Breaking News

சமுதாய அரங்கம்

சமுதாய அரங்கம்

பள்ளிகளின் மெத்தனத்தால் பறிபோகவிருக்கும் மாணவர்களின் கல்வி உதவித் தொகை! தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்!!

பள்ளிகளின் மெத்தனத்தால் பறிபோகவிருக்கும் மாணவர்களின் கல்வி உதவித் தொகை!  தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்!! மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேரா. எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: தேசிய அளவிலான தகுதி -வழியுதவி கல்வி உதவித் தொகைத் திட்டம் (National Merit Cum Means Scholarship) 2008 மே மாதம் தொடங்கப்பட்டது. நலிந்த பிரிவைச் சேர்ந்த திறமையான மாணவர்கள் எட்டாம் வகுப்புக்குப் பிறகு படிப்பை நிறுத்திவிடக் கூடாது என்பதற்காகக்  கொண்டு …

Read More »

ஒரே நாடு, ஒரே குடும்ப அட்டை திட்டத்தில் இணைய தமிழக அரசு ஒப்புதல்! மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்!!

ஒரே நாடு, ஒரே குடும்ப அட்டை திட்டத்தில் இணைய தமிழக அரசு ஒப்புதல்! மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்!!   மனிதநேய மக்கள் கட்சி தலைவர்  பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை திட்டத்தை நாடு முழுவதும், அமல்படுத்திட நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அரசு அறிவித்திருந்தது. இந்தியாவில் வழங்கப்படும் பொது விநியோக திட்டத்தைப் பல ஆண்டுகளாக எதிர்த்து வரும் உலக வர்த்தக நிறுவனத்தைத் …

Read More »

சிறுமைப்படுத்தப்படும் வரலாற்றாசிரியர் ரொமிலா தாப்பர்! மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்!!

சிறுமைப்படுத்தப்படும் வரலாற்றாசிரியர்  ரொமிலா தாப்பர்! மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்!! மனிதநேய மக்கள் கட்சி தலைவர்  பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: வரலாற்று ஆய்வாளரும், டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் சிறப்பு அந்தஸ்து பேராசிரியருமான ரொமிலா தாப்பர் தனது தன்விவரக்குறிப்பு ஆவணத்தை(Curriculum vitae) பல்கலைக்கழக நிர்வாகம் பரிசீலனைக்காகக் கேட்டுள்ளது கண்டனத்திற்குரியது. 87 வயதான ரொமிலா தாப்பர் அவர்கள் பண்டைக்கால வரலாறுகளை  ஆய்வு செய்து அதில் உள்ள உண்மைகளைப் புத்தகமாக்கி வருபவர். …

Read More »

உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் தங்கம் வென்ற இளவேனில் வளரிவான்! மனிதநேய மக்கள் கட்சி வாழ்த்து!!

உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் தங்கம் வென்ற இளவேனில் வளரிவான்! மனிதநேய மக்கள் கட்சி வாழ்த்து!! மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் வாழ்த்து செய்தி: உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் கடலு£ரைச் சேர்ந்த தமிழக வீராங்கனை இளவேனில் வளரிவான் தங்கம் வென்றுள்ள செய்தி மகிழ்ச்சி அளிக்கிறது. பிரேசிலில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் 251.7 புள்ளிகள் எடுத்து சாதனைப் படைத்துள்ள இளவேனில் வளரிவானுக்கு …

Read More »

புழல் சிறைவாசிகள் மீது தாக்குதல் நடத்திவிட்டு சிறைவாசிகள் பொய் குற்றச்சாட்டை சுமத்தும் சிறைத் துறை! மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்!!

புழல் சிறைவாசிகள் மீது தாக்குதல் நடத்திவிட்டு  சிறைவாசிகள் பொய் குற்றச்சாட்டை சுமத்தும் சிறைத் துறை! மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்!! மனிதநேய மக்கள் கட்சி தலைவர்  பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: புழல் சிறையில் தண்டனைக் கைதிகள், விசாரணை கைதி என ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறைவாசிகள் உள்ள நிலையில், சிறைவாசிகள் குறைதீர்ப்பு கூட்டத்திற்கு ஏன் வரவில்லை எனக் கூறி முஸ்லிம் சிறைவாசிகள் பன்னா இஸ்மாயில், பிலால் மாலிக் ஆகியோர் சிறைக் …

Read More »

சூழலியல் செயற்பாட்டாளர் பியூஸ் மானுஷ் மீது தாக்குதல்! மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்!!

சூழலியல் செயற்பாட்டாளர் பியூஸ் மானுஷ் மீது தாக்குதல்! மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்!! மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த இயற்கை ஆர்வலரும், சூழலியல் செயற்பட்டாளருமான பியூஸ் மானுஷ் மீது பாஜகவினர் தாக்குதல் நடத்தியுள்ளது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. நாட்டின் உள்ள பொருளாதார மந்தநிலை குறித்து அறிய சேலத்திலுள்ள பா.ஜ.க அலுவலகத்துக்குச் சென்ற சூழலியல் செயற்பட்டாளர் பியூஸ் மானுஷை காவல்துறையினர் முன்னிலையிலேயே தாக்குதல் …

Read More »

தமுமுக தலைமையகத்திற்கு ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் அவர்கள் வருகை

தமுமுக தலைமையகத்திற்கு ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் அவர்கள் வருகை ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் அவர்கள் இன்று 24.08.19 தமுமுக-மமக தலைமையகத்திற்கு வருகை புரிந்து அவரது மகள் திருமணத்திற்கு அழைப்பிதழை தமுமுக – மமக தலைவர் பேரா.M.H.ஜவாஹிருல்லா அவர்களிடம் அளித்தார். மமக பொதுச் செயலாளர் ப அப்துல் சமது, தமுமுக துணைத் தலைவர் பிஎஸ் ஹமீது, தலைமை …

Read More »

காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கைது! மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்!!

காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கைது! மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்!! மனிதநேய மக்கள் கட்சி தலைவர்  பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் நிதி அமைச்சருமான அறிவாற்றல் மிக்க தமிழர் ப. சிதம்பரம் அவர்களைப் பழிவாங்கும் நோக்கோடு கைது செய்திருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன். மலேகான், ஹைதராபாத், சம்ஜூதா ரயில் என நாடு முழுவதும் நடைபெற்ற குண்டுவெடிப்புகளுக்குக் காரணமானவர்களைக் கைது செய்து முதன் முதலாகக் காவி …

Read More »

அரசமைப்பு சட்டம் வழங்கியுள்ள உரிமைகளைப் பாதுகாக்க உறுதி எடுத்துக்கொள்வோம்!

அரசமைப்பு சட்டம் வழங்கியுள்ள உரிமைகளைப் பாதுகாக்க உறுதி எடுத்துக்கொள்வோம்! மனிதநேய மக்கள் கட்சி தலைவர்  பேரா.எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் சுதந்திர தின வாழ்த்துச் செய்தி: நாட்டின் 73வது விடுதலை திருநாளைக் கொண்டாடும் அனைவருக்கும் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தை எதிர்த்து வீரதீர போராட்டங்களை நடத்தி 1947ஆம் ஆண்டு இதே நாளில் நாமும் நமது நாடும் விடுதலைப் பெற்றது. ஆங்கிலேயர்களின் ஏகாதிபத்திய ஆட்சியின் …

Read More »

தியாகத் திருநாள் வாழ்த்துச் செய்தி

தியாகத் திருநாள் வாழ்த்துச் செய்தி தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை ஹஜ் பெருநாள் என்னும் தியாகத் திருநாள் (பக்ரீத்) நல்வாழ்த்துகளை அனைவருக்கும் தெரிவித்துக் கொள்வதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். மாபெரும் இறைத்தூதர்கள் இப்ராஹீம் மற்றும் அவர்களது புதல்வர் இஸ்மாயீல் ஆகியோரின் அளப்பரிய தியாகத்தை நினைவுக்கு கொள்ளும் வகையில் தியாகத் திருநாள் கொண்டாடப்படுகிறது. இதே தருணத்தில் உலகமெங்கிருந்தும் புனித மக்கா நகருக்குச் …

Read More »