Breaking News

அறிவிப்புகள்

தமுமுகவால் அறிவிக்கப்படும் அறிவிப்புகள்

தமிழ் முழக்கம் சாகுல் ஹமீது மரணம்: மனிதநேய மக்கள் கட்சி இரங்கல் மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை

நாம் தமிழர் கட்சியின் முக்கிய தலைமை நிர்வாகி தமிழ் முழக்கம் சாகுல் ஹமீது அவர்கள் இன்று மரணித்த செய்தி கடும் துயரத்தை அளிக்கின்றது. 25 ஆண்டுகளுக்கும் மேலாகத் தமிழ்த் தேசிய போராட்டங்களிலும், தமிழர் பாதுகாப்பு அமைப்பு நடத்திய ஏராளமான போராட்டங்களிலும் பங்கேற்றுச் சிறை சென்றிருக்கிறார் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் அவர்களது நேர்காணல் குறித்து சென்னை ஆனந்த் திரையரங்கில் ஒரு திறனாய்வு கூட்டத்தை ஏற்பாடு செய்தற்காக பொடா சட்டத்தின் …

Read More »

பி.சி. எம்.பி.சி. மற்றும் சிறுபான்மையினர் விடுதிகளில் சமையலர் பணியாளரைத் தேர்வு செய்யும் குழுவில் எம்.பி.சி. மற்றும் சிறுபான்மையினர் நலத் துறை அலுலவர்களை இடம்பெறச் செய்ய வேண்டும்!

தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை விடுதிகளிலுள்ள சமையலர் காலிப் பணியிடங்களை நிரப்பத் தேர்வுக் குழு அமைத்து தமிழக அரசு ஆணையிட்டுள்ளது. இந்த தேர்வுக்குழுவில் பிற்படுத்தப்பட்டோர் நல இயக்குநர் அல்லது அவரால் நியமிக்கப்பட்ட பிரதிநிதியை தேர்வுக்குழு தலைவராகவும், பிற்படுத்தப்பட்டோர் நலத் துணை இயக்குநர் மற்றும் மாவட்ட பிற்படுத்தப்பட்ட அலுவலர்களை உறுப்பினர்களாகவும் இடம்பெறுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் ஆகிய சமூகங்களின் மேம்பாட்டிற்காக உள்ள …

Read More »

மாற்றுத் திறன் மாணவர்களின் 10ஆம் வகுப்புத் தேர்வை ரத்து செய்து, அனைவரும் தேர்ச்சி என அறிவிக்க வேண்டும்! : மமக கோரிக்கை

மாற்றுத் திறன் மாணவர்களின் 10ஆம் வகுப்புத் தேர்வை ரத்து செய்து, அனைவரும் தேர்ச்சி என அறிவிக்க வேண்டும்! மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: கோவிட் 19 நோய் பரவல் காரணமாக 10ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என தமிழக அரசு அறிவித்தது. ஆனால் 10ஆம் வகுப்பு தேர்வு எழுதவிருந்த மாற்றுத் திறன் மாணவர்கள் சுமார் ஆயிரம் பேர் இதில் சேர்க்கப்படாமல் விடுபட்டுள்ளனர். இதனால் …

Read More »

டெல்லி ஜவஹர்லால் பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர் தலைவர் உமர் காலித்தை உடனே விடுதலை செய்ய வேண்டும்! சீத்தாராம் யெச்சூரி உள்ளிட்டேர் மீது வழக்குப் பதிய முனைவது வன்மையாக கண்டிக்கத்தக்கது!!

மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: மத்திய அரசு புகுத்த நினைத்த குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக கடந்த ஜனவரி பிப்ரவரி மாதங்களில் நாடு முழுவதும் அமைதியான முறையில் போராட்டங்கள் நடைபெற்றன. பிப்ரவரி மாதத்தில் வடக்கு டெல்லியில் நடைபெற்ற போராட்டத்தை ஒடுக்கும் நோக்கில் திட்டமிட்டே மத்திய அரசு கலவரத்தை அரங்கேற்றியது. இந்த வன்முறைகளில் 54 பேர் கொல்லப்பட்டனர். 600 பேர் படுகாயமடைந்தனர். இவர்களில் 97 பேர் …

Read More »

கருத்துச் சுதந்திரத்தைச் சிதைக்கும் வகையில் நடிகர் சூர்யா மீது நடவடிக்கை கூடாது – சென்னை உயர்நீதிமன்றத்திற்கு மனிதநேய மக்கள் கட்சி வேண்டுகோள்!

மாணவ மணிகளின் உயிர்களை மாய்க்கும் மனு நீதி அடிப்படையிலான நீட் தேர்வு குறித்து அறிக்கை வெளியிட்ட நடிகர் சூர்யா மீது நீதிமன்றம் தானாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைகள் தொடரப்பட வேண்டும் என்ற உயர்நீதிமன்றத்தின் மாண்புமிகு நீதியரசர் ஒருவர் தலைமை நீதியரசருக்கு கடிதம் எழுதியிருப்பது அதிர்ச்சி அளிக்கின்றது. கொரோனா காலத்தில் நீதிமன்ற நடவடிக்கைகள் காணொலியில் நடைபெற்று வரும் சூழலில் நீட் தேர்வை மாணவர்கள் அச்சமின்றி தேர்வு எழுத நீதியரசர்கள் உத்தரவிட்டுள்ளது …

Read More »

மனித உரிமைகளுக்காகவும் சமூக நல்லிணக்கத்திற்காகவும் சளைக்காமல் பாடுபட்ட போராளி சுவாமி அக்னிவேஷ் – பேராசிரியர் ஜவாஹிருல்லா இரங்கல்

சமூக செயற்பாட்டாளர், கொத்தடிமைக்கு எதிரான போராளி, சமூக நல்லிணக்கத்தை நிலைநாட்டப் பாடுபட்ட தியாகி சுவாமி அக்னிவேஷ் அவர்கள் மரணித்த செய்தி மிகுந்த மனவேதனையை அளிக்கின்றது. நிர்வாக மேலாண்மை பட்டம் பெற்ற அவர் கல்லூரி ஆசிரியர் பதவியைத் துறந்து அரை நூற்றாண்டுகளுக்கு மேலாக மனித உரிமைகளுக்காகத் தனது இறுதி மூச்சு வரை சளைக்காமல் போராடிய போராளியாக விளங்கினார். அரியானா மாநிலத்தில் நிலவிய கொத்தடிமை முறையை எதிர்த்து களம் கண்ட சுவாமி அக்னிவேஷ் …

Read More »

குஜராத்தில் மூடப்படக்கூடிய அபாயச் சூழலில் உள்ள தமிழ்ப்பள்ளிகளைத் தொடர்ந்து செயல்பட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்

மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை நாடு விடுதலை அடைவதற்கு முன்பு தமிழகத்திலிருந்து தமிழர்கள் நெசவுத் தொழில் உட்பட்ட பல்வேறு காரணங்களுக்காக குஜராத்தின் தொழில் நகரமான அகமதாபாத்திற்கு இடம் பெயர்ந்தனர். .பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த தொகுதியான மணிநகரில் ஏராளமான தமிழர்கள் வசித்து வருகின்றனர். அங்கு அவர்களின் குழந்தைகளுக்காக தமிழ்வழிக் கல்வி பயில தொடக்கப் பள்ளிகள் தொடங்கப்பட்டன. பின்பு அகமதாபாத் தமிழர் நலக் …

Read More »

பேரறிஞர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு 10 ஆண்டுகளுக்கு மேலான வாழ்நாள் சிறைவாசிகள் மற்றும் 7 தமிழர்களை விடுதலை செய்யக் கோரி மமக சார்பில் ஆர்ப்பாட்டம்!

பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு தமிழக சிறைகளில் 10ஆண்டுகளுக்கு மேலாக தண்டனை அனுபவித்து வரும் முஸ்லிம் சிறைவாசிகள் உட்பட அனைத்து வாழ்நாள் சிறைவாசிகள் மற்றும் 7 தமிழர்களையும் விடுதலை செய்யக் கோரி நாளை 8.9.2020 அன்று தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட தலைநகரங்கள், நகரங்கள், பேரூர்கள் மற்றும் சிற்றூர்களில் கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்’ளது. . கடந்த 2017-ம் ஆண்டு டிசம்பர் 31 அன்று திண்டுக்கல்லில் நடைபெற்ற எம்.ஜி.ஆர் …

Read More »

தமுமுக வெள்ளிவிழா மாநாட்டு தீர்மானங்கள்

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் 25ம் ஆண்டு நிறைவை முன்னிட்டு வெள்ளிவிழா மாநாடு இணையம் வழியாகச் செப்டம்பர் 6ம் தேதி நடைபெற்றது. தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா தலைமையில் இரு அமர்வுகாக இந்த மாநாடு நடைபெற்றது. காலையில் தலைமை நிர்வாக குழு உறுப்பினர் குணங்குடி ஆர் எம் அனிபா தலைமையில் நடைபெற்ற அறிவரங்கத்தில் சட்ட வல்லுனர்கள், கல்வியாளர்கள். மனித உரிமை செயற்பாட்டாளர்கள் மற்றும் …

Read More »

தமுமுக வெள்ளி விழா மாநாடு! திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் உட்பட தலைவர்கள் பங்கேற்பு!!

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் வெள்ளி விழா மாநாடு! திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் உட்பட தலைவர்கள் பங்கேற்பு!! தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் பேராசிரியர் ஜெ. ஹாஜா கனி வெளியிடும் அறிக்கை: 1995ம் ஆண்டு ஆகஸ்ட் 25ல் தொடங்கப்பட்டு 2020ஆம் ஆண்டில் வெள்ளிவிழா காணும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமை காக்கும் பயணத்தில் கால் நூற்றாண்டை நிறைவு செய்கிறது என்பதைப் பெரு …

Read More »