Breaking News

Daily Archives: June 9, 2021

நியூட்ரினோ திட்டத்திற்கு காட்டுயிர் அனுமதி விண்ணப்பத்தை தமிழ்நாடு அரசு நிராகரிக்க வேண்டும்!

மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. வெளியிடும் பத்திரிகை அறிக்கை: மேற்குத் தொடர்ச்சி மலைத் தொடரில் தேனி மாவட்டம் பொட்டிப்புரம் கிராமத்தில் உள்ள அம்பரப்பர் மலையில் நியூட்ரினோ துகள்கள் குறித்து ஆராய்ச்சி செய்வதற்காக ஆராய்ச்சி மையம் அமைக்கும் முயற்சியில் கடந்த 2010ஆம் ஆண்டில் இருந்து ஒன்றிய அரசு தீவிரம் காட்டி வருகிறது. இந்தத் திட்டத்தை உள்ளூர் மக்களும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களும், மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட அரசியல் …

Read More »

ஜெர்மனியின் கொலோன் பல்கலைக்கழகத்தின் தமிழ் பிரிவு தொடர்ந்து இயங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்!

மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேரா.எம்.எச்.ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. வெளியிடும் அறிக்கை: தமிழ் மொழியின் வளர்ச்சியில் உலக நாடுகளில் பல்வேறு பல்கலைக்கழகங்களும் முக்கியப் பங்கு வகிக்கும் ஜெர்மனியின் கொலோன் பல்கலைக்கழகத்தில் இந்தியவியல், தமிழியல் ஆய்வு நிறுவனம் 1963ல் துவக்கி நடைபெறுகிறது. இந்த ஆய்வு நிறுவனம், தெற்காசிய நாடுகள் மற்றும் கிழக்காசிய நாடுகள் பண்பாட்டியல், மொழிகள் துறையுடன் இணைக்கப்பட்டு செயல்படுகிறது. தமிழகத்திற்கு வெளியே உள்ள இரண்டு பெரிய நூலகங்களில் சிகாக்கோவுடன், கொலோனும் ஒன்றாக …

Read More »

தனியார் பள்ளி கல்விக் கட்டணங்களைக் குறைத்து நான்கு தவணைகளாக வசூலிக்க நடவடிக்கை எடுக்க கோரி முதலமைச்சருக்கு

மனிதநேய மக்கள் கட்சி துணைத் தலைவர் பி.எஸ்.ஹமீது வெளியிடும் அறிக்கை: தனியார் பள்ளிக் கல்விக் கட்டணங்களைக் குறைத்து அதனை நான்கு தவணைகளாக வசூலிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வழங்க கோரி தமிழக முதலமைச்சருக்கு மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேரா.எம்.எச்.ஜவாஹிருல்லா கடிதம் அனுப்பியுள்ளார். அக்கடிதத்தில் “தமிழ்நாட்டில் இயங்கும் தனியார் பள்ளிகளில் பெரும்பாலான பள்ளிக்கூடங்கள் வரும் கல்வி ஆண்டிற்கான கல்விக் கட்டணத்தை ஜூன் மாதம் பத்தாம் தேதிக்குள் இணைய வழியில் …

Read More »

வேலைக்காகவும், மேற்படிப்பிற்காகவும் வெளிநாடு செல்பவர்களுக்கு தடுப்பூசி செலுத்த முன்னுரிமை அளிக்க கோரி முதலமைச்சருக்கு பேரா.ஜவாஹிருல்லா கடிதம்!

மனிதநேய மக்கள் கட்சி துணைத் தலைவர் பி.எஸ்.ஹமீது வெளியிடும் அறிக்கை: வேலைவாய்ப்புக்காகவும் கல்வி மேற்படிப்புக்காகவும் வெளிநாடு செல்லும் தமிழர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த முன்னுரிமை வழங்க கோரி தமிழக முதலமைச்சருக்கு மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேரா.எம்.எச்.ஜவாஹிருல்லா கடிதம் அனுப்பியுள்ளார். அக்கடிதத்தில் “வேலைவாய்ப்புக்காகவும் கல்வி மேற்படிப்புக்காகவும் வெளிநாடு செல்லும் தமிழர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த முன்னுரிமை வழங்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்துள்ளனர். தங்களின் தலைமையிலான அரசு …

Read More »

அனைத்து பத்திரிகை மற்றும் ஊடகத் துறையினருக்கும் இழப்பீடு மற்றும் ஊக்கத்தொகை அளிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்!

மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேரா.எம்.எச்.ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. வெளியிடும் அறிக்கை: கொரோனா தொற்றால் உயிரிழந்த பத்திரிகை மற்றும் ஊடகவியலாளர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்றும், சிறப்பு ஊக்கத்தொகை ரூ.3,000 ல் இருந்து ரூ.5,000 ஆக உயர்த்தப்படும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். கொரோனா பெருந்தொற்று காலத்தில் பத்திரிகை மற்றும் ஊடகவியலாளர்கள் அடைந்துவரும் துயரங்களைக் குறைக்கும் வகையில் தமிழக முதலமைச்சரின் அறிவிப்பை மனிதநேய மக்கள் கட்சி வரவேற்கிறது. …

Read More »

கொடுந்தொற்று கொரோனா காலத்தில் ஒன்றிய அரசின் குடிகெடுக்கும் குடியுரிமைத் திருத்தச் சட்ட செயலாக்க முயற்சியை எதிர்த்து தமுமுக நடத்தும் மாபெரும் கண்டனப் போராட்டம்!

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் பேரா.முனைவர் ஜெ. ஹாஜாகனி வெளியிடும் அறிக்கை: அண்மையில் ஒன்றிய பாஜக அரசு குஜராத், ராஜஸ்தான், சத்தீஸ்கர், ஹரியானா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் உள்ள 13 மாவட்டங்களில் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் ஆகிய அண்டை நாடுகளில் இருந்து அகதிகளாக வந்து குடியேறி வசித்து வருகின்ற முஸ்லிமல்லாதவர்கள் மட்டும் இந்தியக் குடியுரிமைப் பெற விண்ணப்பிக்கலாம் என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பை 1955ஆம் …

Read More »

மதுக்கூர் தமுமுகவின் பணிகளுக்கு- கல்விதுறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யா மொழி நேரில் பாராட்டு

கல்விதுறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யா மொழி அவர்கள், மதுக்கூர் தமுமுகவின் கொரோனா கால உதவி மையத்துக்கு வருகை புரிந்து கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களை நல்லடக்கம் செய்யும் தங்களின் மகத்தான பணி போற்றுதலுக்குரியது என்று அமைச்சர் பாராட்டினார்.

Read More »