Breaking News

ஊடகங்களில்…

ஊடகங்களில்…

குஜராத் படுகொலை வழக்கு: 18 பேருக்கு ஆயுள் தண்டனை

குஜராத் முஸ்லிம் இனப்படுகொலையில் ஈடுபட்ட சங்பரிவாரக் குண்டர்கள் சட்டத்தின் முன்னால் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும் என நாடே தவமிருக்கிறது. சட்டம் என்ற இருட்டறையில் நடைபெறும் ஒருசில அசம்பாவிதங்கள் மற்றும் தாமதங்கள் பாதிக்கப்பட்ட மனங்களில் சலனங்களை ஏற்படுத்திய போதும், சில நம்பிக்கையூட்டும் தீர்ப்புகளும் உடைந்த மனங்களுக்கு உறுதி சேர்க்கின்றன. அவற்றில் ஒன்றுதான், ‘ஒடே’ என்ற கிராமத்தில் 23 முஸ்லிம்கள் உயிரோடு எரிக்கப்பட்ட சம்பவத்தில் வழங்கப்பட்டுள்ள தீர்ப்பு.

Read More »

ராமநாதபுரத்தில் மருத்துவ கல்லூரி அமைக்க வேண்டும்: ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. கோரிக்கை

சட்டசபையில் பொது பட்ஜெட் மீதான விவாதம் நடந்தது. இதில் மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. பேசியதாவது:- 2012-2013-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் இடம்பெற்றுள்ள மக்களுக்கு பயன் அளிக்கும் பல்வேறு திட்டங்களை வரவேற்கிறேன். பேரிடர் நேரிடும்போது விரைவாகவும், திறமையாகவும் செயல்படக்கூடிய மாநில பேரிடர் மீட்புப்படை ஏற்படுத்தப்படும் என்ற அறிவிப்பை மனிதநேய மக்கள் கட்சி வரவேற்கிறது. எந்த மாநிலத்திலும் இல்லாத நிலையில் முதன்முறையாக தமிழகத்தில் பேரிடர் மீட்புப் படை ஏற்படுத்த …

Read More »

எகிப்தில் புதிய அரசியல் சட்டம்

சர்வாதிகார ஹோஸ்னி முபாரக்கை விரட்டி புரட்சி வென்ற எகிப்து நாட்டில் புதிய அரசியல் சாசனச் சட்டம் தயாரிக்க 100பேர்களைக் கொண்ட குழுவைத் தேர்வு செய்யும் பணிக்காக எகிப்து நாடாளுமன்றம் முக்கியத்துவம் வாய்ந்த கூட்டத்தைக் கூட்டியுள்ளது. எகிப்தை முழுக்க முழுக்க ஜனநாயகப் பாதைக்கு கொண்டு வருவதே இந்தப் புதிய அரசியல் சாசன சட்டத்தின் நோக்கமாகும். அரசியல் சாசனக் குழுவில் 50 சதவீதம் பேர் நாடாளுமன்ற உறுப்பினர்களையும், 50 சதவீதம் தொழிற்சங்க பிரதிநிதிகளையும் …

Read More »

இஸ்லாமிய ஆட்சி வேண்டும்! துனிசியாவில் போராட்டம்

சர்வாதிகார ஆட்சியை அகற்ற புரட்சிவென்ற துனிசிய மக்கள், இஸ்லாமிய ஷரிஅத் முறையிலான ஆட்சி வேண்டும் என போராட்டத்தைத் துவக்கியுள்ளனர். பல்வேறு இஸ்லாமிய அமைப்புகளின் ஒருங்கிணைந்த கூட்டமைப்பான இஸ்லாமிய முன்னணி இதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளது. ‘இஸ்லாம் எங்களின் மார்க்கம்; குர்ஆன் எங்கள் வழிகாட்டி’ என பொறிக்கப்பட்டிருந்த பதாகைகளை போராட்டக்காரர்கள் உயர்த்திப் பிடித்தபடி முழக்கங்களை எழுப்பினர். இஸ்லாமிய ஷரிஅத் அடிப்படையில் அமையாத எந்த சட்டத்தையும் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.

Read More »

கூடங்குளம் அணு உலை மின்வெட்டு பிரச்சினையைத் தீர்க்காது! முன்னாள் கடற்படைத் தளபதி கூறுகிறார்

கூடங்குளம் அணு உலை செயல்படத் தொடங்கினாலும் கூட மின்வெட்டு பிரச்சினையை அது தீர்க்காது என இந்தியக் கடற்படையின் முன்னாள் தளபதி அட்மிரல் எல். ராமதாஸ் தெரிவித்துள்ளார். உலகையே உலுக்கிய ஜப்பானின் சுனாமி மற்றும் புகுஷிமா அணு உலை விபத்து நிகழ்ந்து ஓராண்டு ஆனதையொட்டி கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்டக் களமான இடிந்தகரை சென்றபின் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

Read More »

நெல்லையில் இருந்து இடிந்தகரைக்கு தடையை மீறி பேரணி முயற்சி – 665 பேர் கைது

திருநெல்வேலி: நெல்லையில் இருந்து இடிந்தகரை நோக்கி பேரணி செல்ல முயன்ற மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட தலைவர் பாரூக் உட்பட 665 பேர் கைது செய்யப்பட்டனர்.

Read More »