Breaking News

மருத்துவ உதவி

தமுமுக ஆற்றும் மருத்துவ சேவைகளின் தொகுப்பு

தமுமுக சார்பில் புதுகை அரசு மருத்துவமனையில் தொடர் இரத்த தான முகாம்

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில் புதுகை அரசு மருத்துவமனையில் தொடர் இரத்த தான முகாம் 24/06/2012 முதல் 01/07/2012 வரை நடைபெறுகிறது.

Read More »

தெரு நாய் கடித்து இறந்த சிறுவன் நல்லடக்கம்

சென்னை அம்பத்தூரைச் சேர்ந்த மஸ்தான் என்பவரின் 5 வயது மகன் அஜீம், தெரு நாய் கடித்த காரணத்தால் சென்னை எழும்பூர் குழந்தை மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டு, சிகிச்சைப் பலனளிக்காமல் உயிரிழந்தான். சிறுவனின் சடலத்தை பெற்றோரிடம் ஒப்படைக்காமல், சடலத்தை எரிக்க மருத்துவர்கள் முற்பட்டனர். இத்தகவல் கிடைத்ததும் வடசென்னை மாவட்டம் எழும்பூர் பகுதி தமுமுக நிர்வாகிகள் மருத்துவர்களிடம் பேசி, சடலத்தை மீட்டு, நல்லடக்கம் செய்தனர்.

Read More »

குவைத் மண்டல தமுமுக – மமக மிஸ்ரிப் கிளை சார்பாக மாபெரும் இரத்ததான முகாம்

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் – மனிதநேய மக்கள் கட்சி, குவைத் மண்டலம் – மிஸ்ரிப் கிளை சார்பாக மாபெரும் இரத்ததான முகாம் இறைவனின் கிருபையால் 18,05,2012 அன்று வெள்ளிக் கிழமை ஜூம்மா தொழுகைக்குப் பிறகு குவைத் ஜப்ரியா இரத்த வங்கியில் வைத்து தமுமுக – மமக – மண்டல துணை தலைவர் வேலூர் சையது பாட்ஷா அவர்கள் தலைமையில் தனது இரத்தத்தை கொடுத்து இரத்த தானத்தை துவக்கி வைத்தார்,

Read More »

கயத்தார் தமுமுக மற்றும் திருநெல்வேலி அரசு மருத்துவமனை இணைந்து நடத்திய இரத்ததான முகாம்

கயத்தார் தமுமுக மற்றும் திருநெல்வேலி அரசு மருத்துவமனை இணைந்து நடத்திய மாபெரும் இரத்ததான முகாம் மற்றும் இரத்தம் கண்டறியும் முகாம் 17-05-2012 அன்று காலை 10 மணிக்கு கயத்தார் முஸ்லிம் சமுதாய நலக்கூடத்தில் நடைபெற்றது.

Read More »

விருதுநகர் – அய்யணார் நகர் த.மு.மு.க கிளையின் சார்பாக இலவச கண் சிகிச்சை முகாம்

விருதுநகர் – அய்யணார் நகர் த.மு.மு.க கிளையின் சார்பாக 13-05-12 அன்று இலவச கண் சிகிச்சை முகாம் அரவிந்த் கண் மருத்துவமனையுடன் இணைந்து நடைபெற்றது.

Read More »

திருச்சியில் இரத்ததானம் மற்றும் இரத்தவகை கண்டறியும் முகாம்

த.மு.மு.க திருச்சி மாவட்டம் 61 வது வார்டு அண்ணாநகர் கிளை சார்பாக த.மு.மு.க மற்றும் ப்ரண்ட்ஸ் இரத்த வங்கி இணைந்து நடத்தும் இரத்ததானம் மற்றும் இரத்தவகை கண்டறியும் முகாம் 29.04.2012 ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணிமுதல் திருச்சி வடக்கு காட்டூரில் நடைபெற்றது.

Read More »

தேனி மாவட்டம் உப்புக்கோட்டையில் கண் சிகிச்சை முகாம்

தேனி மாவட்டம் உப்புக்கோட்டை தமுமுக கிளை, முகவை நல அறக்கட்டளை மற்றும் வாசன் கண் மருத்துவமனை சார்பில் 7/4/2012 அன்று கண் சிகிச்சை முகாம் மாவட்ட உலமா அணி செயலாளர் மௌலவி M.A. மன்சூர் அலி பைஜி அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

Read More »

கீழக்கரை நகர் தமுமுக சார்பில் இலவச கண் மருத்துவ முகாம்

கீழக்கரை நகர் தமுமுக மற்றும் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை, பார்வை இழப்பு தடுப்பு அமைப்பு ஆகியோர் சார்பில் இலவச கண் மருத்துவ முகாம் 22/04/2012 அன்று காலை 8 மணிக்கு தொடங்கி மதியம் 2 மணி வரை நடந்தது. கீழக்கரை மெடிக்கல் மிஷன் மருத்துவமனை, கிழக்குத்தெரு ஹைராத்துல் ஜலாலியா பள்ளி அருகில் தொடங்கியது. கீழக்கரை நகர் தமுமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Read More »