Breaking News

சத்தியம் தொலைக்காட்சி அலுவலகத்தின் மீதான தாக்குதல் வன்மையாக கண்டிக்கத்தக்கது

சத்தியம் தொலைக்காட்சி அலுவலகத்தின் மீதான தாக்குதல் வன்மையாக கண்டிக்கத்தக்கது, பட்டாக்கத்தி பயங்கரவாதியை இயக்கியவர்களும் தண்டிக்கப்பட வேண்டும்
மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா MLA வெளியிடும் அறிக்கை
சத்தியம் தொலைக்காட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று (ஆகஸ்ட் 3) மாலை 6 45 மணி அளவில் மர்ம நபர் ஒருவர் கையில் பெரிய பட்டாக்கத்தி உடன் உள்ளே நுழைந்துள்ளார். அலுவலகத்தில் உள்ள பெரிய தொலைக்காட்சி மற்றும் கணிப்பொறி அலுவலகத்தின் அலங்கார கண்ணாடிகள் உள்ளிட்ட அனைத்தையும் கையில் இருந்த பட்டாக்கத்தியால் அடித்து நொறுக்கி சின்னாபின்னமாக்கி உள்ளார். அங்கு பணியில் இருந்தவர்களுக்கும் கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
ஜனநாயகத்தின் நான்காவது தூணாக இருக்கும் ஊடகத்தின் மீது தொடுக்கப்பட்டிருக்கும் இந்த தாக்குதல் வன்மையான கண்டனத்துக்குரியது. நடுநிலையாக செய்திகளை தந்து அனைத்து மக்களையும் கவரந்த தொலைக்காட்சியாக சத்தியம் தொலைக்காட்சி விளங்குகிறது.
தமிழகத்தில் திமுக தலைமையிலான இந்த அரசு ஊடகங்களுக்கு பக்கபலமாக இருந்து வந்துள்ளது. சமீபத்தில் ஊடகங்களின் மீதான பொய் வழக்குகளை எல்லாம் திரும்ப பெற்று தமிழக ஊடகங்களுக்கு பெரும் தன்னம்பிக்கையை உருவாக்கியவர் நமது முதலமைச்சர்.
சட்டம் ஒழுங்கை சிதைக்கும் வண்ணம் அரசுக்கு கெட்ட பெயர் உருவாக்க வேண்டும் என்கிற எண்ணத்திலும் இந்த செயல் நடைபெற்றிருப்பதாக நாம் பார்க்க வேண்டியிருக்கிறது. அத்துமீறி வன்முறையில் ஈடுபட்ட குஜராத் பதிவு எண் கொண்ட வாகனத்தில் வந்த நபருக்கு பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பதையும் தீவிரமாக விசாரித்து அவர்களையும் சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனைக்கு உட்படுத்த வேண்டும். துரிதகதியில் விசாரணை நடைபெற்று குற்றவாளிகள் கைது செய்யப்படுவதால் மேற்கொண்டு இதுபோன்ற தவறுகள் நிகழா வண்ணம் பாதுகாக்க முடியும்.
வன்முறையில் ஈடுபட்டவர்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கி சத்தியம் தொலைக்காட்சிக்கும் அதன் ஊழியர்களுக்கும் உரிய பாதுகாப்பினை உறுதி செய்ய வேண்டுமென தமிழக அரசை கேட்டுக் கொள்கிறேன்
எம்.எச்.ஜவாஹிருல்லா MLA
தலைவர்
மனிதநேய மக்கள் கட்சி

Check Also

அஇஅதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் மரணம்: மனிதநேய மக்கள் கட்சி இரங்கல்

மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை அஇஅதிமுக அவைத் தலைவராக பணியாற்றிய மூத்த …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *