Breaking News

Tag Archives: COVID 19

கொரோனா தொற்றால் உயிரிழந்த மாற்றுமத சகோதரர் உடலை அடக்கம் செய்த வடசென்னை தமுமுக

சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் கொரானா தொற்றால் பாதிக்கப்பட்டு மணலியை சேர்ந்த 47 வயதுடைய பாஸ்கர் என்பவர் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் நேற்று (15/07/2020) சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார். அவரின் உறவினர்கள் வேண்டுகோளின் படி அவரின் உடலை பெற்ற வடசென்னை இராயபுரம் பகுதி தமுமுகவினர், உரியமுறைப்படி அவர்களின் மத அடிப்படையில் மீஞ்சூரில் தகனம் செய்தனர்.

Read More »

கொரோனா தொற்றால் உயிரிழந்த நபரை நல்லடக்கம் செய்த குடியாத்தம் நகர தமுமுகவினர்

வேலூர் மாவட்டம் குடியாத்தம் தர்ணம் பேட்டையை சேர்ந்த தோல் வியாபாரி ஜனாப் கலீல் அஹமது என்ற 65 வயதுடைய நபர் கொரோனா தொற்றால் நேற்று (14/07/20) வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தகவல் அறிந்து உடலை பெற்ற வேலூர் தமுமுகவினர் ஆம்புலன்ஸ் மூலம் உடலை குடியாத்தம் நகர தமுமுகவினரிடம் ஒப்படைத்தனர். பிறகு ஜமாத்தார்கள், அரசு அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் ஆகியோர் முன்னிலையில் இறந்த நபரின் உடல்   …

Read More »

தேங்காய்பட்டணத்தில் தமுமுக சார்பில் பல்வேறு இடங்களில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது

கன்னியாகுமரி மாவட்ட தேங்காய்பட்டணம் கிளையில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில் தேங்காய்பட்டணம் வாழவிளாகம் மற்றும் பஸ் நிலையம் , மருத்துவமனைகளில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது…

Read More »

காட்டாங்குளத்தூரில் ரஹ்மான் 58வயது சகோதரர் ஒருவர் நோய் தொற்றால் இறந்து விட்டர் அவரது உடலை அடக்கம் செய்த தமுமுகவினர்

செங்கல்பட்டு வடக்கு மாவட்டம் காட்டாங்குளத்தூரில் ரஹ்மான் 58வயது சகோதரர் கொரானா நோய் தொற்றால் மரணித்துவிட்டார் அவரது உடலை மீட்டு காட்டாங்குளத்தூர் அடக்கஸ்தலத்திற்க்கு அனுப்பி வைத்தார்கள் பின்பு செங்கை வடக்கு மாவட்ட தமுமுக மமக நிர்வாகிகள் ஆகியோர் இணைந்து உடலை நல்லடக்கம் செய்தனர்

Read More »

மதுரையில் கொரோனா தொற்றால் இறந்த மூன்று உடல்களை அடக்கம் செய்த மதுரை தெற்கு மாவட்ட தமுமுக-மமக தன்னார்வலர்கள்

மதுரை தெற்கு  மாவட்டத்தின் நோய் தொற்றால் ஒருவர் இறந்து விட்ட நிலையில் உறவினர்களின் வேண்டுகோளுக்கினங்க மைய வாடியில் மதுரை தெற்கு மாவட்ட கிளை நிர்வாகிகள் இணைந்து உடலை நல்லடக்கம் செய்தனர்

Read More »

தேனியில் நோய் தொற்றால் இறந்தவர் உடலை அடக்கம் செய்த தமுமுகவினர்

தேனி மாவட்ட தமுமுக சார்பில் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலை சேர்ந்த ஒருவர் நோய் தொற்றால் மரணம் அடைந்தார் அவரது உடலை தேனி பெரிய பள்ளிவாசலில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் நிர்வாகிகள் நல்லடக்கம் செய்தனர்

Read More »

பேகம்பூரில் நோய் தொற்றால் இறந்தவரை அடக்கம் செய்த தமுமுகவினர்

திண்டுக்கல் மாவட்டம் பேகம்பூரில் சேர்ந்த ஆண் ஒருவர் கொரோனாவினால் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி மரணம் அடைத்தார் அவரது உடலை பெற்று தமுமுக சகோதர்கள் பேகம்பூர் கபர்ஸ்தானில் நல்லடக்கம் செய்தனர்

Read More »

நாகர்கோயில் பெருவிளை பகுதியில் கபசுர குடிநீர் பொதுமக்களுக்கு வழங்கிய தமுமுகவினர்

குமரி மாவட்டம் நாகர்கோயில் மாநகரம் கிளை தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பாக கொரோனா நோய் தடுக்கும் முகமாக நாகர்கோயில் பெருவிளை பகுதியிலிருந்து கபசுர குடிநீர் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது

Read More »

தேவராயம் பாளையம் கிளையில் கிருமிநாசினி தெளித்த தமுமுகவினர்

திருப்பூர் வடக்கு மாவட்டம் தேவராயம் பாளையம் கிளையின் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழகம் சார்பாக இரண்டாம் கட்டமாக கிருமிநாசினி அப்பகுதி முழுக்க பாதுகாப்பான முறையில் முகவசம் அணிந்து சமூக இடைவெளியுடன் தெளிக்கப்பட்டது..!

Read More »

கொண்டலாம்பட்டி பகுதியில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் முக கவசம் வழங்கிய மமகவினர்

சேலம் கிழக்கு மாவட்டம் கொண்டலாம்பட்டி பகுதி இளைஞரணி சார்பாக கபசுர குடிநீர் மற்றும் முக கவசம் 700க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வழங்கப்பட்டது

Read More »