Breaking News

பெரியார் பெருந்தொண்டர் ராஜகிரியார் என்ற கோ. தங்கராசு மரணம்:

மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும் பாபநாசம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான பேராசிரியர் முனைவர் ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கை:

தந்தை பெரியாரின் கொள்கையைத் தனது வாழ்நாள் முழுவதும் பின்பற்றி,அதனைப் பரப்புரை செய்யும் பணியில் தம்மை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்ட திராவிட கழகத்தின் முதுபெரும் தலைவர் ராஜகிரியார் என்று அன்புடன் அழைக்கப்பட்ட அய்யா கோ.தங்கராசு அவர்கள் மரணித்தார் என்ற செய்தியறிந்து வருத்தமுற்றேன்.

பெரியார் சுயமரியாதை பிரசார நிறுவன துணைத் தலைவராகவும், திராவிடர் கழகத்தின் செயலவைத் தலைவராகவும், தஞ்சை மாவட்ட திராவிடர் கழகத்தின் செயலாளராகவும் பணியாற்றிய அவர், சட்ட எரிப்பு போராட்டம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் கலந்து கொண்டு பல முறை சிறை சென்றுள்ளார்.

சிறுபான்மை சமுதாயத்துடன் தொடர்ந்து நல்லுறவைப் பேணி சிறுபான்மை மக்களின் பேரன்பைப் பெற்றவர் அய்யா கோ. தங்கராசு அவர்கள்.

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பாபநாசம் தொகுதியில் நான் வேட்பாளராகப் போட்டியிட்ட போது, எனக்கு ஆதரவளித்ததோடு மட்டுமின்றி, கபிஸ்தலத்தில் திராவிடர் கழகத்தின் சார்பில் என்னை ஆதரித்து ஆசிரியர் கீ. வீரமணி அவர்கள் பங்கேற்ற பொதுக் கூட்டத்தில் உற்சாகத்துடன் அவர் பங்கேற்று அமர்ந்திருந்த நிகழ்வு என்னால் மறக்க முடியாது.

அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர்,திராவிடர் கழக உறவுகள் உள்ளிட்ட சமூக நீதி பற்றாளர்கள் அனைவருக்கும் மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்

எம்.எச்.ஜவாஹிருல்லா,MLA,
தலைவர்,
மனிதநேய மக்கள் கட்சி.

Check Also

வக்ப் சொத்துகளை முறைகேடாக விற்பனை செய்ய உதவும் ஊற்றுக்கண்ணை அடைத்த தமிழக முதலமைச்சருக்கு நன்றி..

மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் M.H ஜவாஹிருல்லாஹ். MLA. வெளியிடும் அறிக்கை.. நடந்து முடிந்த சட்டமன்ற கூட்டத் தொடரில் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *