Breaking News

முற்பட்டோருக்கு 10% இட ஒதுக்கீடு ஒரு சமூக அநீதி..

மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா MLA வெளியிடும் அறிக்கை:
மருத்துவப் படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டில் பிற்படுத்தப்பட்ட (OBC) பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு மற்றும் பொருளாதாரத்தில் நலிவடைந்த (EWS) பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
எம்.பி.பி.எஸ், பல் மருத்துவம், மருத்துவ மேல்படிப்புகள் போன்றவற்றுக்கு நடப்பு கல்வி ஆண்டு முதலே இந்த இடஒதுக்கீடு அடிப்படையில் சேர்க்கை நடைபெறும் என ஒன்றிய அரசு கூறியிருக்கிறது.
சமூகநீதி தளத்தில் தமிழகம் எப்போதும் ஒரு படி முன்னணியில் இருக்கும். தமிழகத்தில் இருந்து குறிப்பாக தமிழ்நாட்டு முதலமைச்சர் தளபதி மு.க.ஸ்டாலின் எழுப்பிய வலுவான கோரிக்கைகளின் அடிப்படையில் இன்றைக்கு ஒன்றிய அரசு பிற்பட்டோர் காண இட ஒதுக்கீடு 27% என்பதை அறிவித்திருக்கிறது. இருப்பினும் பிற்படுத்தப்பட்டோருக்கான 50% இடஒதுக்கீடு பெறும் வரை நமது போராட்டம் ஒயக் கூடாது. முற்பட்ட வகுப்பினரில் பொருளாதார அடிப்படையில் பின்தங்கிய பிரிவினருக்கு இட ஒதுக்கீடு வழங்கும் முயற்சிக்கு எதிர்வினை வந்துவிடக் கூடாது என்பதற்காக பிற்பட்டோர் கான இட ஒதுக்கீட்டை வழங்கியிருக்கிறது என்கிற ஐயப்பாடு எழுகிறது.
தமிழ்நாட்டில் பிற்பட்டோர் கான இட ஒதுக்கீடு 50 சதவீதம் இருக்கின்ற நிலையில் இந்திய அளவில் வெறும் 27 சதவீதம் மட்டும் வழங்கி மக்கள் தொகை அடிப்படையில் குறைவாக உள்ள முன்னேறிய வகுப்பினருக்கு எந்தவிதமான சமுதாய புள்ளிவிபர கணக்கெடுப்புகள் இல்லாமல் 10 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கி இருப்பது சமூக நீதி சிந்தனையின் அடிப்படை கோட்பாட்டையே சிதைப்பது போன்று உள்ளது. இட ஒதுக்கீட்டிற்கு பொருளாதாரநிலை ஒருபோதும் அளவுகோலாக இருக்க முடியாது.
எனவே ஒன்றிய அரசு பிற்பட்டோர்க்கான இட ஒதுக்கீட்டை உயர்த்தவேண்டுமென்றும், பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்குவதைத் தவிர்க்க வேண்டுமென்றும் கேட்டுக்கொள்கிறேன்.
இப்படிக்கு
எம்.எச்.ஜவாஹிருல்லா MLA
தலைவர்
மனிதநேய மக்கள் கட்சி

Check Also

அஇஅதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் மரணம்: மனிதநேய மக்கள் கட்சி இரங்கல்

மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை அஇஅதிமுக அவைத் தலைவராக பணியாற்றிய மூத்த …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *