Breaking News

Recent Posts

புற்றுநோய் மருத்துவ நிபுணர் அம்மையார் சாந்தா மறைவு – மனிதநேய மக்கள் கட்சி இரங்கல்!

பிரபல புற்றுநோய் மருத்துவ நிபுணரும் சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனையின் தலைவருமான மருத்துவர் வி. சாந்தா அவர்களின் மறைவு வேதனையைத் தருகிறது. மருத்துவர் வி. சாந்தா அவர்கள் மறைவு மருத்துவத் துறைக்குப் பேரிழப்பு. தன்னலமற்ற மருத்துவ சேவையால் அடையாறு புற்று நோய் மருத்துவமனை பல சாதனைகளைப் படைத்ததற்குக் காரணம் மருத்துவர் வி. சாந்தா அவர்களின் அர்ப்பணிப்பை ஆகும். 61 ஆண்டுகளாக இந்த மருத்துவமனையையே தன் வீடாக மாற்றிக் கொண்டு நோயாளிகளுக்குச் …

Read More »

ஞானதேசிகன் மறைவு: மனிதநேய மக்கள் கட்சி இரங்கல்!

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவரும், முன்னாள் மாநிலங்களவை உறுப்பினருமான பி.எஸ்.ஞானதேசிகன் அவர்களின் மறைவு செய்தி அறிந்து துயரமடைந்தேன். தனது மாணவ பருவம் முதலே காங்கிரஸ் இயக்கத்தில் தன்னை இணைத்துக்கொண்டு காங்கிரஸ் கட்சியின் பல்வேறு முக்கிய தலைவர்களின் நம்பிக்கையாகத் திகழ்ந்தவர் திரு. பி.எஸ்.ஞானதேசிகன் அவர்கள், பழகுதற்கு இனிய பண்பாளரும் சிறந்த நாடாளுமன்றவாதியாகவும் விளங்கியவர் பி.எஸ்.ஞானதேசிகன். ஞானதேசிகன் அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினர், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.வாசன் …

Read More »

சென்னைக்கு நிரந்தர வெள்ள ஆபத்தை ஏற்படுத்தும் காட்டுப்பள்ளி துறைமுக விரிவாக்க திட்டம் கைவிடப்பட வேண்டும்!

  மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: சாகர்மாலா திட்டத்தின் மூலம் நாடு முழுவதிலும் உள்ள துறைமுகங்கள் தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டு வருகின்றன, அந்த வகையில் அதானி குழுமத்திற்கு நாட்டின் பல மாநிலங்களில் உள்ள 8 துறைமுகங்கள் தாரைவார்க்கப்பட்டுள்ளன. இதன் தொடர்ச்சியாக மிக பெரும் சூழலியல் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் தமிழகத்தில் உள்ள காட்டுப்பள்ளி துறைமுகத்தை அதானி குழுமத்திடம் ஒப்படைத்திருப்பதை மனிதநேய மக்கள் கட்சி …

Read More »

மமக தலைவர்கள் திமுக தலைவர் ஸ்டாலினுடன் சந்திப்பு!

மமக தலைவர்கள் திமுக தலைவர் ஸ்டாலினுடன் சந்திப்பு! மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா அவர்கள் தலைமையில் மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் ப.அப்துல் சமது, பொருளாளர் கோவை உமர் ஆகியோர் திமுக தலைவர் ஸ்டாலின் அவர்களை சந்தித்தனர்.

Read More »

மனிதநேய மக்கள் கட்சியின் வடமேற்கு மண்டல பொதுக்குழு கூட்டம்

மனிதநேய மக்கள் கட்சியின் வடமேற்கு மண்டல பொதுக்குழு கூட்டம் மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா அவர்களின் தலைமையில் நடைப்பெற்றது. இதில் மனிதநேய மக்கள் கட்சி பொதுச் செயலாளர் ப.அப்துல் சமது, மனிதநேய மக்கள் கட்சி மாநில பொருளாளர் கோவை உமர், தமுமுக மாநில பொருளாளர் ஷபியுல்லா கான், தலைமை நிர்வாகக்குழு உறுப்பினர்கள் குனங்குடி ஆர்.எம்.ஹனிபா, பி.எம்.ஆர்.சம்சுதீன், மமக துணை பொதுச் செயலாளர் எம்.யாக்கூப், மமக அமைப்பு செயலாளர்கள் …

Read More »