வயதுடைய முதியவர் சிகிச்சை பலனின்றி சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார். அவரின் உறவினர்களின் வேண்டுகோளுக்கு இணங்க திருவிக நகர் பகுதி தமுமுகவினர் உடலைப் பெற்று உரியமுறையில் வியாசர்பாடி கபஸ்தானில் நல்லடக்கம் செய்தனர். ­

Read More »

கொரோனா தொற்றால் உயிரிழந்த மூதாட்டியை அடக்கம் செய்த வடசென்னை இராயபுரம் தமுமுகவினர்

வடசென்னை கொடுங்கையூரில் உள்ள KVT தனியார் மருத்துவமனையில் கொரானா தொற்றால் சிகிச்சை பெற்று வந்த முத்தமிழ்நகர் பகுதியை சேர்ந்த 65 வயதுடைய மூதாட்டி சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். உறவினர்களின் வேண்டுகோளுக்கு இணங்க இராயபுரம் பகுதி தமுமுகவினர் உடலைப் பெற்று உரிய முறையில் பழைய வண்ணாரப்பேட்டை மையவாடியில் நல்லடக்கம் செய்தனர்.      

Read More »

விழுப்புரம் மாவட்டம் கொரோனா தொற்றால் சிகிச்சை பலனின்றி இறந்தவரின் உடலை திண்டிவனத்தில் அடக்கம் செய்த தமுமுக மமகவினர்

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தை சேர்ந்த சுமார்60 வயது உடையவர் கடந்த 15 தினங்களுக்கு முன்பு உடல்நிலை பாதிக்கப்பட்டு விழுப்புரம் மெடிக்கல் காலேஜ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார் சிகிச்சையின் போது கொரானா தொற்று இருப்பதாக டாக்டர்கள் உறுதி செய்தனர் பிறகு அதிலிருந்து விடுபட்டு உடல் நலம் சரியாகி வீடு திரும்பினார் பிறகு பக்கவாதம் நோயால் பாதிக்கப்பட்டு சென்னை தனியார் மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு மீண்டும் தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சை …

Read More »

வேலூர் மருத்துவமனையில் கொரோனா தொற்றால் இறந்த சகோதரர் உடலை அடக்கம் செய்த வாணியம்பாடி தமுமுக-மமக தன்னார்வலர்கள்

வாணியம்பாடி நகரத்தைச் சேர்ந்த சகோதரர் வேலூர் மருத்துவமனையில் மரணமடைந்தார். நீண்ட அரசியல் காழ்ப்புணர்வுகளுக்கு மத்தியில் இறைவனின் நாட்டப்படி அவரது உடல் தமுமுக ஆம்புலன்ஸ் மூலமாக வாணியம்பாடி கொண்டுவந்து காதர்பேட்டை அடக்கத்தலத்தில் தமுமுகவினர் நல்லடக்கம் செய்தனர். மரணமடைந்தவரின் உறவினர் தமுமுக மாவட்ட நிர்வாகிகளுக்கு தகவல் தந்து கண்ணியமான இறுதிச்சடங்கு செய்ய கேட்டுக்கொண்டதையடுத்து உடனடியாக வாணியம்பாடி நகர மற்றும் ஆலங்காயம் ஒன்றிய நிர்வாகிகள் விரைந்து வந்து காத்திருந்து அன்னாரது உடலை கண்ணியமான முறையில் …

Read More »