Breaking News

கொரோனா

கடையநல்லூரில் 800-க்கும் மேற்ப்பட்ட மக்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்கிய தமுமுக

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் தமுமுக சார்பாக வீடு வீடாக 800-க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு கபசுரகுடிநீர் வழங்கப்பட்டது.

Read More »

திருப்பூர் ஊத்துக்குளியில் 1000 நபர்களுக்கு முகக்கவசம் வழங்கிய தமுமுக

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் திருப்பூர் வடக்கு மாவட்டம் ஊத்துக்குளி கிளை சார்பாக பொதுமக்களுக்கு 1000 முக கவசம் சமூக இடைவெளியுடன் விநியோகம் செய்யப்பட்டது. இதில் தமுமுக மமக கிளை நிர்வாகிகளுடன், ஊத்துக்குளி பள்ளிவாசல் நிர்வாகிகளும் காவல் துறையினரும் இணைந்து முக கவசம் விநியோகம் செய்தனர்.

Read More »

கோவை கோதா பகுதியில் கொரோனா விழிப்புணர்வு பிரச்சாரம் நடத்திய தமுமுக

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் கோவை வடக்கு மாவட்டம் மத்திய பகுதிக்கு உட்பட்ட கோதா கிளையின் சார்பாக கொரோனா விழிப்புணர்வு பிரச்சாரம் கோதா கிளையின் தலைவர் வசூல் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வை தமுமுக மாவட்ட செயலாளர் முஜிபுர் ரஹ்மான் அவர்கள் துவங்கி வைத்தார்கள். பின்னர் முகக்கவசம், கொரோனா விழிப்புணர்வு நோட்டீஸ் நிகழ்வை மாவட்ட தலைவர் இ. அஹ்மது கபீர் வழங்கினார்கள். இந்நிகழ்வில் மாவட்ட …

Read More »

தேனி அன்னஞ்சியில் 300 நபர்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்கிய தமுமுக

தேனி மாவட்டம் அன்னஞ்சி கிளை தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மருத்துவ சேவை அணியின் சார்பாக வீடு வீடாக சென்று பொதுமக்கள் 300 நபர்களுக்கு கபசுர கசாயம் வழங்கி, கொரோனா பாதுகாப்பு விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யப்பட்டது.

Read More »

கள்ளக்குறிச்சி மாம்பாக்கத்தில் கபசுரக் குடிநீர், முகக்கவசம் வழங்கி விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்க்கொண்ட தமுமுக

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை ஒன்றியம் மாம்பாக்கத்தில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் கொடி ஏற்றப்பட்டு, அனைத்து மக்களுக்கும் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது. மாம்பாக்கம் தூய்மை பணியாளர்களுக்கு முகக் கவசம் வழங்கப்பட்டது மற்றும் அப்பகுதி மக்களுக்கு கொரோனா தடுப்பு விழிப்புணர்வு அலோசனை வழங்கப்பட்டது. தமுமுக மமக மாவட்ட தலைவர் A.பசல் முஹம்மது அவர்கள் தலைமையில் நடைப்பெற்ற இந்நிகழ்ச்சியில் மமக மாவட்ட செயலாளர் AJ.முஹம்மது அலி,மருத்துவ சேவை அணி மாவட்ட செயலாளர் DR.நூர் …

Read More »

கொரோனா தொற்றால் இறந்த உடலை அடக்கம் செய்த மத்திய சென்னை மாவட்ட தமுமுக மமக தன்னார்வலர்கள்

சென்னை அயனாவரம் சேர்ந்த நபர் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் உயிரிழந்தார். அவருடைய சம்பந்தி ஆகிய சகோதரர் உபயதுல்லா அவர்கள், நம் மாவட்டத்தை அணுகி அவரை அடக்கம் செய்யும்படி கேட்டுக்கொண்டதற்கிணங்க, நம்முடைய  மத்திய சென்னை மாவட்ட தலைவர் சகோதரர் அப்துல் சலாம் உடைய ஆலோசனையின்படி மாவட்ட செயலாளர் சகோதரர் ரசூல், மாவட்ட பொருளாளர் சகோதரர் அலி, மாவட்ட மருத்துவ அணி செயலாளர் ஆசாத், மாவட்ட ஊடக …

Read More »

தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் கொரோனாவால் உயிரிழந்தவரின் உடலை நல்லடக்கம் செய்த கடையநல்லூர் நகர தமுமுக-மமக தன்னார்வலர்கள்

தென்காசி மாவட்டம் கடையநல்லூரை சார்ந்த பெண்மணி ஒருவர் கொரோனா தொற்று காரணமாக பாளை ஹைகிரவுண்ட் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று 27/7/2020 அன்று மரணமடைந்தார்.இந்நிலையில் அவருடைய உறவினர்கள் கடையநல்லூர் தமுமுக மற்றும் மமக நிர்வாகிகளை தொடர்பு கொண்டு மரணமடைந்தவரின் இறுதி சடங்குகளை நடத்துவதற்கு உதவுமாறு கோரினர். அதனடிப்படையில் தமுமுக மாநில செயலாளர் மைதீன் சேட்கான் ஆலோசனையில் தமுமுக-மமக கட்சியின் தென்காசி மாவட்ட தலைவர் யாக்கூப் அறிவுரையில் படி தகவல் தெரிவிக்கப்பட்டு …

Read More »

திருத்தணியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட ஆண் உடலை நல்லடக்கம் செய்த தமுமுக மமக தன்னார்வலர்கள்

திருவள்ளூர் மேற்கு மாவட்டம் திருத்தணியில் இஸ்லாமிய சகோதரர் ஒருவர் சென்னை ஸ்டான்லி அரசு பொதுமருத்துவ மனையில் சிகிச்சை பலனின்றி இறைவன் அழைப்பை ஏற்று கொண்டார்.அவர்களின் ஜனாசா அடக்கம் செய்ய கேட்டுக்கொண்டதால் மாவட்ட தலைவர் Tmm.ஷேக்தாவூத் அறிவுருத்தலின்படி மாவட்ட செயலாளர் தமுமுக எச்.நூர்முகமது வழிகாட்டுதல்படி திருத்தணி நகர தலைவர் அம்மார். நகரசெயலாளர் A .கலீல்ரஷ்மான் மற்றும் நகர செயலாளர் தமுமுக மதன பிச்சைகனி மற்றும் 18 வார்டு கிளை தலைவர்அப்துல் மத்தீன் …

Read More »

கச்சராபாளையத்தில் கொரோனா தொற்றால் உயிரிழந்த சசோதரர் உடலை ஜனாஸா தொழுகையுடன் அடக்கம் செய்த கள்ளக்குறிச்சி மாவட்ட தமுமுக மமக தன்னார்வலர்கள்

கச்சராபாளையத்தில் கொரோனா தொற்றால் உயிரிழந்த சசோதரர் உடலை ஜனாஸா தொழுகையுடன் அடக்கம் செய்த கள்ளக்குறிச்சி மாவட்ட தமுமுக மமகவினர்.

Read More »

கொரோனா தொற்றால் உயிரிழந்த பேகம்பூர் சேர்ந்த சகோதரர் உடலை அடக்கம் செய்த திண்டுக்கல் மாவட்ட தமுமுக மமக தன்னார்வலர்கள்

திண்டுக்கல் பேகம்பூரை சேர்ந்த ஆண் ஒருவர் உயிரிழந்து விட்டார் உறவினர்களிடம் இருந்து அவர்களது உடலை பெற்று பேகம்பூர் பெரிய பள்ளிவாசல் கபர்ஸ்தானில் தமுமுக சகோதர்கள் ஜனாஷா தொழுகை நிறைவேற்றி நல்லடக்கம் செய்தனர்.

Read More »