Breaking News

பாபர் மஸ்ஜித் பாணியில் வாரணாசியில் பள்ளிவாசலை அபகரிக்க முயலும் பாசிச பயங்கரவாதத்தை கண்டித்து சென்னையில் தமுமுக ஆர்ப்பாட்டம்

வாரணாசியில் உள்ள கியான்வாபி பள்ளிவாலை இந்து மக்களின் வழிபாட்டிற்குப் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என சங்பரிவார அமைப்பைச் சேர்ந்தவர்கள் வழக்கு தொடுத்துள்ளனர். இந்த வழக்கில் முஸ்லிம்கள் தொழுகைக்கு முன்பு சுத்தம் செய்யும் தண்ணீர் குளத்தின் நடுவில் உள்ள தண்ணீர் கம்பத்தை சிவலிங்கம் என்று கூறி அதனை சீல் வைக்க உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நாட்டில் நிலவும் மதநல்லிணக்கத்தை சீர்குலைத்து, மத மோதல்களை உருவாக்க வேண்டும் என்கிற நோக்கில் இந்த வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. பாசிசவாதிகளின் இதுபோன்ற அராஜக செயலைக் கண்டித்து தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில் நாளை சென்னையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்றது. தமுமுகபொதுச் செயலாளர் பேரா.ஜெ.ஹாஜகனி தலைமையில் நடைபெற்ற இப்போராட்டத்தில் தமுமுக துணைத் தலைவர் பி.எஸ்.ஹமீத், தமிழ்நாடு ஹஜ் கமிட்டி உறுப்பினர் குணங்குடி ஆர்.எம்.ஹனிபா விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் எஸ்.எஸ்.பாலாஜி எம்.எல்.ஏ., இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த டி.எம்.மூர்த்தி , மார்க்சிஸ்ட் கட்சி திருமிகு கனகராஜ் உள்ளிட்ட தோழமைக் கட்சிகளின் தலைவர்களும் பங்கேற்று கண்டன உரை நிகழ்த்தினர்கள்.

 

Check Also

தமிழக மாணவர்களுக்கும் அரசின் கொள்கைமுடிவுக்கும் எதிராக ஆளுநா் செயல்படுவதை நிறுத்த வேண்டும்

– சமூகநீதி மாணவா் இயக்கம் (SMI) கடும் கண்டனம்..! திருவாரூா் மத்திய பல்கலைகழகத்தில் 27.5.2022 அன்று நடைபெற்ற நிகழ்வில் கலந்து …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *