Breaking News

தமுமுகவை பாராட்டிய மருத்துவத் துறை அமைச்சர்

இராமநாதபுரம் மாவட்டம் அரசு தலைமை மருத்துவ கல்லூரியை ஆய்வு செய்ய மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மாண்புமிகு திரு.மா.சுப்பிரமணியன், இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் திரு.காதர் பாட்சா (எ) முத்துராமலிங்கம் MLA, திருவாடானை சட்டமன்ற உறுப்பினர் திரு.கரு.மாணிக்கம் MLA ஆகியோர் வருகை தந்திருந்தனர்.

இராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்றால் இறந்த நூற்றுக்கும் அதிகமான உடல்களை நல்லடக்கம் செய்ததற்காக, இராமநாதபுரம் மத்திய மாவட்ட தமுமுக மனிதநேய மக்கள் கட்சியின் தன்னார்வலர்கள் மற்றும் நகர நிர்வாகிகளை அழைத்து அமைச்சர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் பொன்னாடை போர்த்தி தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தன் பணிகளை பாராட்டி, சமூக நல்லிணக்க மக்கள் பணிகள் தொடர வாழ்த்துக்களை தெரிவித்தார்கள்.

 

Check Also

மக்கள் உரிமை (18-10) மின்னிதழ்

இந்த வாரம் மக்கள் உரிமையில்… பனிக்கும் கண்களுடன் மூத்த பாஜகவினர் ( இது ஆனந்த கண்ணீர் அல்ல) காவலுக்கு உறக்கமா? …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *