குவைத் நாட்டின் இந்தியத் தூதர் டாக்டர் அதார்ஷ் ஸ்வைகா,சமூக விவகாரங்களுக்கான முதன்மை செயலாளர் திரு கமால் சிங் ராத்தோர் அவர்களை தமுமுக தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா அவர்கள் இன்று 23.02.23 சந்தித்தார்.தொழிலாளர் விவகாரங்களுக்கான தூதரக அலுவலர் ஆனந்த எஸ் ஆர் அய்யர் ஆகியோரும் இச்சந்திப்பின் போது உடனிருந்தனர். திருக்களாச்சேரியை சேர்ந்த சர்புதீன் என்ற வாலிபர் குவைத்தில் மர்மமாக மரணமடைந்தது குறித்து அவரது கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இது குறித்து உரிய …
Read More »சவுதி அரேபியா கிழக்கு மண்டலத்தில் பணியாற்றியவர்களை தாயகத்திற்கு வழியனுப்பும் நிகழ்ச்சி
பல வருடங்களாக சவுதி அரேபியா கிழக்கு மண்டலத்தில் தமுமுக மமக துணைத் தலைவராக இருந்து பணியாற்றி வந்த அபிராமம் அப்துல் காதர் அவர்களையும், மண்டல பொருளாளர் இப்ராஹிம் ஷா அவர்களையும் தாயகத்திற்கு வழியனுப்பும் நிகழ்ச்சி நடைப்பெற்றது. இதில் மண்டல நிர்வாகிகள், கிளை நிர்வாகிகள் கலந்துக்கொண்டனர்.
Read More »ஜித்தாவிலிருந்து சென்னை புறப்பட்ட 300 பயணிகளை வழியனுப்பி வைத்த தமுமுக மற்றும் ஜித்தா தமிழ் சங்கத்தினர்
தாதாபாய் டிராவல்ஸ் மற்றும் ஜித்தா தமிழ் சங்கம் ஏற்பாட்டில் சவூதி அரேபியா ஜித்தாவிலிருந்து சென்னை புறப்பட்ட சவூதியா சிறப்பு விமானத்தில் 300க்கு மேற்பட்ட தமிழர்களை ஜித்தா தமுமுக நிர்வாகிகள் அப்துல் மஜீத், அன்சாரி, ஜாகிர் மற்றும் ஜித்தா தமிழ் சங்கம் (JTS) சிராஜ், ஜெய்சங்கர், இஜாஸ் உள்ளிட்ட தன்னார்வலர்கள் மற்றும் தாதாபாய் குழுவினர் பயணிகளை வழியனுப்பி வைத்தனர். மேலும் சென்னையில் தமுமுக – மமக தன்னார்வ குழுவினர் விமான நிலையத்திற்கு …
Read More »ரியாத் தமுமுக இரத்ததான சேவையை பாராட்டி சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கிய சவுதி கிங் பஹத் இரத்த வங்கி
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சவுதி அரேபியா ரியாத் மத்திய மண்டலம் சார்பில் கடந்த காலங்களில் மண்டல மருத்துவ அணி , நியூ செனையா கிளை, அஜிசியா கிளை, கொரோனா கால அவசர இரத்ததான முகாம் என பல்வேறு இரத்ததான முகாம்களை நடத்தி இறைவனின் அருளால் உயிரை காப்பாற்றும் உன்னத பணியை மேற்கொண்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ரியாத் மண்டல தமுமுகவின் இரத்ததான சேவையை பாராட்டி கிங் பஹத் இரத்த …
Read More »பிரான்ஸ் நாட்டில் நடைப்பெற்ற தமுமுக-வின் முதல் கூட்டம்
ஐரோப்பிய கண்டத்தில் பிரான்ஸ் நாட்டில் கடந்த ஜூன் 14,2020 தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் உதயமானது .பத்து தினங்கள் கழித்து ஜூன் 24,2020 அன்று முதல் நிகழ்ச்சியாக ஆலோசனை கூட்டம் பாரிஸ் சர்ஸ்ல்ஸ்(sarsells) பகுதியில் உள்ள சகோதரர் நியாஸ் அகமது அவர்களின் இல்லத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு பிரான்ஸ் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் தோழர்கள் கலந்துக் கொண்டனர். இக்கூட்டத்திற்கு மனிதநேய மக்கள் கட்சி வழக்கறிஞர் அணி மாநில செயலாளர் அப்ரார் …
Read More »500 இந்திய குடும்பங்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கிய குவைத் தமுமுக
15ஆம் கட்டமாக குவைத் மண்டல தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சார்பாக கொரோனா நிவாரணப் பொருட்கள் தமுமுக மண்டல செயலாளர் எருமப்பட்டி கமருதீன் அவர்களின் ஒருங்கிணைப்பில், சால்மியா பகுதியில் உள்ள இந்திய நாட்டை சேர்ந்த 500 நபர்களுக்கு தமுமுக தலைமை நிர்வாகக்குழு உறுப்பினர் ஹஜ்ரத் S.K.சம்சுதீன் அவர்களின் தலைமையில் உணவுப் பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டது. தமுமுக மண்டல தலைவர் லால்குடி ஜபருல்லாகான் மற்றும் நிர்வாகிகள் கலந்துக் கொண்டனர்.
Read More »ஜித்தாவிலிருந்து இன்று (ஜூன் 6) சென்னை புறப்பட்ட முதல் விமானத்தில் 151 தமிழர்களை வழியனுப்பிய ஜித்தா தமுமுக தன்னார்வளர்கள்…
ஜித்தாவிலிருந்து இன்று (ஜூன் 6) சென்னை புறப்பட்ட முதல் விமானத்தில் 151 தமிழர்களை வழியனுப்பிய ஜித்தா தமுமுக தன்னார்வளர்கள்… இன்று (ஜூன் 6) வந்தே பாரத் திட்டத்தின் மூலம் முதல் விமானம் ஜித்தாவிலிருந்து சென்னைக்கு பகல் 3 மணியளவில் 32 கர்ப்பிணிப் பெண்கள் உள்ளிட்ட 151 பயணிகளுடன் புறப்பட்டு சென்றது. ஜித்தா இந்திய தூதரக அதிகாரிகள் திருமிகு ஹம்னா மரியம் மற்றும் திருமிகு அம்ஜத் அவர்கள் ஏற்பாட்டில், ஜித்தா தமிழ் …
Read More »குவைத்தில் இறந்தவர் உடலை இந்தியாவிற்கு அனுப்பி வைத்த தமுமுக
குவைத்தில் முழு ஊரடங்கு அமலில் உள்ளபோது கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த அபூபக்கர் என்பவர் கடந்த 16/05/2020 அன்று மாரடைப்பால் மரணமடைந்தார். அவரின் உடலை இந்தியாவுக்கு அனுப்பிவைக்க வேண்டுமென அவர் வேலை செய்த கம்பெனி நிர்வாகமும், குடும்பத்தினரும் குவைத் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்திடம் கேட்டுக்கொண்டனர். மண்டல தலைவர் லால்குடி ஜபருல்லாக்கான் அவர்களின் ஆலோசனையின்படி, மண்டல துணை தலைவர் கட்டிமேடு வசீம்,இஸ்லாமிய பிரச்சார பேரவை(IPP) துணை செயலாளர் ஏர்வாடி பீர்முஹம்மது,அரந்தாங்கி யூனுஸ் …
Read More »குவைத்தில் 60 இந்தியர்களுக்கு நிவாரணங்கள் வழங்கிய தமுமுக
குவைத் நாட்டில் கொரோனா நோய் தொற்றால் தனிமைப் படுத்தப்பட்டு, முகாமிலிருந்து வீடு திரும்பிய ஷர்க் மற்றும் பினைட் அல்கேர் பகுதியில் உள்ள 60 இந்திய குடும்பங்களுக்கு குவைத் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சார்பாக உணவுப் பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டது. இந்த நிவாரணம் குவைத்தில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் செய்துள்ள 6-வது கட்ட நிவாரணமாகும்.
Read More »இந்தியா செல்வதற்காக தமுமுக சார்பாக இந்திய தூதரகத்தில் ஆவணங்கள் தாக்கல்
குவைத் பொது மன்னிப்பில், சட்டத்திற்க்கு புறம்பாக தங்கியிருந்தவர்கள் இந்தியா செல்வதற்காக தமுமுக சார்பாக இந்திய தூதரகத்தில் ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டது. அதில் இரண்டாம் கட்டமாக கிடைக்கப்பெற்ற புதிய பாஸ்போர்ட்களை வாஃப்ரா பகுதியில் உள்ள நபர்களுக்கு தமுமுக வாஃப்ரா கிளை தலைவர் S.V.பாளையம் ஷாஜஹான் அவர்களின் தலைமையில் மண்டல நிர்வாகிகளின் முன்னிலையில் விநியோகம் செய்யப்பட்டது. கொரோனாவால் வேலை இல்லாமல் இருக்கக்கூடிய வாஃப்ரா பகுதி சகோதரர்களுக்கு மண்டல தலைவர் லால்குடி ஜபருல்லாக்கான் துணை …
Read More »