Breaking News

தமிழ்நாட்டில் பிரிவினையைத் தூண்டும் நோக்கில் செய்தி வெளியிட்ட தினமலருக்கு கடும் கண்டனங்கள்

மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் பேரா எம் எச் ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை
தினமலர் நாளிதழின் முதல் பக்கத்தில் கொங்கு நாடு எனும் தலைப்பில் விஷமக் கட்டுரை ஒன்று வெளிவந்துள்ளது. தமிழகத்தில் இருந்து கொங்கு மண்டலத்தைப் பிரித்து தனி யூனியன் பிரதேசமாக மாற்ற ஒன்றிய அரசு முயல்வதாகவும் திமுக அரசின் மீது உள்ள கோபத்தால் விளையாட்டு காட்ட திட்டம் எனவும் தனது வக்கிர எண்ணத்தை வெளிப்படுத்தியுள்ளது.
தற்போதைய சூழலில் யூனியன் பிரதேசங்களே தமக்கு மாநில அந்தஸ்து வேண்டும் என்று போராடிக் கொண்டிருக்கும் வேளையில் தமிழ்நாட்டையும் தமிழக மக்களையும் பிளவுபடுத்தும் நோக்கில் இப்படி ஒரு கருத்தை தமிழகத்தின் வேறு எந்தப் பத்திரிக்கையும் பதியத் துணியாத போது தினமலர் மட்டும் தனது நப்பாசையை செய்தியாகத் தந்திருப்பது வன்மையான கண்டனத்துக்குரியது.
கொங்கு நாடு என்ற பெயரில் தனி யூனியன் பிரதேசம் என்ற நச்சுக் கருத்து முளையிலேயே கிள்ளி எறியப்பட வேண்டிய ஒன்று. தேர்தலுக்கு தேர்தல் கட்சிகளின் பலம் ஒருசில பகுதிகளில் கூடும் குறையும். அதனை வைத்துக்கொண்டு மாநிலங்களைப் பிளவுபடுத்தும் நோக்கில் ஒன்றிய அரசு செயல்பட்டால் அது இந்திய ஒன்றியத்திற்கு பேராபத்தாக முடியும். தினமலரின் பிரிவினைவாதத்திற்கு மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் வன்மையான கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
இப்படிக்கு,
எம்.எச்.ஜவாஹிருல்லா

Check Also

மக்கள் உரிமை (18-10) மின்னிதழ்

இந்த வாரம் மக்கள் உரிமையில்… பனிக்கும் கண்களுடன் மூத்த பாஜகவினர் ( இது ஆனந்த கண்ணீர் அல்ல) காவலுக்கு உறக்கமா? …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *