Breaking News

சமூகநீதி மாணவர் இயக்கத்தின் தலைமைத்துவ பயிற்சி முகாம்

தமுமுக மாணவர் அமைப்பான சமூகநீதி மாணவர் இயக்கத்தின் தலைமைத்துவ பயிற்சி முகாம் அக்டோபர் 02,2021 நேற்று இராணிப்பேட்டை மாவட்டம் மேல்விஷாரத்தில் தொடங்கியது. இரண்டு நாள் நிகழ்வான இம்முகாமின் இரண்டாம் நாள் நிகழ்வு சமூகநீதி மாணவர் இயக்கத்தின் மாநில செயலாளர் நூர்தீன் தலைமையில் நடைப்பெற்றது.
இதில் சமூகநீதி மாணவா் இயக்கத்தின் மாதந்திர மின் இதழான இளையோா் முரசின் செப்டம்பா் மாதத்திற்கான இதழ், இணைய வாயிலாக உறுப்பினா் அட்டை பதிவு முறை, மாநில மாநாட்டு அறிவிப்பு உள்ளிட்டவை தமுமுக மமக தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லாஹ் MLA அவர்கள் வெளியிட்டு சிறப்புரையாற்றினாா்கள்.
மனிதநேய மக்கள் கட்சி பொதுச்செயலாளர் ப.அப்துல் சமது MLA, இந்திய தவ்ஹித் ஜமாஅத் தலைவர் எஸ்.எம்.பாக்கர்,தமுமுக விழி அமைப்பு மாநில துணைச்செயலாளர் பேராசிரியர் அபுல் பசல்,ஊடகவியலாளர் கஜேந்திரன், ஆகியோர் ஆகியோா் வகுப்பு எடுத்தனா்.
இதில் தமுமுக மாநில செயலாளா் ஏஜாஸ் அஹமது, மமக அமைப்பு செயலாளா் வழக்கறிஞா் ஜைநூல் ஆபிதீன், மமக தலைமை நிலைய செயலாளா் மாயவரம் அமீன், INTJ மாநில துணை தலைவா் முனீா், சமூகநீதி மாணவர் இயக்க மாநில நிர்வாகிகள் உள்ளிட்ட அனைத்து மண்டல, மாவட்ட நிா்வாகிகள் கலந்துக் கொண்டனர். இறுதியாக முகாம் முடிவில் பேரணியாக சென்று SMI கொடி ஏற்றப்பட்டது.

Check Also

வக்ப் சொத்துகளை முறைகேடாக விற்பனை செய்ய உதவும் ஊற்றுக்கண்ணை அடைத்த தமிழக முதலமைச்சருக்கு நன்றி..

மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் M.H ஜவாஹிருல்லாஹ். MLA. வெளியிடும் அறிக்கை.. நடந்து முடிந்த சட்டமன்ற கூட்டத் தொடரில் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *