Breaking News

மார்க்க வளாகம்

சென்னையில் பெருநாள் தொழுகை

உலகின் பல்வேறு பகுதிகளில் ஒரே தினத்தில் (வெள்ளிக்கிழமை செப்டம்பர் 10) பெருநாள் கொண்டாடப்படுவது பெரும் மகிழ்ச்சியை மக்களுக்கு ஏற்படுத்தியது. இந்தியாவில் தமிழ்நாடு, புதுவை, கேரளா, மத்திய பிரதேசம் மற்றும் ஜம்மு காஷ்மீரில் நேற்று பெருநாள் கொண்டாடப்பட்டது. தமிழகத்தில் தூத்துக்குடி, விருத்தாசலம், திண்டுக்கல் மற்றும் பள்ளிக்கரணை ஆகிய ஊர்களில் வியாழன் மாலை பிறை தென்பட்டது. இதைத் தொடர்ந்து வெள்ளிக்கிழமை ஈகைப் பெருநாள் என்று தமிழக அரசின் தலைமை காஜி அறிவித்தார்.

Read More »

தோப்புத்துறையில் கட்டப்பட்டிருக்கும் புதிய ஜாமியா பள்ளிவாசலுக்கு தமுமுக தலைவர் வாழ்த்துரை

பேரன்புக்குரிய தோப்புத்துறை சகோதர சகோதரிகளுக்கு, அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்…) தோப்புத்துறையில் கட்டப்பட்டிருக்கும் புதிய ஜாமியா பள்ளிவாசலின் திறப்பு விழா செய்தியறிந்து  பெரிதும் மகிழ்கிறேன்.

Read More »

திருமணம்

உங்களில் வாழ்க்கைத் துணையின்றி இருப்பவர்களுக்கும், மேலும் உங்களுடைய ஆண்&பெண் அடிமைகளில் நல்லவர்களுக்கும் திருமணம் செய்து வையுங்கள். அவர்கள் வறியவர்களாயிருந்தால் அல்லாஹ் தன்னுடைய அருளால் அவர்களை செல்வந்தர்களாக்குவான். அல்லாஹ் மிகவும் விசாலமானவனாகவும் நன்கறிந்தவனாகவும் இருக்கின்றான். -அல்குர்ஆன் 24:32 அவர்கள் உங்களுக்கு ஆடையாகவும், நீங்கள் அவர்களுக்கு ஆடையாகவும் இருக்கிறீர்கள்.      – அல்குர்ஆன் 2:187 உங்கள் தாய்மார்களும், உங்கள் புதல்வியரும், உங்கள் சகோதரிகளும், உங்கள் தந்தையின் சகோதரிகளும், உங்கள் தாயின் சகோதரிகளும், (உங்கள்) சகோதரனுடைய …

Read More »

முதல் ஆலயம் (காஃபா)

(இவ்வுலகில், அல்லாஹ்வை வணங்குவதற்கென) மனிதர்களுக்கு வைக்கப்பட்ட முதல் வீடு நிச்சயமாக பக்கா (மக்கா)வில் இருப்பது தான்; பரக்கத்துச் செய்யப்பட்டதாக (அதில் நன்மைகள் பன்மடங்காக்கப்பட்டதாக)வும், அகிலத்தார்க்கு நேர் வழியாகவும் இருக்கின்றது. அதில் தெளிவான அத்தாட்சிகளும், இப்றாஹீம் (தொழுகைக்காக) நின்ற இட(மான ‘மகாம இப்றாஹீ’)மும் இருக்கின்றது; மேலும் எவர் அதில் நுழைகின்றாரோ அவர், (அபயம் பெற்று) அச்சமற்றவராகி விடுகின்றார்; (ஆகவே) எவர்கள் அங்கு யாத்திரை செல்ல சக்தியுடையவர்களாக இருக்கின்றார்களோ, அத்த கைய மனிதர்கள் …

Read More »

நிரந்தர வாழ்க்கை

(மனிதர்களே!) நீங்கள் அறிந்து கொள்ளுங்கள்; நிச்சயமாக இவ்வுலக வாழ்க்கையெல்லாம் விளையட்டும், வீணும், அலங்காரமும், (அது) உங்களுக்கிடையில் பெருமையடித்துக் கொள்வதும், செல்வங்களிலும், பிள்ளைகளிலும் (ஒருவருக்கொருவர்) அதிகப்படுத்திக் கொள்வதும்தான்; (இந்நிலை) ஒரு மழையைப் போன்றாகும். (அதன்மூலம் முளைத்த) பயிர்கள் நன்கு வளர்ந்து விவசாயிகளை அதிசயத்தில் ஆழ்த்தியது; பின்னர், அது காய்ந்து விடுகிறது; (அப்போது) அதை மஞ்சளாகி விடுவதை நீர் காண்கின்றீர்; பின்னர், அது சருகுகளாகி விடுகின்றது (இவ்வுலக வாழ்க்கையும் அவ்வாறே இருக்கிறது). மறுமையிலோ, …

Read More »

தொழுகை

மக்கள் உரிமை 06.26 இதழில் வெளிவந்த இறைமொழியும் தூதர் வழியும் நிச்சயமாக தொழுகை, (அதை நிறைவேற்றுபவரை) மானக்கேடான செயலிலிருந்தும், (மார்க்கத்தில்) மறுக்கப்பட்டவற்றிலிருந்தும் தடுக்கும். நிச்சயமாக, (தொழுகையின் மூலம்) அல்லாஹ்வை நினைவுகூறுவது (எல்லாவற்றையும் விட) மிகவும் பெரிதாகும். நீங்கள் செய்பவைகளை அல்லாஹ் நன்கு அறிகிறான். அல்குர்ஆன் 29:45 ‘நாளை (மறுமையில்) அல்லாஹ்வை முஸ்லிமாக ஒருவன் சந்திக்க விரும்பினால் பாங்கு கூறி அழைக்கப்பட்டதும், ஐந்து நேரத் தொழுகைகளைப் பேணட்டும். நிச்சயமாக அல்லாஹ், உங்களின் …

Read More »

ஷார்ஜா-வில் நடைபெற்ற இஸ்லாமிய அறிவரங்கம்

நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை முறையிலிருந்து கற்றுக் கொள்ள வேண்டிய படிப்பினைகள் மற்றும் பின்பற்ற வேண்டிய அவசியங்களை வலியுறுத்தும் இஸ்லாமிய அறிவரங்கம் நிகழ்ச்சி அக்டோபர் 23, 2009 வெள்ளிக்கிழமை அன்று ஷார்ஜா ரோலா சதுக்கத்தில் அமைந்துள்ள அல் நஜஃப் ரெஸ்ட்டாரண்ட் அரங்கத்தில் நடைபெற்றது. ஷார்ஜா மண்டல முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சார்பாக நடைபெற்ற இந்நிகழ்ச்சியை மண்டலப் பொருளாளர் அபுல் ஹசன் துவக்கிவைத்தார்.

Read More »