Breaking News

கல்வி உதவி-2009

2009 ஆம் ஆண்டில் தமிழகமெங்கும்
தமுமுகவினால் செய்யப்பட்ட கல்வி உதவிகளின் சிறு தொகுப்பு.

கல்வி கண் திறக்க உதவுங்கள்
நமது சமுதாயம் கல்வியில் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளது. இந்நிலையில் தமுமுகவிடம் கல்வி உதவி கேட்டு நாள்தோறும் வரும் விண்ணப்பங்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே உள்ளது. ஆகவே நம் சமுதாயத்தைச் சேர்ந்த ஏழை மாணவக் கண்மணிகளுக்கு தங்களின் கல்வி உதவிகளை வாரி வழங்கிடுவீர். கல்வி உதவி பற்றிய முழுவிபரம் பின்னர் இணையதளத்தில் முழுமையாக வெளியிடப்படும்.M.O/D.D./CHEQUE  மூலம் அனுப்புபவர்கள் TAMILNADU MUSLIM MUNNETRA KAZHAGAM TRUST என்ற பெயரில் அனுப்ப வேண்டிய முகவரி:TAMILNADU MUSLIM MUNNETRA KAZHAGAMHEAD QUARTERSNo.7, VADA MARAICOIR STREET,CHENNAI – 600 001.Ph: 2524 7824. 2523 3884Fax: 2522 3868குறிப்பு: வெளிநாட்டில் வசிக்கும் தமிழக சகோதரர்கள் தங்கள் நன்கொடைகளை NRI செக் மூலம் மட்டுமே அனுப்பவும். வருமான வரி சலுகை (80ஜி) பெற விரும்புவோர் தங்கள் நன்கொடைகளை TAMILNADU MUSLIM MUNNETRA KAZHAGAM TRUSTஎன்ற பெயரில் அனுப்பவும்.

பரமக்குடி மாணவணின் தந்தை தமுமுகவுக்கு நன்றி

மருத்துவக் கல்லூரியில் மீண்டும் இடம் கிடைத்தமைக்காக பரமக்குடி மாணவன் ஷேக் அலாவுதினின் தந்தையார் முகம்மது சதக்கத்துல்லாஹ் தமுமுகவிற்கு நன்றிக்கடிதம் அனுப்பியுள்ளார்  

Read More »

பாளையங்கோட்டையில் கல்வி உதவி

    நெல்லைமாட்டம் பாளையங் கோட்டை தமுமுக கிளையின் சார்பாக ஆண்டு தோறும் ஏழை எளிய மாணவ- மாணவிகளுக்கு இலவச நோட்டுப் புத்தகங்களை வழங்கி வருகிறது. அது போல் இவ்வாண்டு நடந்த நிகழ்ச்சியில் பாளை கிளைத் தலைவர் எஸ். மைதீன் தலைமையில் கல்வி உதவி வழங்கப்பட்டது.

Read More »

நெல்லிக்குப்பத்தில் கல்வி உதவி

    கடலூர் மாவட்டம் நெல்லிக் குப்பத்தில் நகர தமுமுக மற்றும் இஸ்லாமிய சேவை அமைப்பு இணைந்து இலவச நோட்டுப் புத்தகங்கள் வழங்கும் நிகழ்ச்சி 09.06.2008 அன்று நடைபெற்றது. இதில் ஏழை மாணவ மாணவிகள் 150 பேருக்கு இலவச நோட்டுக்கள் வழங்கப் பட்டன. இந்த நிகழ்ச்சிக்கு நகரத் தலைவர் அப்துல் ரஹீம் தலைமை தாங்கினார். இஸ்லாமிய சேவை அமைப்பின் பொறுப்பாளர் ஹாஜா நஜிமுத்தீன் மாணவர் களுக்கு நோட்டுப் புத்தகங்களை வழங்கினார். …

Read More »

கோட்டக்குப்பத்தில் பொதுக்கூட்டம் மற்றும் கல்வி உதவி

  விழுப்புரம் மாவட்டம் கோட்டக் குப்பம் நகர தமுமுக சார்பாக கடந்த 15-06-08 அன்று கல்வி விழிப்புணர்வு பொதுக்கூட்டம் மற்றும் கல்வி உதவி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இப்பொதுக்கூட்டத்திற்கு நகரத் தலைவர் ஜெ. சம்சுதீன் தலைமை தாங்கினார். முகம்மது எஹ்யா திருகுர்ஆன் விரிவுரை நிகழ்த்தினார். மாநிலச் செயலாளர்கள் காஞ்சி ஜுனைது, காஞ்சி அப்துஸ் ஸமது மாணவரணிப் பொருளாளர் மாயவரம் அமீன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். இந்த நிகழ்ச்சியில் 220 மாணவ, மாணவிகளுக்கு …

Read More »

வந்தவாசியில் கல்வி உதவி

    திருவண்ணாமலை மாவட்டம் வந்த வாசியில் ஏழை எளிய மாணவ – மாணவி யர்களுக்கு கல்வி உதவி வழங்கும் நிகழ்ச்சி கடந்த 15.06.08 அன்று நடைபெற்றது. இதில் 250 மாணவர்கள் பயனடைந்தனர். இந்த நிகழ்ச்சிக்கு நகரச் செயலாளர் நஜீர் அகமது தலைமை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பி னர் டி. அப்துல் ஹமீது சிறைப்புரையாற்றினார்.

Read More »

மண்டபத்தில் கல்வி உதவி

    இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் கிளையின் சார்பில் ரூ.30,000/- மதிப்பிலான கல்வி உதவி வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சி மூலமாக 100 மாணவ-மாணவியர்கள் பயனடைந்தனர். இந்நிகழ்ச்சிக்கு மாவட்டத் தலைவர் சலிமுல்லாஹ்கான் தலைமை தாங்கினார். கிளைத் தலைவர் சாகுல், செயலாளர் முஸ்தபா, பொருளாளர் காதர், துணைத் தலைவர் அப்பாஸ், துணைச் செயலாளர் முஹம்மது காசிம், அம்ஜத், மருத்துவ சேவை அணி செய லாளர் அஜ்மல்கான், மாணவ ரணிச் செயலாளர் பாரூக் அலி மற்றும் …

Read More »

நல்லகவுண்டன் பாளையத்தில் கல்வி உதவி

    தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம், நல்ல கவுண்டன் பாளையத்தின் கிளை சார்பாக அனைத்து சமுதாய ஏழை எளிய மாணவியருக்கு சீருடை, நோட்டுப் புத்தகம் மற்றும் கல்வி உதவி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கிளைத் தலைவர் என்.ஏ. ஹக்கீம் தலைமை வகித்தார். மாவட்ட மருத்துவ சேவை அணி சேவை அணி செயலா ளர் சம்சுதீன் வரவேற்புரை ஆற்றினார். நகர மற்றும் கிளை நிர்வாகிகள் முன் னிலை வகித்தனர். …

Read More »

சேத்துப்பட்டில் கல்வி உதவி

    திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டில் தமுமுக சார்பில் ஏழை எளிய மாணவ-மாணவிகளுக்கு இலவச நோட்டுப் புத்தகம், பேனா, பென்சில் போன்றவை வழங்கப்பட் டன. இந்த விழாவிற்கு மாவட்ட மருத்துவ சேவை அணி செயலாளர் இப்ராகிம் தலைமை தாங்கினார். நகர தலைவர் முகம்மது அஸ்ரப், நகரச் செயலளார் சபீர், நகரப் பொருளாளர் ஆதம், துணைச் செயலாளர் அக்தர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் மாவட் டத் தலைவர் அமானுல்லாஹ் கலந்து …

Read More »

காயல்பட்டினத்தில் கல்வி உதவி

  தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் கடந்த 14.06.08 அன்று ஏழை மாணவ மாணவியர்களுக்கு இலவச நோட்டுப்புத்தகங்கள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சிக்கு நகரத் தலைவர் எல். சாகுல் ஹமீது, எஸ்.கே. நகரச் செயலாளர் வாவு எம். புஹாரி, நகரப் பொருளாளர் சிம்சன் செய்யது உமர், மாவட்டத் துணைத் தலைவர் எம்.கே. ஜாஹீர் ஹுஸைன் ஆகியோர் நோட்டுப் புத்தகங்களை வழங்கினர்.

Read More »

அருப்புக்கோட்டையில் கல்வி உதவி

அருப்புக்கோட்டை நகர தமுமுகவின் சார்பாக 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரையிலான கல்வி பயிலும் மாணவ மாணவிகள் 321 பேர்களுக்குரூ. 15,000/- மதிப்பிலான கல்வி உதவி வழங்கப் பட்டது. மாநில துணைச் செயலாளர் மைதீன் சேட்கான் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட நிர்வாகிகள், நகர, வார்டு நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Read More »