Breaking News

நாடு

இந்தியச் செய்திகளின் தொகுப்பு

லஞ்சம் வாங்கிய வருமான வரித்துறை இயக்குனர்

உத்தரப்பிரதேசத்தில், தனியார் கட்டுமானக் கம்பெனியிடம் 30 லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கிய குற்றத்தில் வருமானவரித் துறையின் இயக்குனர் (புலனாய்வு) குணால் சிங்கை சி.பி.ஐ. கைது செய்திருக்கிறது. சில தனியார் நிறுவனங்கள் வரி ஏய்ப்பு ( Tax evasion) செய்துள்ளதாக கிடைத்த தகவலின் பேரில் வருமானவரித்துறை ஆய்வு செய்தது. அதில் வடமாநிலங்களில் இயங்கும் ஒரு கட்டுமானக் கம்பெனி வரி ஏய்ப்பு செய்ததாக தெரியவந்தது. வருமானவரித்துறை அதிகாரிகள் நிறுவனத்தை சோதனை இடுவதை அறிந்த …

Read More »

மதுராவில் நடந்தது என்ன?

உயர் அதிகாரிகள் அனைவரும் தலைநகர் லக்னோவில் இருந்து கலவரம் பாதிக்கப்பட்ட மதுரா நோக்கி குவிந்தனர். கலவரக்காரர்கள் கைது செய்யப்பட்டனர். ஒருவார காலம் பதற்றம் நீடித்தபடியே இருந்துள்ளது. உத்தரப்பிரதேச மாநிலத்தில் மதுராவில் கடந்த வாரம் வெடித்த வன்முறை, முஸ்லிம்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

Read More »

அலுவாலியாவின் கழிப்பிடமும் இந்தியா எதிர்நோக்கும் சவால்களும்

டெல்லி பார்லிமென்ட் சாலையில் உள்ளது யோஜனா பவன் கட்டடம். இங்குதான் மத்திய திட்டக் கமிஷன் இயங்குகிறது. அதன் தலைவராக இருப்பவர் மாண்டேக்சிங் அலுவாலியா. பிரணாப் முகர்ஜி ஜனாதிபதியானால் அடுத்த நிதி அமைச்சராக எதிர்பார்க்கப்படுபவர். உலக வங்கியில் பலகாலம் பணிபுரிந்தவர்.

Read More »

சிறுபான்மையினர் உள்ஒதுக்கீடு: மத்திய அரசு என்ன செய்ய வேண்டும்?

உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருந்த சூழலில், முஸ்லிம்கள் உள்ளிட்ட சிறுபான்மையினருக்கு உள் ஒதுக்கீடாக இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்திற்கான (OBC) 27 சதவீத இடஒதுக்கீட்டில் இருந்து 4.5 சதவீதத்தை வழங்குவதாக மத்திய அரசு, 2011 டிசம்பர் மாதம் 22ஆம் நாள் அறிவித்தது. சிறுபான்மையினருக்கு 15 சதவீதமும், அதில் முஸ்லிம்களுக்கு 10 சதவீதமும் இடஒதுக்கீடு வழங்குமாறு நீதிபதி ரங்கநாத் மிஸ்ராவின் ஆணையம் மத்திய அரசை அறிவுறுத்தியது. ஆனால் அதனை …

Read More »

புனே சிறையில் முஹம்மது கத்தீல் சித்தீக்கி கொலை: முஸ்லிம்களுக்கு சிறையிலும் பாதுகாப்பில்லை

2008-க்குப் பிறகு, இந்தியாவின் பல்வேறு இடங்களில் நடைபெற்ற குண்டுவெடிப்புகளுக்கு மின்அஞ் சலில் ( e-mail) பொறுப்பேற்பதாகச் சொல்லப்படும் இந்தியன் முஜாஹிதீன் அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்று சொல்லி பல முஸ்லிம் இளைஞர்கள் இந்தியாவின் பல்வேறு சிறைகளில் அடைக்கப் பட்டுள்ளனர். அவ்வாறு, புனேயில் உள்ள ஏரவாடாவின் அந்தா சிறையில் (இது அதீத பாதுகாப்பு கொண்டதாம்) சந்தேகத்தின் பேரில் அடைக்கப்பட்டவர்தான் முகம்மது கத்தீல் சித்தீக்கி என்ற இளைஞர். இவர் பீகார் மாநிலத்தில் உள்ள தர்பங்கா …

Read More »

ஒவ்வொரு காவல்நிலையத்திலும் ஒரு முஸ்லிம் ஆய்வாளர் – மத்திய அரசு உத்தரவு

முஸ்லிம்கள் அதிகமாக வாழும் பகுதிகளில் உள்ள காவல் நிலையங்களில், ஆய்வாளர் ( Inspector) அல்லது துணை ஆய்வாளர் ( Sub Inspector) நியமிக்கப்பட வேண்டும் என்று மாநில அரசுகளுக்கு மத்திய அரசு நினைவூட்டல் கடிதம் எழுதியிருக்கிறது. இந்த நியமனம் பற்றி ஜூன் மாத இறுதிக்குள் அறிக்கை அனுப்பும்படியும் மத்திய உள்துறைச் செயலாளர் ஆர்.கே.சிங், மாநில முதன்மை செயலாளர்களுக்கு கடிதம் எழுதியிருக்கிறார். முஸ்லிம்களின் நிலைப் பற்றி ஆராய 2005 மார்ச் 9ஆம் …

Read More »

போர்ப்ஸ் கன்ஜ் படுகொலை: ஓராண்டு ஆகியும் பிடிபடாத குற்றவாளிகள்

பீகாரில் அராரியா மாவட்டத்தில் போர்ப்ஸ் கன்ஜ் என்ற கிராமத்தில் வாழ்ந்த அப்பாவி முஸ்லிம் கிராமவாசிகள் நான்கு பேர் பீகார் காவல்துறையினரால் கொல்லப்பட்டு ஓராண்டும் கழிந்து விட்ட நிலையிலும், பாதிக்கப்பட்ட மக்களின் அவலநிலை தீரவில்லை. இதற்கு காரணமான குற்றவாளிகள் இன்னும் தண்டிக்கப்படவும் இல்லை. தங்களது கிராமத்தில் இருந்து மஸ்ஜித், பொது மருத்துவமனை மற்றும் மார்க்கெட் பகுதிகளுக்கான சாலைப் பகுதிகள் அபகரிக்கப்பட்டு மக்களுக்கான எந்த வசதிகளும் கிடைக்காததால் விரக்தியிலும் வேதனையிலும் குமுறிய மக்கள் …

Read More »

மாமன்னர் பகதூர்ஷாவின் இறுதி நாட்கள்

இந்தியத் திருநாட்டின் முதல் விடுதலைக்கு வித்திட்ட பெருமகன் முகலாயப் பேரரசர் பகதூர்ஷா ஜாஃபர் மக்களால் என்றும் நன்றியுடன் நினைவு கூறப்படுபவர். நாட்டின் விடுதலைப் போராட்டத்தை தலைமையேற்று நடத்திய அந்த வீரத்தியாகியின் இறுதி நாட்களையும், அவரது குடும்பத்தினரின் இறுதி நாட்களையும் நாம் வரலாற்றின் ஒளியில் பார்த்தோமானால் நமது சுதந்திரம் எத்தகைய வீரத்தியாகிகளால் விளைந்தது என்பதை உணர்ந்துகொள்ள முடியும். மேலும் அத்தகைய உயிர்த்தியாகம் செய்த தேசத்தலைவர்களுக்கு நாம் என்ன செய்தோம்? அவர்கள் அரும்பாடுபட்டு …

Read More »

காந்திக்கு தேசத்தந்தை பட்டம் சூட்டியது யார்? சிறுமியின் கேள்விக்கு திணறிய மத்திய அரசு

எந்தப் பெயருக்கும் செயலுக்கும் ஒரு காரணம் இருந்தே தீரும். ஏன் என்ற கேள்வி கேட்காமல் வாழ்க்கை இல்லை. இது திரைப்படப் பாடல் மட்டுமல்ல, நிகழ்கால வாழ்வின் நிதர்சன உண்மையும் அதுவே. கேள்விகள் கேட்கப்படுவதால்தான் தகுந்த பதில்கள், சால்ஜாப்பு பதில்கள், சவடால் பதில்கள், சமாளிப்பு பதில்கள், தருக்குப் பதில்கள், கிறுக்குப் பதில்கள் என பல்வேறு விதமான பதில்களைக் கேட்டு மனிதர்களின் தரம், தன்மை குறித்த மதிப்பீடுகளை அறிந்துகொள்ள முடிகிறது.

Read More »

நீதிபதி, அமைச்சர், குண்டர்கள் கைகோர்த்த ஊழல்… மாஃபியாக்களின் மடியில் நீதித்துறை

கர்நாடகத்தில் ரெட்டி சகோதரர்களின் ஆசீர்வாதத்துடன் பாரதீய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்தது. இந்த ரெட்டிகள் சுஷ்மா சுவராஜின் செல்லப்பிள்ளைகள். ரெட்டி சகோதரர்களுக்கு அமைச்சர் பொறுப்பு கொடுக்கப்பட்டது. தென்மாநிலங்களில் ஒன்றான கர்நாடகாவில் ஆட்சிக் கட்டிலில் அமரவைத்ததற்காக எடியூரப்பா அரசு, அவர்களுக்கு சுரங்கங்களை சுரண்டிக்கொள்ள அனுமதி கொடுத்தது.

Read More »