Breaking News

தனியார் பள்ளி கல்விக் கட்டணங்களைக் குறைத்து நான்கு தவணைகளாக வசூலிக்க நடவடிக்கை எடுக்க கோரி முதலமைச்சருக்கு

மனிதநேய மக்கள் கட்சி துணைத் தலைவர் பி.எஸ்.ஹமீது வெளியிடும் அறிக்கை:

தனியார் பள்ளிக் கல்விக் கட்டணங்களைக் குறைத்து அதனை நான்கு தவணைகளாக வசூலிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வழங்க கோரி தமிழக முதலமைச்சருக்கு மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேரா.எம்.எச்.ஜவாஹிருல்லா கடிதம் அனுப்பியுள்ளார்.

அக்கடிதத்தில்
“தமிழ்நாட்டில் இயங்கும் தனியார் பள்ளிகளில் பெரும்பாலான பள்ளிக்கூடங்கள் வரும் கல்வி ஆண்டிற்கான கல்விக் கட்டணத்தை ஜூன் மாதம் பத்தாம் தேதிக்குள் இணைய வழியில் செலுத்துமாறு அறிவுறுத்தியுள்ளதாக தகவல்கள் வருகின்றன.

கொரோனா காலத்தில் ஊரடங்கு மற்றும் வாழ்வாதாரம் இழப்பு போன்ற பிரச்சனைகளில் சிக்கித் தவிக்கும் பெற்றோர்களால் இந்த முழுமையான கல்விக் கட்டணத்தைச் செலுத்துவது என்பது இயலாத காரியமாகும்.

ஏற்கனவே இந்தக் கல்வி ஆண்டு முழுவதும் இணைய வழிக் கல்வியாக இருந்த நிலையில் தற்போது தனியார் பள்ளிக்கூடங்கள் வசூலிக்க உள்ள கட்டணமோ தினமும் மாணவர்கள் பள்ளிக்குச் சென்று கல்வி பயின்றபோது வசூலிக்கப்பட்ட கட்டணமாக உள்ளது.

எனவே மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் கொரோனா தொற்று மற்றும் அதனால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் பெற்றோர்களுக்கு ஏற்பட்டுள்ள வேலை இழப்பு மற்றும் வருமான இழப்பைக் கருத்தில்கொண்டு வரும் கல்வி ஆண்டிற்கான கல்விக் கட்டணத்தை வெகுவாகக் குறைத்து அதனை நான்கு தவணைகளாக தனியார் பள்ளிக்கூடங்கள் வசூலிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். என குறிப்பிடப்பட்டுள்ளது.

இவண்
பி.எஸ்.ஹமீது
துணைத் தலைவர்

Check Also

அனைத்து பத்திரிகை மற்றும் ஊடகத் துறையினருக்கும் இழப்பீடு மற்றும் ஊக்கத்தொகை அளிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்!

மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேரா.எம்.எச்.ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. வெளியிடும் அறிக்கை: கொரோனா தொற்றால் உயிரிழந்த பத்திரிகை மற்றும் ஊடகவியலாளர்களின் குடும்பங்களுக்கு …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *