Breaking News

நியூட்ரினோ திட்டத்திற்கு காட்டுயிர் அனுமதி விண்ணப்பத்தை தமிழ்நாடு அரசு நிராகரிக்க வேண்டும்!

மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. வெளியிடும் பத்திரிகை அறிக்கை:

மேற்குத் தொடர்ச்சி மலைத் தொடரில் தேனி மாவட்டம் பொட்டிப்புரம் கிராமத்தில் உள்ள அம்பரப்பர் மலையில் நியூட்ரினோ துகள்கள் குறித்து ஆராய்ச்சி செய்வதற்காக ஆராய்ச்சி மையம் அமைக்கும் முயற்சியில் கடந்த 2010ஆம் ஆண்டில் இருந்து ஒன்றிய அரசு தீவிரம் காட்டி வருகிறது. இந்தத் திட்டத்தை உள்ளூர் மக்களும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களும், மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட அரசியல் கட்சிகளும் கடுமையாக எதிர்த்து வருகிறார்கள்.

இத்திட்டத்திற்கு வழங்கப்பட்ட சுற்றுச்சூழல் அனுமதி செல்லும் என்கிற பசுமைத் தீர்ப்பாயத்தின் உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் பூவுலகின் நண்பர்கள் தொடுத்த மேல்முறையீட்டு மனு நிலுவையில் உள்ளது.

தமிழ்நாடு கேரள எல்லையில் உள்ள மதிகெட்டான் சோலை தேசிய பூங்காவின் தமிழ்நாடு பகுதியில் உள்ள காட்டுப் பகுதியை மட்டும் தவிர்த்துவிட்டு பிற பகுதிகள் அனைத்தையும் சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாகவும் ஒன்றிய அரசு அறிவித்தது.

மாநில அரசிடம் காட்டுயிர் வாரிய அனுமதி கோரப்பட்டிருக்கும் இந்த விண்ணப்பத்தை தமிழ்நாடு அரசு நிராகரிக்க வேண்டும் எனவும் ஏற்கெனவே வழங்கப்பட்டிருக்கின்ற வனத்துறை அனுமதியையும் ரத்து செய்ய வேண்டும் எனவும் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் வழக்கின் விசாரணையில் தமிழ்நாடு அரசு தனது நிலைப்பாட்டை தெளிவாக எடுத்துரைத்து சுற்றுச்சூழல் அனுமதி ரத்து செய்யப்படும் வகையில் தீர்ப்பைப் பெறுவதற்கு தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

தமிழ்நாட்டு அரசின் உரிமைகளையும், தமிழ் மக்களின் உணர்வுகளையும் மதிக்காமல் ஒன்றிய அரசு இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு தொடர்ச்சியாக முயற்சி செய்துகொண்டு வருகிறது. இதை கருத்தில்கொண்டு இந்த திட்டத்திற்கென அதிமுக அடிமை அரசின் சார்பில் வழங்கப்பட்ட நிலத்தையும் திரும்பப்பெற கேட்டுக்கொள்கிறோம்.

இப்படிக்கு,
எம்.எச்.ஜவாஹிருல்லா
தலைவர்
மனிதநேய மக்கள் கட்சி

Check Also

அஇஅதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் மரணம்: மனிதநேய மக்கள் கட்சி இரங்கல்

மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை அஇஅதிமுக அவைத் தலைவராக பணியாற்றிய மூத்த …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *