Breaking News

தென்பெண்ணை துணை நதியில் அணை :கர்நாடக அரசுக்கு கடும் கண்டனம்!

மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. வெளியிடும் பத்திரிகை அறிக்கை:
தமிழகத்தின் கிருஷ்ணகிரி தர்மபுரி திருவண்ணாமலை விழுப்புரம் கடலூர் மாவட்டங்களில் நீர் ஆதாரமாக விளங்கும் தென்பெண்ணை ஆற்றின் துணை நதியான மார்க்கண்டேய ஆற்றின் குறுக்கே கர்நாடக அரசு மிகப்பெரிய அணையைக் கட்டி இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. தமிழகத்தில் 320 கிலோ மீட்டர் தொலைவுக்கு பாயும் இந்த ஆற்றின் குறுக்கே அணை கட்டி தமிழக மக்களின் வாழ்வாதாரத்தை கர்நாடக அரசு கேள்வி குறியாக்கி உள்ளது. கடந்த 2012 ஆம் ஆண்டு தொடங்கி தற்போது வரை தமிழக அரசின் ஒப்புதல் இல்லாமலேயே இந்த அடாத செயலை செய்து முடித்திருக்கிறது கர்நாடக அரசு.
மார்க்கண்டேய நதியில் அணை கட்ட தடைவிதிக்க வேண்டும்; பெண்ணையாற்றின் குறுக்கே தமிழக அரசின் ஒப்புதல் இல்லாமல் எந்த பாசனத் திட்டங்களையும் செயல்படுத்தக் கூடாது என்று கர்நாடக அரசுக்கு ஆணையிட வேண்டும் என்று கோரி தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அந்த வழக்கை 2019&ஆம் ஆண்டு நவம்பர் 14-ம் தேதி தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம், தென்பெண்ணையாற்று சிக்கலைத் தீர்க்க தீர்ப்பாயம் அமைக்குமாறு மத்திய அரசை அணுகும்படி அறிவுறுத்தியது. அதன்படி தமிழக அரசும் மத்திய அரசிடம் விண்ணப்பித்தது.
அதையேற்று தீர்ப்பாயத்தை மத்திய அரசு அமைத்திருந்தால், மார்க்கண்டேய ஆற்றில் அணை கட்டப்படுவதை தடுத்திருக்கலாம். ஆனால், தீர்ப்பாயம் அமைப்பதில் மத்திய அரசு தேவையின்றி தாமதம் செய்தது.
இந்த காலதாமதத்தைப் பயன்படுத்திக் கொண்டும், கொரோனா சூழலை பயன்படுத்தியும் அணையை கர்நாடக அரசு முழுமையாக கட்டி முடித்திருக்கிறது.
சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ள அந்த அணை அப்புறப்படுத்தப்பட வேண்டும். கர்நாடக அரசு மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்துகிறது.
இப்படிக்கு,
எம்.எச்.ஜவாஹிருல்லா

Check Also

மக்கள் உரிமை (18-10) மின்னிதழ்

இந்த வாரம் மக்கள் உரிமையில்… பனிக்கும் கண்களுடன் மூத்த பாஜகவினர் ( இது ஆனந்த கண்ணீர் அல்ல) காவலுக்கு உறக்கமா? …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *