குவைத் நாட்டின் இந்தியத் தூதர் டாக்டர் அதார்ஷ் ஸ்வைகா,சமூக விவகாரங்களுக்கான முதன்மை செயலாளர் திரு கமால் சிங் ராத்தோர் அவர்களை தமுமுக தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா அவர்கள் இன்று 23.02.23 சந்தித்தார்.தொழிலாளர் விவகாரங்களுக்கான தூதரக அலுவலர் ஆனந்த எஸ் ஆர் அய்யர் ஆகியோரும் இச்சந்திப்பின் போது உடனிருந்தனர். திருக்களாச்சேரியை சேர்ந்த சர்புதீன் என்ற வாலிபர் குவைத்தில் மர்மமாக மரணமடைந்தது குறித்து அவரது கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இது குறித்து உரிய …
Read More »ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: மமக பொதுச்செயலாளர் பிரச்சாரம்
ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் இ.வி.கே.எஸ் இளங்கோவன் அவர்களுக்கு கை சின்னத்தில் வாக்கு கேட்டு அன்னை சத்யா நகர் மற்றும் அக்ரஹாரம் பகுதியில் மனிதநேய மக்கள் கட்சி பொதுச்செயலாளர் ப.அப்துல் சமது MLA மற்றும் மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பின் மகேஷ் பொய்யாமொழி மாண்புமிகு பால்வளத்துறை அமைச்சர் S M நாசர் ஆகியோர் இணைந்து வாக்கு சேகரித்தனர்கள் …
Read More »டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் தமிழக மாணவர்கள் மீது தாக்குதல் வன்மையாக கண்டிக்கதக்கது
மனிதநேய மக்கள் கட்சியின் மாநில தலைவர் பேராசிரியர் எம். எச். ஜவாஹிருல்லா வெளியிடும் பத்திரிகை செய்தி. மும்பை ஐஐடியில் மர்ம மரணம் அடைந்த தலித் மாணவர் தர்ஷன் சொலான்கிக்கு நீதி கேட்டு இடதுசாரி மாணவர் அமைப்பினர் டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் நேற்று ஊர்வலம் நடத்தி இருக்கின்றனர்.சொலான்கி மரணத்துக்கு நிறுவன படுகொலையே காரணம் என்று மும்பை ஐஐடியில் செயல்பட்டு வரும் APPSC எனப்படும் அம்பேத்கர் பெரியார் பூலே படிப்பு வட்டம் …
Read More »மேனாள் அமைச்சரும் சிறந்த தமிழ் பற்றாளருமான தஞ்சை உபயதுல்லா மறைவுக்கு இரங்கல்!
மனிதநேய மக்கள் கட்சியின் மாநில தலைவர் பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா வெளியிடும் பத்திரிகை செய்தி: முன்னாள் அமைச்சரும், திமுக மாநில வர்த்தக அணித் தலைவரும், திமுக தலைமை செயற்குழு உறுப்பினருமான S.N.M.உபயதுல்லா உடல்நலக் குறைவால் இன்று நம்மை விட்டு பிரிந்தார் என்ற செய்தி அறிந்து வருந்தினேன். திராவிட கொள்கையில் பற்று கொண்ட இவர், திராவிட முன்னேற்றக் கழகத்தின் வர்த்தகர் அணி தலைவராக செயலாற்றி வருகிறார். தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை …
Read More »கிருஷ்ணகிரியில் IPP சார்பில் திருக்குர் ஆன் ஹதீஸ் அன்பளிப்பு..
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம் தமுமுகவின் மார்க்க பிரிவான இஸ்லாமிய பிரச்சார பேரவை (IPP) சார்பில் அனைத்து சமுதாய மக்களுக்கும் இஸ்லாத்தைப் பற்றியும் திருக்குர்ஆனைப் பற்றியும் தெரிந்து கொள்வதற்காக துண்டுப்பிரசுரம் மற்றும் திருமறை குர்ஆன் மாற்று மத நண்பர்களுக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டது.
Read More »அம்பத்தூர் பகுதியில் 300 க்கும் மேற்பட்ட மக்களுக்கு நலத்திட்ட உதவி
திருவள்ளுர் (கி) மாவட்டம் அம்பத்தூர் பகுதியில் மனிதநேய மக்கள் கட்சி 15 ஆம் ஆண்டு துவக்கவிழாவை முன்னிட்டு 10 க்கும் மேற்பட்ட இடங்களில் கட்சி கொடிகளை ஏற்றிவைத்து 300 க்கும் மேற்பட்ட மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா MLA அவர்கள் வழங்கினார்கள். இதில் மாநில அமைப்பு செயலாளர் வழக்கறிஞர் புழல்.ஷேக்முஹம்மதுஅலி , மாநில வழக்கறிஞர் அணி செயலாளர் முஜீபுர் ரஹ்மான் உள்ளிட்ட மாவட்ட …
Read More »கும்பகோணம் ஒன்றியத்தில் புதிய அங்காடி திறப்பு விழா
பாபநாசம் சட்டமன்ற தொகுதி கும்பகோணம் ஊராட்சி ஒன்றியம் திருவலஞ்சுழி ஊராட்சியில் பாபநாசம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி 2021-22 இன் கீழ் ரூ. 14.20 மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய ரேஷன் கடையை பாபநாசம் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் மனிதநேய மக்கள் கட்சியின் மாநில தலைவருமான பேராசிரியர் முனைவர் எம் எச் ஜவாஹிருல்லா அவர்கள் பொது மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்து விற்பனையை துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் …
Read More »ஹரியானாவில் இரண்டு முஸ்லிம் இளைஞர்கள் பஜ்ரங்தள் கும்பலால் எரித்துக் கொலை:
மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்! மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. வெளியிடும் கண்டன அறிக்கை: ராஜஸ்தான் மாநிலம் பரத்பூரைச் சேர்ந்த நசீர் (25), ஜுனைத் (35) என்ற இரண்டு முஸ்லிம் இளைஞர்கள் சமீபத்தில் காணாமல் போனதாக இளைஞர்களின் குடும்பத்தினர் காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தனர். பரத்பூர் காவல்துறையினர் சைபர் கிரைம் மூலம் தேடுதலில் ஈடுபட்ட நிலையில், ஹரியானா மாநிலம் பிவானி மாவட்டத்தில் காரில் எரிந்த நிலையில் 2 …
Read More »மாநில பேச்சுப்போட்டி பரிசளிப்பு விழா: தமுமுக- மமக தலைவர்கள் பங்கேற்பு
தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையம் மாவட்டங்கள் மற்றும் மாநில அளவில் நடத்திய அனைத்துக் கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டியின் பரிசளிப்புவிழா ஜூன் – 3 அன்று சென்னை குருநானக் கல்லூரியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் பங் கு கொண்டு வேற்றி பெற்றவர்களிற்கு பரிசுகளை வழங்கினார்.இந்நிகழ்ச்சியில் தமுமுக – மமக தலைவர் பேரா.ஜவாஹிருல்லா,சிறுபாண்மை நல வாரிய ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ்,சிறுபான்மை ஆணைய ஒருங்கினைப்பாளரும் தமுமுக பொதுச்செயலாளருமான ஜெ.ஹாஜாகனி, …
Read More »தமிழக மாணவர்களுக்கும் அரசின் கொள்கைமுடிவுக்கும் எதிராக ஆளுநா் செயல்படுவதை நிறுத்த வேண்டும்
– சமூகநீதி மாணவா் இயக்கம் (SMI) கடும் கண்டனம்..! திருவாரூா் மத்திய பல்கலைகழகத்தில் 27.5.2022 அன்று நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்ட தமிழ்நாடு ஆளுநா் திரு. ஆா்.என்.ரவி, சமூகநீதிக்கெதிரான புதிய கல்வி கொள்கையை ஆதரித்துப் பேசியதும் அதை நிறைவேற்ற துணைவேந்தர்களுக்கு அறிவுறுத்தியதும் வரம்பு மீறிய செயல் ஆகும். சமூகநீதி கொள்கையில் உறுதியாக உள்ள தமிழ்நாடு அரசையும் அதற்கு உறுதுணையான தமிழக மக்களின் உணா்வுகளையும் புண்படுத்துவதையும் அவமதிப்பதையும் இனியும் ஏற்க முடியாது. …
Read More »