குவைத் நாட்டின் இந்தியத் தூதர் டாக்டர் அதார்ஷ் ஸ்வைகா,சமூக விவகாரங்களுக்கான முதன்மை செயலாளர் திரு கமால் சிங் ராத்தோர் அவர்களை தமுமுக தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா அவர்கள் இன்று 23.02.23 சந்தித்தார்.தொழிலாளர் விவகாரங்களுக்கான தூதரக அலுவலர் ஆனந்த எஸ் ஆர் அய்யர் ஆகியோரும் இச்சந்திப்பின் போது உடனிருந்தனர்.
திருக்களாச்சேரியை சேர்ந்த சர்புதீன் என்ற வாலிபர் குவைத்தில் மர்மமாக மரணமடைந்தது குறித்து அவரது கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இது குறித்து உரிய விசாரணை நடத்துவதாக உறுதி அளித்தார்.
குவைத்தில் பணியாற்றும் இந்தியத் தொழிலாளர்கள் சந்திக்கும் பல்வேறு பிரச்சினைகள் குறித்து இந்தியத் தூதருடன் கருத்துகள் பரிமாறினார்.
இச்சந்திப்பில் தமுமுக தலைமை நிர்வாக குழு உறுப்பினர் மவ்லவி எஸ் கே சம்சுதீன் நூரி ஹழ்ரத் துணைப் பொதுச் செயலாளர் வழ எம் ஐ பாதுஷா இந்தியன் வெல்பேர் போரம் அமைப்பின் மண்டல தலைவர் லால்குடி ஜபருல்லாஹ் கான், துணைத் தலைவர் பெருவலநல்லூர் காசிம் மற்றும் முஹம்மது அலி ரஷாதி ஆகியோர் என்னுடன் வந்திருந்தனர்.