Breaking News

வேலைக்காகவும், மேற்படிப்பிற்காகவும் வெளிநாடு செல்பவர்களுக்கு தடுப்பூசி செலுத்த முன்னுரிமை அளிக்க கோரி முதலமைச்சருக்கு பேரா.ஜவாஹிருல்லா கடிதம்!

மனிதநேய மக்கள் கட்சி துணைத் தலைவர் பி.எஸ்.ஹமீது வெளியிடும் அறிக்கை:

வேலைவாய்ப்புக்காகவும் கல்வி மேற்படிப்புக்காகவும் வெளிநாடு செல்லும் தமிழர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த முன்னுரிமை வழங்க கோரி தமிழக முதலமைச்சருக்கு மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேரா.எம்.எச்.ஜவாஹிருல்லா கடிதம் அனுப்பியுள்ளார். அக்கடிதத்தில்

“வேலைவாய்ப்புக்காகவும் கல்வி மேற்படிப்புக்காகவும் வெளிநாடு செல்லும் தமிழர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த முன்னுரிமை வழங்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்துள்ளனர். தங்களின் தலைமையிலான அரசு சிறப்பான முறையில் கொரோனா தடுப்பூசி முகாம் நடத்திய 18 முதல் 45 வரையிலான நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தி வருகிறது.

கொரோனா தடுப்பூசி செலுத்துபவர்களில் வெளிநாடு வேலை வாய்ப்பிற்காகவும், உயர்கல்விக்காகவும் செல்வோருக்கு தடுப்பூசி செலுத்துவதற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு அவர்களின் தடுப்பூசி சான்றிதழில் சம்பந்தப்பட்ட நபர்களின் பாஸ்போர்ட் எண்ணைப் பதிவு செய்யவும், மேலும் அந்தச் சான்றுகளில் Covishield என மருந்திற்கு அடைப்புக் குறியில் Astrazeneca என்று பெயரிட்டு வழங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறோம்.

இதுபோன்ற நடைமுறைகள் மகாராஷ்டிரா மற்றும் கேரளாவில் ஏற்கனவே நடைமுறைப்படுத்தப் பட்டுள்ளது என்பதையும் தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு வருகிறேன்.

எனவே தமிழக அரசு வேலைவாய்ப்பிற்கு மற்றும் மேற்படிப்பிற்காகவும் வெளிநாடு செல்லும் தமிழர்களுக்கு கொரோனா தடுப்பூசியில் முன்னுரிமை அளிக்க மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.” என குறிப்பிடப்பட்டுள்ளது.

பி.எஸ்.ஹமீது
துணைத் தலைவர்
மனிதநேய மக்கள் கட்சி

Check Also

அனைத்து பத்திரிகை மற்றும் ஊடகத் துறையினருக்கும் இழப்பீடு மற்றும் ஊக்கத்தொகை அளிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்!

மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேரா.எம்.எச்.ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. வெளியிடும் அறிக்கை: கொரோனா தொற்றால் உயிரிழந்த பத்திரிகை மற்றும் ஊடகவியலாளர்களின் குடும்பங்களுக்கு …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *