Breaking News

அஇஅதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் மரணம்: மனிதநேய மக்கள் கட்சி இரங்கல்

மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை

அஇஅதிமுக அவைத் தலைவராக பணியாற்றிய மூத்த தலைவர் மதுசூதனன் மறைவிற்கு மனிதநேய மக்கள் கட்சி சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

எம்ஜிஆரின் தீவிர ரசிகராக, கட்சித் தொண்டராக களம் ஆடியவர். செல்வி ஜெயலலிதா தலைமையிலான அமைச்சரவையில் கைத்தறி துறை அமைச்சராக பணியாற்றியவர். கட்சிக்காக 48 முறை சிறை சென்ற உழைப்பாளி. எளிமையாக அனைவரிடமும் பழகும் குணம் கொண்டவர்.

உடல் நலக்குறைவு காரணமாக உயிர் நீத்த அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் அஇஅதிமுக நிர்வாகிகளுக்கும் தொண்டர்களுக்கும் மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறேன்.

இப்படிக்கு

எம் எச் ஜவாஹிருல்லா

தலைவர்

Check Also

மக்கள் உரிமை (18-11) மின்னிதழ்

இந்த வாரம் மக்கள் உரிமையில்… கலைஞர் என்றும் ஓயா நினைவலைகள் கொல்லப்படும் நீதிபதிகள்: மரணபீதியில் நீதி திராவிடர் மாடலும் இஸ்லாமிய …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *