Breaking News

மார்க்க வளாகம்

அல் அய்ன் மண்டல தமுமுகவின் செயற்குழுக் கூட்டம்

அல் அய்ன் மண்டல தமுமுகவின் செயற்குழுக் கூட்டம் 29-06-2012 வெள்ளிக்கிழமை மக்ரிப் தொழுகைக்குப் பின்னர், செனையா வில் சகோதரர் கீழை சிராஜ் அவர்களின் இல்லத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மண்டல தமுமுக துணை செயலாளர் சகோதரர் வடகால் எஸ். புர்ஹானுத்தீன் அவர்கள் தலைமை தாங்கினர்.

Read More »

இறை மொழியும்… தூதர் வழியும்… (பாவங்கள்)

“இமாம் ‘கைருல் மக்லூபி அலை ஹிம் வலழ்ழாலீன்’ என்று கூறும்போது நீங்கள் ஆமீன் கூறுங்கள்! ஏனெனில் ஒருவர் கூறும் ஆமின் வானவர்கள் கூறும் ஆமினுடன் ஒத்து அமையுமாயின் அவரின் முன்சென்ற பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன.” என இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அறிவித்தார்கள். அறிவிப்பாளர்: அபூ ஹுரைரா(ரலி), நூல்: புஹாரி(782)

Read More »

இறை மொழியும்… தூதர் வழியும்… (பரிந்துரை)

‘இறைத்தூதர் அவர்களே! மறுமை நாளில் தங்களின் பரிந்துரைக்குத் தகுதி படைத்த மனிதர் யார்?’ என்று நபி(ஸல்) அவர்களிடம் நான் கேட்டபோது, ‘‘அபூ ஹுரைராவே! என்னைப் பற்றிய செய்திகளின் மீது உமக்கிருக்கும் பேராவல் எனக்குத் தெரியும். எனவே, இச்செய்தியைப் பற்றியும் உமக்கு முன்னர் யாரும் என்னிடம் கேட்க மாட்டார்கள் என நான் நம்பியிருந்தேன்’ என்று நபி(ஸல்) அவர்கள் கூறிவிட்டு, ‘மறுமை நாளில் மக்கள் அனைவரிலும் என் பரிந்துரைக்குத் தகுதி பெற்றவர் யாரெனில், …

Read More »

இறை மொழியும்… தூதர் வழியும்…(சோதனை)

“நிச்சயமாக உங்கள் செல்வமும், உங்கள் குழந்தைகளும் (உங்களுக்குச்) சோதனையாக இருக்கின்றன; நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் தான் மிகவும் உயர்ந்த நற்கூலி உண்டு” என்பதை நீங்கள் நன்கு அறிந்து கொள்ளுங்கள். இறைவேதம் குர்ஆன் 8:28

Read More »

உத்தன்கரில் பெண்களுக்கான மார்க்க பயான்

கிருஷ்ணகிரி மாவட்டம் உத்தன்கரில் பெண்களுக்கான மார்க்க  பயான் நடைபெற்றது. இதில் கோவை செய்யது, ஆரிப் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்கள்.

Read More »

அல் அய்ன் மண்டல தமுமுக சார்பில் மார்க்க விளக்கப் பொதுக் கூட்டம்

அல் அய்ன் மண்டல தமுமுக சார்பில் மார்க்க விளக்கப் பொதுக் கூட்டம் 01-06-2012 வெள்ளிக்கிழமை மக்ரிப் தொழுகைக்குப் பின் கத்தாரா மர்கசில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கத்தாரா பகுதி தலைவர் காட்டுமன்னார்குடி அஸ்கர் அலி தலைமை தாங்கினார். மாணவி தஞ்சை ஹீரியா சாதிக் அலி திருக்குர்ஆன் வசனங்களை ஓதி நிகழ்ச்சியை தொடக்கி வைத்தார்.

Read More »

இறைமொழியும்…தூதர் வழியும்… (பேராற்றலுடையவன்)

நிச்சயமாக வானங்களையும், பூமியையும் (அல்லாஹ்) படைத்திருப்பதிலும்; இரவும், பகலும் மாறி, மாறி வந்து கொண்டிருப்பதிலும்; மனிதர்களுக்குப் பயன் தருவதைக் கொண்டு கடலில் செல்லும் கப்பல்களிலும்; வானத்திலிருந்து அல்லாஹ் தண்ணீரை இறக்கி அதன் மூலமாக பூமியை இறந்த பின் அதை உயிர்ப்பிப்பதிலும்; அதன் மூலம் எல்லா விதமான பிராணிகளையும் பரவ விட்டிருப்பதிலும், காற்றுகளை மாறி, மாறி வீசச் செய்வதிலும்; வானத்திற்கும், பூமிக்குமிடையே கட்டுப்பட்டிருக்கும் மேகங்களிலும் – சிந்தித்துணரும் மக்களுக்கு (அல்லாஹ்வுடைய வல்லமையையும், …

Read More »

வரலாறும், முக்கியத்துவமும் – பைத்துல் மால்

முஸ்லிம் சமுதாயத்தில் இன்று பரவலாகப் பேசப்படுகின்ற ஒன்றாக ‘பைத்துல் மால்’ காணப்படு கின்றது. இஸ்லாமிய வரலாற்றில் முஸ்லிம் சமுதாயத்தின் நலனுக்காக உருவாக்கப்பட்ட ஒரு நிதி நிறுவனமே ‘‘பைதுல் மால்’’ ஆகும். ‘பைத்துல் மால்’ என்ற சொல் பிரயோகம் முதன்முதலில் முதலாம் கலீபா அபூபக்கர் (ரலி) அவர்களது காலத்திலேயே பயன்படுத்தப்பட்டிருப்பதை அறிய முடிகின்றது. ஆரம்பத்தில் மதீனாவில் உள்ள ‘ஸனஹ்’ என்ற இடத்தில் பைத்துல் மாலை நிறுவி பின்னர் அதை மதீனாவுக்குள் கொண்டு …

Read More »

இறை மொழியும்… தூதர் வழியும்… (சமாதிகளிலிருந்து வெளிப்படுதல்)

இன்னும், அவர்கள் கூறுகிறார்கள்: “நீங்கள் உண்மையாளர்களாக இருப்பின், (மறுமை பற்றிய) அந்த வாக்குறுதி எப்பொழுது வந்து சேரும்?” என்று. அவர்கள் ஒரே ஒரு பேரொலிக்காகக் காத்துக் கொண்டிருப்பதைத் தவிர வேறில்லை; அவர்கள் வழக்காடிக் கொண்டிருக்கும் நிலையிலேயே அது அவர்களைப் பிடித்துக் கொள்ளும்.

Read More »

இறை மொழியும்… தூதர் வழியும் (பகிரங்கமான வழிகேடு)

இது (குர்ஆன்) நாம் அருள் செய்த பாக்கியம் மிக்க புனிதமான உபதேசமாகும். இதனையா நீங்கள் புறக்கணிக்கிறீர்கள்? இன்னும், நாம் முன்னரே இப்ராஹீமுக்கு அவருக்குத் தகுந்த நேர்மையான வழியைத் திடமாக கொடுத்தோம் – அவரைப் பற்றி நாம் அறிந்திருந்தோம். (இப்ராஹீம்) அவர் தம் தந்தையிடமும், தம் சமூகத்தாரிடமும் “நீங்கள் வழிபடும் இந்த உருவங்கள் என்ன?” என்று கேட்ட போது: அவர்கள், “எங்கள் மூதாதையவர்கள் இவற்றை வணங்கிக் கொண்டிருந்ததை நாங்கள் கண்டோம் என்று …

Read More »