Breaking News

Recent

தமிழக மீனவர்களைத் தாக்கிய சிங்களப்படையினர்- மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்!

இராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் 600க்கும் அதிகமான படகுகளில் கச்சத்தீவு அருகில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு வந்த இலங்கையைச் சேர்ந்த சிங்களப் படையினர் தமிழக மீனவர்கள் மீது கற்களையும், கண்ணாடி பாட்டில்களையும் வீசித்  தாக்குதலை நடத்தியுள்ளனர். தமிழக மீனவர்கள் மீதான இலங்கை சிங்களப் படையினரின் இந்தத் தாக்குதலை மனிதநேய மக்கள் கட்சி கண்டிக்கின்றேன். தமிழக மீனவர்களைத் தாக்கியது மட்டுமில்லாமல் அவர்களது மீன்பிடி வலைகளையும் சேதப்படுத்தியுள்ளனர். இந்த தாக்குதலால் தமிழக மீனவர்கள் படுகாயமடைந்தும், …

Read More »

மக்கள் உரிமை (17-22) மின்னிதழ்

இந்த வாரம் மக்கள் உரிமையில்… பீஹார் தேர்தல்: பகடை காயாகும் பாஸ்வானின் வாரிசு பேராசிரியர் அருணன் எழுதும் ஆர்.எஸ்.எஸ்.எனும் மர்மதேசம் தொடரில் சம்பூகன் மண்டலை வீழ்த்த மீண்டும் ராமர்! நீட் 2020: சாதித்த முஸ்லிம் மாணவர்கள் சர் செய்யது அஹமது கான் : சில நினைவுகள் 1100 உடல்களுடன் சேர்த்து வெறுப்புணர்வையும் புதைப்பவர்கள் மேலும் பல அம்சங்களுடன் இந்த வார மக்கள் உரிமையை (17-22) படிக்க கீழ்கண்ட சுட்டியை கிளிக் …

Read More »

ஓபிசி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் இட ஒதுக்கீடு கிடையாது என தீர்ப்பு பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு எதிரான கட்சி பாஜக என்று மீண்டும் நிரூபணம்

தமிழகத்தில் மருத்துவ படிப்பில் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு 50 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கக் கோரும் வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்திருப்பதுடன் மத்திய அரசின் 27 விழுக்காடு இட ஒதுக்கீட்டையும் வழங்க உத்தரவிட முடியாது என்று உச்சநீதிமன்றம் இன்று அளித்துள்ள தீர்ப்பு பெரும் மனவேதனையை அளிக்கின்றது. சமூக நீதிக்கு எதிரான கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டு செயல்படும் பாஜகவின் அரசு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திரமே இந்த தீர்ப்பிற்கு வழிவகுத்துள்ளது இந்த …

Read More »

திருமாவளவன் மீது வழக்குப் பதிவு: மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்!

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் அருமை சகோதரர் தொல். திருமாவளவன் அவர்கள் பெண்கள் மற்றும் மதநம்பிக்கையை அவமதிக்கும் விதமாகக் கருத்துக்களைத் தெரிவித்துள்ளார் என அவர் மீது 6 பிரிவுகளில் காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. செப்டம்பர் 27 அன்று பல்வேறு நாட்டில் வாழும் பெரியாரிய இயக்கத்தினரால் ஒருங்கிணைக்கப்பட்ட இணையதள நிகழ்வில் உரையாற்றிய சகோதரர் தொல். திருமாவளவன் அவர்கள் பங்கேற்றுப் பேசும் போது பெரியார் ஏன் சனாதன தர்மத்தை எதிர்த்தார் என்பதற்கு …

Read More »

அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவப் படிப்பில் சேர 7.5 விழுக்காடு இடஒதுக்கீடு சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்காமல் உள்ள ஆளுநரின் செயல் சமூகநீதிக்கு எதிரானது – பேரா.ஜவாஹிருல்லா

தமிழ்நாட்டில் மருத்துவக் கல்லூரிகளின் மாணவர் சேர்க்கையில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கத் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் கடந்த செப்டம்பர் 15 அன்று சட்டம் நிறைவேற்றப்பட்டு இதுவரை அந்த சட்டத்திற்குத் தமிழக ஆளுநர் இன்னும் ஒப்புதல் அளிக்காமல் உள்ளது கண்டிக்கத்தக்கது. நீட் தேர்வு முடிவுகள் வெளிவந்த பின்பும் இந்த சட்டத்தின் ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது என்பது சமூகநீதிக்கு எதிரானதாகும். கடந்த ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களிலேயே …

Read More »

லண்டன் பல்கலைக்கழக தமிழ்த்துறை மீண்டும் செயல்படத் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்! மனிதநேய மக்கள் கட்சி கோரிக்கை!!

மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: 1916 ஆம் ஆண்டு லண்டன் பல்கலைக்கழகத்தில் தொடங்கப்பட்ட தமிழ்த்துறை கடந்த 20 ஆண்டுகளாக முடங்கியிருப்பது மிகுந்த மன வருத்தத்தை அளிக்கிறது. நிதிப் பற்றாக்குறை காரணமாக தமிழ்த்துறை செயல்படாமல் இருக்கும் செய்தியை இன்று தமிழ் இந்து நாளிதழ் விரிவாக வெளிவந்துள்ளது. இந்த பல்கலைக்கழக தமிழ்த்துறையின் நூலகத்தில் 150000 ஆவணங்கள் ஓலைச்சுவடிகள் மற்றும் நூல்கள் இருப்பதாகத் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. லண்டன் …

Read More »

சைதை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மா.சுப்ரமணியனின் மகனார் அன்பழகன் மரணம்! மனிதநேய மக்கள் கட்சி இரங்கல்!!

சைதை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மா.சுப்ரமணியனின் மகனார் அன்பழகன் மரணம்! மனிதநேய மக்கள் கட்சி இரங்கல்!! மனிதநேய மக்கள் கட்சி தலைவர்  பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் இரங்கல அறிக்கை: திராவிட முன்னேற்றக் கழகத்தின் சென்னை தெற்கு மாவட்டத்தின் செயலாளரும், சைதாப்பேட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான மா.சுப்ரமணியன் அவர்களின் இளைய மகன் அன்பழகன் கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை பலன் அளிக்காமல் உயிர் இழந்தார் என்ற செய்தியறிந்து துயரம் அடைந்தேன். மகன் …

Read More »

மக்கள் உரிமை (17-21) மின்னிதழ்

இந்த வாரம் மக்கள் உரிமையில்… TRP ரேட்டிங்: சீட்டிங்கில் சிக்கிய முன்னணி ஊடகங்கள் திருச்சி – சென்னை நெடுஞ்சாலை பள்ளிவாசல் இடிப்பு நாளை யாரும் இறைச்சி சாப்பிடக் கூடாது என்று கூறுவீர்களோ? சனாதன வழக்காடிகளுக்கு சவுக்கடி கொடுத்த உச்சநீதிமன்றம் அரபு நாட்டு தண்டனை (சிறுகதை) இந்து எழுச்சிக்காக விநாயகர் ஊர்வலம் பேராசிரியர் அருணன் எழுதும் ஆர்.எஸ்.எஸ்.எனும் மர்மதேசம் தொடரில்… மேலும் பல அம்சங்களுடன் இந்த வார மக்கள் உரிமையை (17-21) …

Read More »