Breaking News

ஒலிம்பிக் ஹாக்கி போட்டியில் வெண்கலம் வென்ற இந்திய அணிக்கு பாராட்டுக்கள்

மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை
41 ஆண்டுகளுக்கு பிறகு ஒலிம்பிக்கில் பதக்கம் வென்று இருக்கும் இந்திய ஹாக்கி அணிக்கு இதயபூர்வமான வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
எழுச்சியோடு தனது முழு திறனையும் வெளிப்படுத்தி இந்த வரலாற்று சிறப்பு மிக்க வெற்றியை பதிவு செய்த வீரர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள். இந்த வெற்றியானது இந்திய விளையாட்டு வீரர்களுக்கு புதிய தன்னம்பிக்கையையும் உற்சாகத்தையும் அளிக்கும் என்று திடமாக நம்புகிறேன்.
இந்தியாவின் தேசிய விளையாட்டான ஹாக்கியில் இந்திய அணி வெற்றி அடைந்திருப்பது இந்திய மக்கள் அனைவருக்கும் பெரும் மகிழ்ச்சியே
இப்படிக்கு
எம் எச் ஜவாஹிருல்லா
தலைவர்

Check Also

அஇஅதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் மரணம்: மனிதநேய மக்கள் கட்சி இரங்கல்

மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை அஇஅதிமுக அவைத் தலைவராக பணியாற்றிய மூத்த …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *