Breaking News

மேனாள் துணைவேந்தர் அனந்தகிருஷ்ணன் மரணம்: மனிதநேய மக்கள் கட்சி இரங்கல்!

மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. வெளியிடும் இரங்கல் செய்தி:

அண்ணா பல்கலைகழத்தில் முன்னாள் துணை வேந்தர் முனைவர் மு. அனந்தகிருஷ்ணன் அவர்கள் இன்று மரணமடைந்தார் என்ற செய்தி பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தின் தலைசிறந்த கல்விமான்களில் ஒருவராக விளங்கியவர் மு. அனந்தகிருஷ்ணன் அவர்கள்.

வாணியம்பாடியை அடுத்துள்ள செட்டியபனூர் என்ற கிராமத்தில் ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்து வாணியம்பாடி முஸ்லிம் கல்வி சங்கம் நடத்தும்  இஸ்லாமியா பள்ளி மற்றும் கல்லூரியில் படித்து தமிழகத்தில் மிகச் சிறந்த கல்வி ஆளுமைகளில் ஒருவராக உயர்ந்தவர் மு.அனந்தகிருஷ்ணன் அவர்கள்.

தனது கல்விக்குக் காரணமாக இருந்த வாணியம்பாடி முஸ்லிம் கல்விக் கழகம் அதன் பள்ளிக்கூடம் மற்றும் இஸ்லாமிய கல்லு£ரி போன்றவற்றை எப்போதுமே மறவாமல் நினைவில் வைத்திருந்தவர் அனந்தகிருஷ்ணன் அவர்கள்.

மு. அனந்தகிருஷ்ணன் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவின் வலுவான பரிந்துரையின் அடிப்படையிலேயே தொழில் கல்லூரிகளில் நுழைவுத் தேர்வை இரத்து செய்து தமிழ்நாடு அரசு  சட்டம் இயற்றியது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் புதிய தேசியக் கல்விக் கொள்கையில் உள்ள ஆபத்தான நடைமுறைகளைத் தெளிவாக எடுத்துரைத்தவர் மு. அனந்தகிருஷ்ணன் அவர்கள்.

மு. அனந்தகிருஷ்ணன் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், சக கல்வியாளர்களுக்கும் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

இப்படிக்கு,
எம்.எச்.ஜவாஹிருல்லா
தலைவர்
மனிதநேய மக்கள் கட்சி

Check Also

வேலைக்காகவும், மேற்படிப்பிற்காகவும் வெளிநாடு செல்பவர்களுக்கு தடுப்பூசி செலுத்த முன்னுரிமை அளிக்க கோரி முதலமைச்சருக்கு பேரா.ஜவாஹிருல்லா கடிதம்!

மனிதநேய மக்கள் கட்சி துணைத் தலைவர் பி.எஸ்.ஹமீது வெளியிடும் அறிக்கை: வேலைவாய்ப்புக்காகவும் கல்வி மேற்படிப்புக்காகவும் வெளிநாடு செல்லும் தமிழர்களுக்கு கொரோனா …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *