Breaking News

அப்ஸர்

முஹம்மது அப்ஸர்

மனிதநேய மக்கள் கட்சியை நோக்கி மக்கள் வெள்ளம்

மதுரை ஒத்தக்கடையில் மாற்று கட்சிகளிலிருந்து விலகி 500-க்கும் மேற்பட்டோர் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சியில் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா முன்னிலையில் இணைந்தனர். சேலம் மேற்கு ஜலகண்டாபுரத்தில் தோழர்கள் மனிதநேய மக்கள் கட்சியில் இணைந்து வருகின்றனர் இராமநாதபுரம் கிழக்கு ஆனந்தூரில் பல்வேறு கட்சிகளிலிருந்து விலகி 30க்கும் மேற்ப்பட்ட இளைஞர்கள் தமுமுக மற்றும் மனிதநேய மக்கள் கட்சியில் இணைந்தனர் காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றியம் திருமுடிவாக்கம் பகுதி …

Read More »

மனித உரிமைக் காப்பாளர்கள் சட்ட விரோதமாக கைது செய்யப்படுவதை கண்டித்து பரப்புரை போராட்டம்

UAPA சட்டம், பீமா கொரேகான் வழக்கு மற்றும் தேசிய புலனாய்வு முகமையின் (NIA) சட்ட விரோத செயல்களால் மனித உரிமைக் காப்பாளர்கள் சட்ட விரோதமாகக் கைது செய்யப்படுவதை கண்டித்தும், பயங்கரவாத சட்டங்களின் நடவடிக்கைகளுக்கு எதிரான பரப்புரைக் போராட்டம் 18.11.2020 சென்னை திருவல்லிக்கேணியில் கொடுங்கோன்மைச் சட்டங்களுக்கு எதிரான பரப்புரை இயக்கம் சார்பில் நடைப்பெற்றது. மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா அவர்களின் தலைமையில் இந்நிகழ்வு நடைப்பெற்றது. மனிதநேய மக்கள் கட்சி …

Read More »

“டிசம்பர் 6 நீதி பாதுகாப்பு தினம் : தமுமுக அறிவிப்பு

மறக்க முடியாத டிச.6 நீதி பாதுகாப்பு தினம் வரலாற்றுச் சிறப்புமிக்க பாபரி மஸ்ஜித் வக்கிரம் கொண்ட சங்பரிவார வன்முறை கும்பலின் உக்கிரமான பயங்கரவாதத்தால் அக்கிரமமான முறையில் வீழ்த்தப்பட்ட டிச.6ம் நாளை நீதி பாதுகாப்பு தினமாகக் கடைபிடிக்க தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் முடிவெடுத்துள்ளது. இறைவன் நாடினால் எதிர்வரும் டிசம்பர் 6.2020 அன்று மாவட்டத் தலைநகரங்களில் தனிமனித இடைவளி உள்ளிட்ட விதிமுறைகளைப் பேணி மாபெரும் விழிப்புணர்வுக் கருத்தரங்கத்தை தமுமுக சார்பில் இன்ஷா …

Read More »

அருந்ததிராய் பாடம் நீக்கம்: மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்!

அருந்ததிராய் பாடம் நீக்கம்: மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்! மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் பத்திரிக்கை அறிக்கை: மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் ஆங்கில முதுகலை வகுப்புப் பாடத் திட்டத்தில் கடந்த மூன்றாண்டுகளாக இடம்பெற்றிருந்த எழுத்தாளர் அருந்ததிராயின் Walking With The Comrade என்ற புத்தகம் பாடத்திட்டத்திலிருந்து திடீரென்று நீக்கப்பட்டுள்ளது என்று மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் துணைவேந்தர் தன்னிச்சையாக அறிவித்துள்ளார். ஆர்.எஸ்.எஸ் – பாரதீய ஜனதா கட்சியை …

Read More »

பிரான்ஸ் அதிபரை கண்டித்து நாகூர், கூத்தாநல்லூரில் தமுமுக ஆர்ப்பாட்டம்

முஹம்மது நபி(ஸல்) அவர்களை கேலிச்சித்திரம் வரைந்ததை ஆதரித்து, வன்முறைக்கு வித்திட்ட பிரான்ஸ் அதிபர் இமானுவல் மெக்ரோனை கண்டித்து 06.11.2020 நாகை மாவட்டம் நாகூரிலும், திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூரிலும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நாகை நாகூர் திருவாரூர் கூத்தாநல்லூர்

Read More »

சமூகநீதி மாணவர் இயக்கத்தின் மண்டல செயலாளர்கள் நியமனம்

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மாணவர் அமைப்பான சமூகநீதி மாணவர் இயக்கத்தின் மண்டல செயலாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்கள். சென்னை மண்டல செயலாளா்: J.சையது அபுதாஹிர் DME., வடகிழக்கு மண்டல செயலாளர்: S.அகமது கபீர் DCV., வடமேற்கு மண்டல செயலாளர்: M.சமியுல்லா MCA., LLB., மத்திய மண்டல செயலாளர்: K.அப்பீஸ்கான் B.Com., கிழக்கு மண்டல செயலாளர்: M.முகமது அசாருதீன் B.E., மேற்கு மண்டல செயலாளர்:  S.ஷேக் முஹம்மது DAE., தெற்கு மண்டல …

Read More »

சமூகநீதி மாணவர் இயக்கத்தின் தலைமை செயற்குழு கூட்டம்

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மாணவர் அமைப்பான சமூகநீதி மாணவா் இயக்கத்தின் தலைமை செயற்குழு கூட்டம் 01.11.2020 இராமநாதபுரம் எஸ்.எஸ்.கே கீாின் பீச் ரிசாா்ட்டில் மாநில செயலாளா் வழக்கறிஞா் நூா்தீன் தலைமையில் நடைபெற்றது. முதலாவதாக மாநில துணை செயலாளா் கோவை அம்ஜத் குா்ஆன் வசனம் ஓதி துவக்கி வைக்க, மாநில பொருளாளா் தமிம் அன்சாாி வரவேற்றபுரையாற்றினாா்கள். இந்நிகழ்வை மாநில துணை செயலாளா்கள் சுல்பிக்கா் மற்றும் காயல் இா்ஷாத் ஆகியோா் தொகுத்து …

Read More »

நீலகிரி, நாமக்கல், கரூர் தமுமுக மமக மாவட்ட ஆய்வு கூட்டம்

அக்டோபர் 27,2020. தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சியின் நீலகிரி, நாமக்கல், கரூர் ஆகிய மாவட்டங்களின் ஆய்வு கூட்டம் தமுமுக மமக தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா தலைமையில் காணொளி வாயிலாக நடைப்பெற்றது. தமுமுக பொருளாளர் ஷபியுல்லா கான், மமக பொருளாளர் கோவை உமர், மமக அமைப்புச் செயலாளர் காதர் மைதீன், தலைமை பிரதிநிதி அப்துல் காதர் மற்றும் மாநில, மாவட்ட, மண்டல நிர்வாகிகள் கலந்துக் கொண்டனர்.

Read More »

புதுச்சேரி, காரைக்கால், விருதுநகர், சிவகங்கை தமுமுக மமக மாவட்ட ஆய்வு கூட்டம்

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சியின் புதுச்சேரி, காரைக்கால், விருதுநகர், சிவகங்கை ஆகிய மாவட்டங்களின் ஆய்வு கூட்டம் தமுமுக மமக தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா தலைமையில் காணொளி வாயிலாக நடைப்பெற்றது. தமுமுக பொதுச் செயலாளர் முனைவர் ஜெ.ஹாஜாகனி, தமுமுக பொருளாளர் சபியுள்ளாகான், மமக பொருளாளர் கோவை உமர், ஞ தமுமுக மாநில செயலாளர்கள் மைதீன் சேட்கான், சிவகாசி முஸ்தபா, காரைக்கால் அப்துல் ரஹிம், தொண்டி சாதிக் …

Read More »

பெரம்பலூர், அரியலூர் தமுமுக மமக மாவட்ட ஆய்வு கூட்டம்

அக்டோபர் 25,2020.தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சியின் அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களின் ஆய்வு கூட்டம் தமுமுக மமக தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா தலைமையில் காணொளி வாயிலாக நடைப்பெற்றது. தமுமுக பொதுச் செயலாளர் முனைவர் ஜெ.ஹாஜாகனி, தமுமுக பொருளாளர் சபியுள்ளாகான், மமக பொருளாளர் கோவை உமர், தலைமை நிர்வாகக்குழு உறுப்பினர் குனங்குடி ஆர்.எம்.அனீபா, தலைமை நிலைய செயலாளர் மாயவரம் ஜெ.அமீன், தமுமுக மாநில செயலாளர் சிவகாசி முஸ்தபா, …

Read More »