Breaking News

மனிதநேயத்தோடு அடக்கம் செய்த இஸ்லாமிய உறவுகள்! மல்லை சத்யா நெகிழ்ச்சி

திராவிட ரத்னா தமிழினக் காவலர் தலைவர் திரு வைகோ எம்பி அவர்களின் கண்மணி செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் பேரூராட்சி பவளக்கார சத்திரம் திருமதி கெளரி பழனி அவர்கள் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் தோற்றுவிக்கப்பட்ட 06/05/94 துவக்க காலம் தொட்டு என்னுடன் இயக்கத்தில் இணைந்தவர்.
இயக்கம் ஆரம்பிக்கப்பட்ட இரண்டு ஆண்டுகளில் 1996 அக்டோபர் மாதம் நடைபெற்ற முதல் உள்ளாட்சி மன்றத் தேர்தலில் மாமல்லபுரம் பேரூராட்சி மன்றத்திற்கு நான் தலைவராகவும் பேரூராட்சி மன்ற உறுப்பினர்களாக நமது தோழர்கள் சிலரும் குடை சின்னத்தில் போட்டியிட்ட போது மாமல்லபுரம் பேரூராட்சி மன்ற முதல் உறுப்பினராக அக்கா திருமதி கெளரி பழனி அவர்கள் போட்டியிட்டு வெற்றி பெற்றார், பேரூராட்சி மன்ற தலைவராக நான் வெற்றி பெற்றேன்.
அக்காலகட்டத்தில் தமிழகத்தில் 623 பேரூராட்சிகள் இருந்தது 2001 ஐந்து ஆண்டுகள் நிறைவில் சிறந்த மக்கள் நலப் பணிகளுக்காக என்னுடைய தலைமையிலான மாமல்லபுரம் பேரூராட்சி தேர்வு செய்யப்பட்டு அப்போதைய மாண்புமிகு உள்ளாட்சி துறை அமைச்சர் திரு கோ.சி.மணி அவர்கள் மாமல்லபுரம் வந்து பாராட்டி இரண்டு கோடி ரூபாய் ஊக்கத்தொகை வழங்கி வீடுகளுக்கு அதை குடிநீர் இணைப்பு வழங்கும் பணிகளுக்கு பயன்படுத்தப்பட்டது
அக்கா திருமதி கெளரி பழனி அவர்கள் அடக்கத்தை அணிகலனாக கொண்ட சிறந்த மக்கள் சேவகி இவரின் கணவர்
திரு பழனிமேஸ்திரி முன்னணி கட்டுமான பணியாளர் இலட்சிய தம்பதிகளாக கழக நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்தவர்கள் அண்ணன் திரு பழனிமேஸ்திரி அவர்கள் இரண்டு வாரங்களுக்கு முன்பு கொரோனா பெருந் தொற்று நோயால் பாதிக்கப்பட்டு செங்கல்பட்டு அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார் மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் நேற்று செய்தி அறிந்து தலைவர் வைகோ அவர்கள் அக்கா திருமதி கெளரி பழனி அவர்களுக்கு ஆறுதல் கூறினார் .
ஆடிமாதம் அம்மனுக்கு காப்புகட்டி இருந்ததாலும் கொரோனா மரணம் என்பதாலும் சடலத்தை ஊருக்குள் கொண்டு வர முடியாமல் மருத்துவமனையில் இருந்து நேராக இடுகாட்டுக்கு கொண்டு சென்று நல்லடக்கம் செய்யப்பட்டது
நான் தஞ்சை தெற்கு மாவட்ட கழக கலந்தாய்வுக் கூட்டத்தில் பங்கேற்க சென்றிருந்ததால் என்னால் இறுதி அஞ்சலி செலுத்த முடியாமல் போனது.
அன்பின் தோழமைகளே இந்த கொரோனா பெருந்தொற்று இந்தியாவிற்கு ஒன்றைத் தெளிவாக உணர்த்தி பாடம் எடுத்து உள்ளது, அது ஆண்டாண்டு காலமாக நாம் பின்பற்றி வந்த சடங்கு சம்பிரதாயம் ஜாதி மத கோட்பாடுகள் அணைத்தும் உடைத்து மனிதநேயமே எஞ்சி நிற்கிறது மதத்திற்காகவே வாழ்கையை அற்பனித்துவிட்டோம் என்று வெற்றுக் கூச்சல் போடும் பேர்வழிகளுக்கு கொரோனா சவுக்கடி கொடுத்து உள்ளது.
இறந்த திரு.பழனி மேஸ்திரி குடும்பம் இந்து மதத்தில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டவர்கள் கோயில் காப்பு கட்டி இருந்ததால் ஊருக்குள் உயிரற்ற சடலத்தை எடுத்து செல்ல அனுமதிக்கவில்லை உறவுகள் இருந்தும் கொரோனாவால் நல்லடக்கம் செய்வதற்கு யாரும் முன் வரவில்லை.
ஆனால் தமிழ்ச் சமுதாயம் தலைவணங்கி நன்றி சொல்ல வேண்டியது இஸ்லாமிய அமைப்புகளுக்குத்தான். காரணம் உறவுகள் ஜாதி மதம் தோள் கொடுக்க மறுத்தபோது இஸ்லாமிய அமைப்புகள் அந்த கடமையை தங்கள் தோள்மீது அந்த பணியைப் போட்டுக் கொண்டு கொரோனாவால் இறந்தவர்களின் உடல்களை ஜாதி பார்க்காமல் மதம் பார்க்காமல் மனிதநேயத்துடன் இறந்தவர்களின் உடல்களை மருத்துவமனையில் பெற்று நல்லடக்கம் செய்து வரும் பணிகள் பாராட்டுக்கு உரியவை.
செங்கல்பட்டு மாவட்டத்தில் நான் அறிந்த வரையில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மனிதநேய மக்கள் கட்சி வழக்கறிஞர் திருவாளர்கள் யாக்கூப், ஜாகீர் உசேன், வழக்கறிஞர் சலீம் பாஷா அவர்களின் தலைமையில் மாவட்டம் முழுவதும் இதுவரை அனைத்து சமூகங்களை சார்ந்த 280 சடலங்களை நல்லடக்கம் செய்து உள்ளனர். ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோற் பதம் போன்று தமிழ்நாடு முழுவதும் இந்த மகத்தான பணிகளை செய்து வருகின்றனர்.
இவர்களின் பணிகளைப் ஆங்காங்கே இருக்கும் சமூக அமைப்புகள் பாராட்டி சிறப்பிக்க வேண்டும் தமிழ் நாடு அரசும் இவர்கள் மீது தனி கவனம் செலுத்தி பாராட்ட வேண்டும் வேண்டும் என்பது எனது விருப்பம். நேற்று இறந்த அண்ணன் பழனி மேஸ்திரி அவர்களின் உடலையும் சம்சுதீன் அவர்களின் தலைமையில் மனிதநேய மக்கள் கட்சியைத் சேர்ந்த தோழர்களே செங்கல்பட்டு அரசு பொது மருத்துவமனையில் உடலைப் பெற்று மாமல்லபுரம் பவளக்கார சத்திரம் இடுகாட்டில் நல்லடக்கம் செய்து உள்ளனர் ஜாதி எங்கே மதம் எங்கே மனித நேயமே எஞ்சி இருக்கிறது மனித நேயம் கொண்டு இப்பணியில் அற்பனிப்பு உணர்வுடன் ஈடுபட்டு வரும் அனைத்து அமைப்புகளின் தோழர்கள் வாழ்க !
அன்புடன்
மல்லை சத்யா
துணைப் பொதுச் செயலாளர்
மறுமலர்ச்சி திமுக

Check Also

அஇஅதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் மரணம்: மனிதநேய மக்கள் கட்சி இரங்கல்

மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை அஇஅதிமுக அவைத் தலைவராக பணியாற்றிய மூத்த …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *