தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையம் மாவட்டங்கள் மற்றும் மாநில அளவில் நடத்திய அனைத்துக் கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டியின் பரிசளிப்புவிழா ஜூன் – 3 அன்று சென்னை குருநானக் கல்லூரியில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் பங் கு கொண்டு வேற்றி பெற்றவர்களிற்கு பரிசுகளை வழங்கினார்.இந்நிகழ்ச்சியில் தமுமுக – மமக தலைவர் பேரா.ஜவாஹிருல்லா,சிறுபாண்மை நல வாரிய ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ்,சிறுபான்மை ஆணைய ஒருங்கினைப்பாளரும் தமுமுக பொதுச்செயலாளருமான ஜெ.ஹாஜாகனி, உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி, சிறுபான்மையினர் நலம் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான், நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு, மக்கள்நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியம் மற்றும் சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசின் உயர் அலுவலர்கள், கல்வியாளர்கள்,மாணவர்கள், பெற்றோர்கள் பெருந்திரளாகப் பங்கேற்றனர்.