Breaking News

Tmmk HQ

Tmmk HQ
7 வடமரைக்காயர் தெரு, வள்ளல் சீதக்காதி நகர், மண்ணடி, சென்னை 600001 போன்: 044 25247824

தப்லீக் ஜமாஅத்தினர் மீது அவதூறு பரப்பிய மோடி அரசு மன்னிப்பு கேட்க வேண்டும் – பேரா.ஜவாஹிருல்லா

இந்தியாவில் கொரோனா பரவுவதற்கு காரணம் டெல்லியில் நடைபெற்ற தப்லீக் ஜமாஅத் மாநாடு தான் என்று மத்திய அரசு தரப்பில் பரப்பப்பட்டது. தப்லீக் ஜமாஅத்தினர் தான் இந்தியாவில் கொரோனவை பரப்பும் உச்சபட்ச நபர்கள் என்றும் இவர்கள் வெடிகுண்டு போன்று நடமாடி வருகின்றார்கள் என்றும் பாஜகவினர் கடந்த மார்ச் ஏப்ரல் மாதங்களில் அவதூறு பரப்பி வந்தார்கள். இந்த அவதூறு பரப்புரைகள் காரணமாகத் திட்டமிட்டு முஸ்லிம்கள் மீது வெறுப்புணர்வு பரப்பப்பட்டது. வெறுப்பு பரப்புரையுடன் நிற்காமல் …

Read More »

8 வழிச் சாலை திட்டம் உச்சநீதிமன்ற தீர்ப்பு அதிர்ச்சி அளிக்கிறது! திட்டத்தை ரத்து செய்யத் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்! மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல்!!

விவசாய நிலங்களை அபகரித்து சென்னை முதல் சேலம் வரையிலான எட்டு வழிச்சாலை திட்டத்தை நிறைவேற்றலாம் எனவும், சென்னை உயர்நீதிமன்றம் இந்த திட்டத்திற்கு விதித்த தடை செல்லாது என்றும் இதனை மத்திய அரசு செயல்படுத்த உச்சநீதிமன்றம் அனுமதித்துள்ளது அதிர்ச்சி அளிக்கிறது. இந்த 8 வழிச்சாலை திட்டம் செயல்படுத்தப்படுமேயானால் பத்தாயிரத்துக்கும் அதிகமான விவசாயக் குடும்பங்கள் வாழ்வாதாரத்தை இழந்து நிர்க்கதியாகும் என்பதால் மனிதநேய மக்கள் கட்சி உட்பட பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் விவசாய …

Read More »

“விவசாயிகளின் ஜனநாயகரீதியான போராட்டத்தை மாண்புமிகு பிரதமர் அவர்கள் மதித்து – நேரடியாகப் பேச்சுவார்த்தை நடத்தி – வேளாண் சட்டங்கள் திரும்பப்பெறப்படும் என அறிவிக்க வேண்டும்” – திமுக தலைவர் அவர்கள் மற்றும் அனைத்து கட்சித்தலைவர்கள் கூட்டறிக்கை.

இந்தியா முழுவதிலுமிருந்து ஐந்நூறுக்கும் மேற்பட்ட விவசாயிகள் சங்கத்தினர் பிரமாண்டமாகத் திரண்டு, நாட்டின் அறுபத்து இரண்டு கோடி விவசாயிகளின் சார்பில், பல லட்சம் விவசாயப் பெருமக்கள் கடந்த நான்கு நாட்களாக டெல்லி மாநகரத்தை ஜனநாயக வழிமுறைகளையொட்டி முற்றுகையிட்டு, மத்திய பா.ஜ.க. அரசின் மூன்று வேளாண் சட்டங்களையும் உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்ற முக்கியமான கோரிக்கையை முன்வைத்துச் சளைக்காத தீரத்துடன் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த மகத்தான பேரணியை மதிக்காமல், “புராரி …

Read More »

நிவர் புயல்: நிவாரண பணிகளுக்குத் தயார் நிலையில் தமுமுக! – தமுமுக (பொ) பொதுச்செயலாளர் பேரா.ஹாஜாகனி

தமிழகத்தில் இயற்கைப் பேரிடர் ஏற்படும் வேளைகளில் கால் நூற்றாண்டு காலமாக துயரங்களை சந்திக்கும் மக்களுக்கு உதவிடும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம். நிவர் புயலால் பாதிக்கப்படும் மக்களுக்கு உதவிடத் தயார் நிலையில் உள்ளது. தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் நிவர் புயல் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்ற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் மக்களுக்கு உதவிடுவதற்காக தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தொண்டர்கள் தயார் நிலையில் உள்ளார்கள். தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் …

Read More »

மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் தலைவர் இஸ்மாயில் மரணம்! மனிதநேய மக்கள் கட்சி இரங்கல்!!

மதச்சார்பற்ற ஜனதா தளக் கட்சியின் தலைவரும் பத்மனாபபுரம் சட்டமன்றத் தொகுதியின் முன்னாள் உறுப்பினருமான முஹம்மது இஸ்மாயில் அவர்கள் நேற்று இரவு மரணித்தார் என்ற செய்தி பெரும் துயரத்தை அளிக்கின்றது. நாம் வாழும் காலத்தில் அரசியலில் தூய்மையும் நேர்மையும் ஒழுக்கமும் மிகுந்த அரசியல் தலைவராக முஹம்மது இஸ்மாயில் விளங்கினார். 1980ம் ஆண்டு கன்னியாகுமரி மாவட்டம் பத்மனாபபுரம் தொகுதியிலிருந்து சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டுச் சிறப்பாக செயல்பட்டார். ஜனதா தள கட்சியின் அனைத்திந்திய தலைவர்களில் ஒருவராக …

Read More »

சென்னையிலிருந்து ஹஜ் விமான சேவை தொடர வேண்டும் புனித ஹஜ் பயணம் மேற்கொள்வோர் வருமான வரி செலுத்த வேண்டும் என்ற அறிவிப்பைத் திரும்பப் பெற வேண்டும் – பேரா. எம்.எச். ஜவாஹிருல்லா

“புனித ஹஜ்-2021ல் ஹஜ் பயணம் மேற்கொள்ள விரும்பும் முஸ்லிம்களிடமிருந்து, சில விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்குட்பட்டு, இந்திய ஹஜ் குழு சார்பாகத் தமிழ்நாடு மாநில ஹஜ் குழு, ஹஜ் விண்ணப்பங்களை வரவேற்றுள்ளது. ரூ2 இலட்சத்திற்கு அதிகமான செலவாகும் வெளிநாட்டு பயணங்கள் மேற்கொள்வோர் வருமான வரித் துறைக்கு வருடாந்திர கணக்குகளை சமர்ப்பிக்க வேண்டும் என்ற பொது விதியின் அடிப்படையில் 2021ல் புனித ஹஜ் பயணத்தை மேற்கொள்வோரும் வருமான வரி தகவல்களைத் தாக்கல் செய்ய …

Read More »

மார்க்க அறிஞர்கள் ஹூஸைன் மன்பயீ,அப்துல் காதர் மன்பயீ தமுமுகவில் இணைந்தனர்

பிரபல மார்க்க அறிஞர்கள் மவ்லவி ஹூசைன் மன்பஈ மற்றும் மவ்லவி அப்துல் காதர் மன்பஈ ஆகியோர் தமுமுக தலைவர் பேராசிரியர்.எம் எச்.ஜவாஹிருல்லா அவர்கள் முன்னிலையில் இன்று 11.11.2020 தமுமுக தலைமையகத்தில் சமுதாய பேரியக்கம் தமுமுகவில் இ ணைந்தனர். இந்நிகழ்வில் தமுமுக தலைமை நிர்வாக குழு உறுப்பினர் குணங்குடி ஹனீபா,தமுமுக மாநில செயலாளர்கள் சலீமுல்லாகான்,கோவை சாதிக் அலி ஆகியோர் உடனிருந்தனர்.

Read More »

நெய்வேலி காவல்நிலையத்தில் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டவர் அடித்துக் கொலை! கொலைக் சம்பவத்தில் ஈடுபட்ட காவலர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும் – பேராசிரியர் ஜவாஹிருல்லா

கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகே காடாம்புலியூரில் வசித்து வந்த செல்வமுருகன் என்பவர் தனது வியாபாரம் சம்பந்தமாக அக்டோபர் 28 அன்று வடலூர் சென்றுள்ளார். வியாபாரத்திற்குச் சென்ற செல்வமுருகன் பல மணி நேரமாகியும் வீடு திரும்பாத காரணத்தால் அவரது மனைவி வடலூருக்கு வந்து தேடிப்பார்த்துவிட்டு, நெய்வேலி காவல் நிலையம் சென்று புகார் கொடுத்துள்ளார். மறுதினம் காவலர்கள் செல்வ முருகனின் மனைவியைத் தொடர்பு கொண்டு, இந்திரா நகர் பகுதிக்கு அழைத்து “உன் கணவர் …

Read More »