Breaking News

மற்ற சேவைகள்

பக்ரீத் பெருநாளை முன்னிட்டு சேலம் சூரமங்கலத்தில் தமுமுக வழங்கிய நலதிட்ட உதவிகள்

சேலம் கிழக்கு மாவட்டம் சூரமங்கலம் பகுதி மனிதநேய தொழிற்சங்கத்தின் சார்பாக பகுதி செயலாளர் ஜாபர் ஷெரீப் தலைமையில் பக்ரீத் பெருநாளை முன்னிட்டு நலதிட்ட உதவிகள் செய்யப்பட்டது. சேலம் அன்னை ஆதரவற்றோர் இல்லத்தில் உள்ள குழந்தைகள் 70 பேருக்கு பிரியாணி உணவு வழங்கப்பட்டது. மாவட்ட செயலாளர் பக்ஷீ என்கிற சைய து முஸ்தபா அவர்கள் துவக்கி வைத்த இந்த நிகழ்வில் தொழிற்சங்க அணி(MTS) பொருளாளர் ஆட்டோ அப்துல்லாஹ்,துணை செயலாளர் முஹம்மது ரபீக், …

Read More »

பெரம்பலூரில் வறுமையில் வாடிய குடும்பத்திற்கு தொழில் செய்ய கிரைண்டர் கொடுத்து உதவிய தமுமுக

பெரம்பலூர் மாவட்ட தமுமுக சார்பில் வறுமையில் வாடி வந்த குடும்பத்திற்கு இட்லி விற்பனை தொழில் செய்ய ஏதுவாக கிரைண்டர் வழங்கப்பட்டது. இதனை, பெரம்பலூர் மாவட்ட தமுமுக துணை செயலாளர் சகோ.ஹனிபா தலைமையில் நேரில் சென்று வழங்கினார்

Read More »

சவுதி அரேபியாவில் மார்சு மாதத்தில் இறந்த சகோதரர் கந்தன் உடலை தாயகம் அனுப்பிய ரியாத் மண்டல தமுமுகவின் மனிதநேய பணி

தமிழகத்தை சேர்ந்த பெரம்பலூர் மாவட்டம் வேடந்தட்டை தாலுகா அன்னமங்கலம் அருகில் அரசலூர் கிராமத்தை சேர்ந்த சென்னன் மகன் கந்தன்அவர்கள் KANOOZ contracting co.என்ற தனியார் கம்பெனியில் பணியாற்றி வந்துள்ளார். திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கடந்த மார்சு-23 ஆம்தேதி (23-03-2020) அன்று சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார். அவருக்கு மல்லிகா என்ற மனைவியும்,தீபா,அம்சவள்ளி என்ற 2 மகள்களும்,சங்கர்,கண்ணன் என்ற 2 மகன்களும் உள்ளார்கள். இச்செய்தியை அறிந்த உறவினர்கள் செய்வதறியாத …

Read More »

சுல்தான்பேட்டை வாய்க்கால் தெருவில் கடை தீ விபத்தில் சேதமடைந்த நபருக்கு நிதி உதவி வழங்கிய தமுமுக

புதுச்சேரி மாவட்டம், வில்லியனூர் தொகுதி, சுல்தான்பேட்டை வாய்க்கால் தெரு கார்னரில் பாஸித் புரவிஷனல் ஸ்டோர் என்ற பெயரில் மளிகை கடை நடத்தி வரும் ஜனாப் அஷ்ரப் பாய் அவர்களின் கடையானது கடந்த வாரம் எதிர்பாராத விதமாக ஏற்பட்ட தீ விபத்தில் முற்றிலும் சேதமடைந்து விட்டது.. இந்த நிலையில் அவர் பொருளாதாரத்தில் இருந்து மீண்டெழுந்து மீண்டும் கடையை புனரமைத்து நடத்துவதற்காக புதுச்சேரி மாவட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மற்றும் மனிதநேய …

Read More »

70 ஆதரவற்ற உடல்கள் அடக்கம்! ஓய்வில்லா பணியில் தமுமுக

24.06.2020 சென்னை பெரியமேட்டில் சாலையோரம் மரணம் அடைந்தவரின் உடலை எடுத்து பெரியமேடு காவல்துறை உதவியோடு சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையின் அமரர் இல்லத்தில் மத்திய சென்னை தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தினர் வைத்தனர். 25.6.2020 சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் இருந்த இரண்டு ஆதரவற்ற உடல்களை எடுத்து மூலகொத்தலம் சுடுகாட்டில் மத்திய சென்னை தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தினர் அடக்கம் செய்தனர்.

Read More »

கொரோனாவால் உயிரிழந்த முதியவரை அடக்கம் செய்த தமுமுக

கொரோனா தொற்றல் உயிரிழந்த திருச்சி ஆழ்வார்தோப்பு பகுதியைச் சார்ந்த 70 வயது முதியவரை திருச்சியில் தமுமுக-வினர் அடக்கம் செய்தனர் ‍

Read More »

அபுதாபியில் தமுமுக இரத்ததான முகாம்

அபுதாபியில் தமுமுக இரத்ததான முகாம் டிசம்பர் 22, 2017 அன்று அபுதாபி மண்டல தமுமுக சார்பில் கலிதியா இரத்த வங்கியில் இரத்ததான முகாம் நடைபெற்றது. இதில் 100க்கும் மேற்பட்ட சகோதரரர்கள் கலந்துக்கொண்டு இரத்ததானம் செய்தனர்.

Read More »

மதுரையில் தென் மாவட்டங்களுக்கான தர்பியா

மதுரையில் தென் மாவட்டங்களுக்கான தர்பியா தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக அறக்கட்டளைக்கு உட்பட்ட இஸ்லாமிய பிரச்சார பேரவை சார்பாக தென் மாவட்ட நிர்வாகிகளுக்கான தர்பியா பகுதி-1 டிசம்பர் 20,21 அன்று மதுரை மஸ்ஜித் தக்வாவில் நடைபெற்றது. தமுமுக தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லாஹ், மவ்லவி முபாரக் மதனீ, மவ்லவி முஜீபுர் ரஹ்மான் உமரீ உள்ளிட்டோர் ஆகியோர் வகுப்பு எடுத்தார்கள். இந்நிகழ்வில் மாநில நிர்வாகிகள், தென் மாவட்ட நிர்வாகிகள் கலந்துக்கொண்டனர். கலந்து கொண்ட …

Read More »

மேடவாக்கத்தில் தமுமுகவின் மழை நிவாரணப் பணி

மேடவாக்கத்தில் தமுமுகவின் மழை நிவாரணப் பணி காஞ்சிபுரம் மாவட்டம் மேடவாக்கத்தில், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு காஞ்சி வடக்கு தமுமுக சார்பில் இரவு உணவு வழங்கப்பட்டது. மேலும், மாவட்ட மமக செயலாளர் சகோ. சலீம் கான் தலைமையிலான மீட்புக்குழுவினர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர்.

Read More »

தமுமுகவின் 148வது ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு மற்றும் மாவட்ட மாநாடு

தமுமுகவின் 148வது ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு மற்றும் மாவட்ட மாநாடு தமுமுகவின் 148வது ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு மற்றும் சமூக நல்லிணக்க மாவட்ட மாநாடு நேற்று 29.10.2016 மாலை 6 மணிக்கு திருக்கோவிலூரில் மாவட்ட செயலாளர் பசல் முஹம்மது அவர்கள் தலைமையில் எழுச்சியுடன் நடைபெற்றது. இதில் தமுமுக தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா, தமுமுக மூத்த தலைவர் செ.ஹைதர் அலி, திருக்கோவில்லூர் சட்டமன்ற உறுப்பினர் க.பொன்முடி, மமக பொதுச் செயலாளர் அப்துல் சமது, தமுமுக பொதுச் …

Read More »