31 ஆண்டுகள் சிறையில் வாடிய பேரறிவாளனும், அவரது தாயார் அற்புதம் அம்மையாரும், இன்று (25.05.2022) சென்னை மனிதநேய மக்கள் கட்சி தலைமையகம் வருகை தந்தனர். விடுதலைக்காக மக்கள் மன்றத்திலும், சட்டமன்றத்திலும் குரல் கொடுதற்காக பேரா.எம்.எச்.ஜவாஹிருல்லா அவர்களுக்கு நன்றி கூறினர்.
இந்நிகழ்வின் போது மாநிலத் துணைத் தலைவர் பி.எஸ்.ஹமீது, மமக துணைப் பொதுச் செயலாளர் மதுரை கௌஸ், தமுமுக மாநில செயலாளர்கள் கோவை சாதிக், மைதீன் சேட்கான், தலைமை அலுவலக செயலாளர் ஐ.அமீன் அஹமத் ஆகியோர் உடன் இருந்தனர்.