Breaking News

பத்திரிக்கை அறிக்கைகள்

பத்திரிக்கை அறிக்கைகளின் தொகுப்புகள்

லண்டன் பல்கலைக்கழக தமிழ்த்துறை மீண்டும் செயல்படத் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்! மனிதநேய மக்கள் கட்சி கோரிக்கை!!

மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: 1916 ஆம் ஆண்டு லண்டன் பல்கலைக்கழகத்தில் தொடங்கப்பட்ட தமிழ்த்துறை கடந்த 20 ஆண்டுகளாக முடங்கியிருப்பது மிகுந்த மன வருத்தத்தை அளிக்கிறது. நிதிப் பற்றாக்குறை காரணமாக தமிழ்த்துறை செயல்படாமல் இருக்கும் செய்தியை இன்று தமிழ் இந்து நாளிதழ் விரிவாக வெளிவந்துள்ளது. இந்த பல்கலைக்கழக தமிழ்த்துறையின் நூலகத்தில் 150000 ஆவணங்கள் ஓலைச்சுவடிகள் மற்றும் நூல்கள் இருப்பதாகத் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. லண்டன் …

Read More »

சைதை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மா.சுப்ரமணியனின் மகனார் அன்பழகன் மரணம்! மனிதநேய மக்கள் கட்சி இரங்கல்!!

சைதை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மா.சுப்ரமணியனின் மகனார் அன்பழகன் மரணம்! மனிதநேய மக்கள் கட்சி இரங்கல்!! மனிதநேய மக்கள் கட்சி தலைவர்  பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் இரங்கல அறிக்கை: திராவிட முன்னேற்றக் கழகத்தின் சென்னை தெற்கு மாவட்டத்தின் செயலாளரும், சைதாப்பேட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான மா.சுப்ரமணியன் அவர்களின் இளைய மகன் அன்பழகன் கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை பலன் அளிக்காமல் உயிர் இழந்தார் என்ற செய்தியறிந்து துயரம் அடைந்தேன். மகன் …

Read More »

அமமுக பொருளாளர் வெற்றிவேல் மறைவு! மனிதநேய மக்கள் கட்சி இரங்கல்!!

மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் இரங்கல் அறிக்கை: அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொருளாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான வெற்றிவேல் அவர்கள் கொரோனா நோய் தொற்றால் மரணித்தார் என்ற செய்தியறிந்து துயரம் அடைந்தேன். சென்னை மாநகராட்சி நகர்மன்றத்தின் எதிர்க்கட்சி தலைவராகவும், ஆர்.கே.நகர், பெரம்பூர் தொகுதிகளின் சட்டமன்ற உறுப்பினராகவும் பணியாற்றிய வெற்றிவேல் அவர்கள் அப்பகுதி மக்களின் நன்மதிப்பை பெற்றவர். திரு. வெற்றிவேல் அவர்களை இழந்து வாடும் அம்மா …

Read More »

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் தாயார் மறைவுக்கு மனிதநேய மக்கள் கட்சி இரங்கல்

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் தாயார் தவசாயி அம்மாள் உடல்நலக் குறைவால் இன்று மரணித்தார் என்ற செய்தியறிந்து துயரம் அடைந்தேன்.. தவசாயி அம்மாள் அவர்களை இழந்து வாடும் முதலமைச்சர் பழனிச்சாமி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு மனிதநேய மக்கள் கட்சி சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். இப்படிக்கு எம் எச் ஜவாஹிருல்லா தலைவர்

Read More »

திருச்சி திருவானைக்கோவில் பள்ளிவாசல் இடிப்பு மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்

மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை திருச்சி – சென்னை நெடுஞ்சாலையில் ஶ்ரீரங்கம் பாலத்தின் கீழ்ப் பகுதியில் திருவானைக்கோவில் அமைந்துள்ள ஹஸ்ரத் சையத் மஸ்தான் அவுலியா தர்கா பள்ளிவாசலின் முன்பகுதியை இன்று காலை நெடுஞ்சாலைத் துறையினர் இடித்துள்ள அராஜகத்தை வன்மையாகக் கண்டிக்கிறேன். பள்ளிவாசல் தரப்பில் பள்ளிவாசலை இடிக்கக் கூடாது என்று உரிய நீதிமன்ற தடை ஆணைகளைப் பெற்றிருந்த நிலையிலும் வருவாய்த்துறை மற்றும் நெடுஞ்சாலைத் …

Read More »

ஆதிவாசி மக்களின் உரிமைகளுக்காகப் பாடுபட்ட பாதிரியார் ஸ்டேன் சாமி கைது அராஜகத்தின் உச்சம் – பேரா.ஜவாஹிருல்லா

ஆதிவாசி மக்களுக்காக தம் வாழ்நாளை அர்ப்பணித்துக் கொண்ட மனித உரிமை போராளி 83 வயதுடைய பாதிரியார் ஸ்டேன் சாமி அவர்களை பீமா கோரகான் வழக்குடன் தொடர்புப்படுத்தி தேசீய புலனாய்வு முகமை கைது செய்திருப்பதை வன்மையாக கண்டிக்கிறேன். பீமா கோராகானில் கடந்த 2018 ஜனவரி 1ம் தேதி நடைபெற்ற நிகழ்வுகள் தொடர்பாக நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், இலக்கியவாதிகள் எனப் பொய் குற்றம் சுமத்தி …

Read More »

இந்திய தொல்லியல் ஆய்வகத்தின் முதுநிலை பட்டயப்படிப்பில் செம்மொழி தமிழ் புறக்கணிப்பு! மமக கண்டனம்!!

மத்திய அரசின் தொல்லியல் துறையின் சார்பில், உத்திரப்பிரதேசத்தல் இயங்கிவரும் பண்டிட் தீன்தயாள் உபாத்தியாயா தொல்லியல் நிறுவனத்தில் தொல்லியல் துறை சார்ந்த இரண்டு ஆண்டு முதுகலைப் பட்டயப் படிப்புக்கு விண்ணப்பிக்கக் கோரி மத்திய அரசு விளம்பரம் செய்து உள்ளது. இந்த விளம்பரத்தில் தகுதிப் பட்டியலில் இடம்பெற்றுள்ள செம்மொழிகளில் சம்ஸ்கிருதம், பாலி, பிராகிருதம், அரபு அல்லது பாரசீகம் மற்றும் மண்ணியல் ஆகிய துறைகளில் எம்.ஏ முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம் எனக் குறிப்பிடப்பட்டு செம்மொழி தமிழ் …

Read More »

இந்திய தொல்லியல் ஆய்வகத்தின் முதுநிலை பட்டயப்படிப்பில் செம்மொழி தமிழ் புறக்கணிப்பு! மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்!!

மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை மத்திய அரசின் தொல்லியல் துறையின் சார்பில், உத்திரப்பிரதேசத்தல் இயங்கிவரும் பண்டிட் தீன்தயாள் உபாத்தியாயா தொல்லியல் நிறுவனத்தில் தொல்லியல் துறை சார்ந்த இரண்டு ஆண்டு முதுகலைப் பட்டயப் படிப்புக்கு விண்ணப்பிக்கக் கோரி மத்திய அரசு விளம்பரம் செய்து உள்ளது. இந்த விளம்பரத்தில் தகுதிப் பட்டியலில் இடம்பெற்றுள்ள செம்மொழிகளில் சம்ஸ்கிருதம், பாலி, பிராகிருதம், அரபு அல்லது பாரசீகம் மற்றும் மண்ணியல் ஆகிய …

Read More »

வெளிநாடுகளிலிருந்து தமிழகம் திரும்பும் தமிழர்கள் அவசியம் கொரோனா பரிசோதனை முடிவை எடுத்து வர வேண்டும் என்ற உத்தரவை திரும்பப் பெற வேண்டும் – பேரா.ஜவாஹிருல்லா

வெளிநாடுகளிலிருந்து தமிழகம் திரும்பும் தமிழர்கள் அவசியம் கொரோனா பரிசோதனை முடிவை எடுத்து வர வேண்டும் என்ற உத்தரவை திரும்பப் பெறக் கோரி தமிழக முதலமைச்சருக்கு மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேரா.எம்.எச். ஜவாஹிருல்லா கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில், “வெளிநாடுகளிலிருந்து, வந்தேபாரத் திட்டத்தின் மூலம் தமிழ்நாட்டிற்குத் திரும்பி வரும் பயணிகள் கட்டாயம் கொரோனா பரிசோதனை (Covid Negative test) எடுத்து வரவேண்டும் என்று தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது. இந்த ஆணையின் …

Read More »

காந்தியடிகளின் லட்சியத்தில் பிரதமர் மோடிக்கு உண்மையில் பற்று இருந்தால் ஆதித்யநாத்தை வன்கொடுமை சட்டத்தில் கைது செய்ய வேண்டும் ராகுல் காந்தி மீதான தாக்குதல் பாஜக ஆளும் உபியில் காட்டாச்சி நடப்பதற்கு எடுத்துக் காட்டு மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை

பாஜக ஆட்சி செய்யும் உத்தரபிரதசேத்தில் உள்ள ஹர்தாஸ் மாவட்டத்தில் 19வயது தலித் இளம் பெண் பாலியல் வன்கொடுமைக்கு இலக்காகி அவரது முதுகுதண்டு உடைக்கப்பட்டு நாக்கு அறுக்கப்பட்டு குற்றுயிரும் குலைவுயிருமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் உயிரிழந்த நிகழ்வு மிகப் பெரும் பேரதிர்ச்சியை அளித்தது. வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவது போல் மரணமடைந்த அந்த பெண்ணின் சடலத்தை அவரது வீட்டிற்கு எடுத்து செல்ல அனுமதிக்காமல் அவரது குடும்பத்தினரையும் பங்கு கொள்ள தடை செய்த …

Read More »