Breaking News

தாம்பரத்தில் நடைப்பெற்ற மமக செயல்வீரர்கள் கூட்டம்!

எதிர்வரும் உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்வது தொடர்பான மனிதநேய மக்கள் கட்சியின் செங்கல்பட்டு வடக்கு மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் தமுமுக மமக மாவட்ட தலைவர் S.K.ஜாஹிர் உசேன் அவர்களின் தலைமையில் தாம்பரத்தில் நடைப்பெற்றது. மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் ப.அப்துல் சமது MLA, தமுமுக மமக தலைமை நிர்வாகக் குழு உறுப்பினர் குணங்குடி R.M.ஹனிபா, மனிதநேய மக்கள் கட்சி துணைப் பொதுச் செயலாளர்
தாம்பரம் M.யாக்கூப் ஆகியோர் சிறப்புரையாற்றினர். தலைமை பிரதிநிதி A.S.M.ஜூனைது, மமக இளைஞரணி மாநில செயலாளர் புழல் ஷேக் முஹம்மது அலி, வர்த்தக அணி (MVS) A.கௌஸ் பாஷா, சமூகநீதி மாணவர் இயக்கம் (SMI) மாநில பொருளாளர் S.தமிம் அன்சாரி, இளைஞரணி மாநில பொருளாளர் A.ஆசிக் ஹமீது மற்றும் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.
நிகழ்வின் இறுதியாக கொரோனா காலத்தில் சிறப்பான பணி செய்த ஏராளமான சகோதரர்களுக்கு விருது வழங்கப்பட்டது.

Check Also

அஇஅதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் மரணம்: மனிதநேய மக்கள் கட்சி இரங்கல்

மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை அஇஅதிமுக அவைத் தலைவராக பணியாற்றிய மூத்த …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *