Breaking News

லட்சத் தீவுகளிலிருந்து மக்கள் விரோத பிரபுல் கோடா படேலை மத்திய அரசு திரும்ப அழைக்க வேண்டும்! மமக வலியுறுத்தல்!!

மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேரா.எம்.எச்.ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. வெளியிடும் அறிக்கை:

லட்சத்தீவு நிர்வாக அதிகாரியாக உள்ள பிரபுல் கோடா பட்டேல், மக்கள் விரோதச் சட்டங்களை அங்குள்ள மக்கள் மீது வலுக்கட்டாயமாகத் திணித்து, அங்கு வாழும் முஸ்லிம் மற்றும் பழங்குடியின மக்களையும் அவர்களின் வாழ்வாதரம் மற்றும் கலாச்சாரத்தையும் சீர்குலைக்கும்  நடவடிக்கைகள் ஈடுபட்டு வருகிறார். பிரபுல் கோடா பட்டேலின் இத்தகைய நடவடிக்கைகளை மனிதநேய மக்கள் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.

“லட்சத் தீவு வளர்ச்சி அதிகார சீர்திருத்தம் 2021Lakshadweep Development Authority Regulation 2021) மற்றும் சமூக எதிர் நடவடிக்கைகள் தடுப்பு சட்டம்  (Prevention of Anti-Social Activities Act)   ஆகியவற்றைக் கொண்டு வந்துள்ளார். இந்த நடவடிக்கைகள் அனைத்தும் அங்கு வாழும் மக்களின் அன்றாட வாழ்க்கையைச் சீரழித்து, அம்மக்களின் கலாச்சார மிக்க பழக்க வழக்கங்களை தடுத்து முடக்கப்படுத்தும்.

குற்றங்கள் குறைந்த பகுதியாக லட்சத்தீவு இருக்கும்போது சமூக விரோத நடவடிக்கைகள் ஒழுங்கு சட்ட விதிகளின் கீழ் காரணம் எதுவும் இல்லாமல் யாரை வேண்டுமானாலும் கைதுசெய்து ஓராண்டு சிறையில் அடைக்கக்கூடிய சட்டமும் கொண்டு வரப்பட்டுள்ளது.

வளர்ச்சி பணி என்ற பெயரில் மக்கள் தங்கள் சொத்துக்களை விட்டு கட்டாய இட மாற்றம் செய்யப்படுகின்றனர். இரண்டு குழந்தைகளுக்கு மேல் வைத்திருப்பவர்கள் பஞ்சாயத்து உறுப்பினர்கள் ஆகத் தகுதி இழக்கின்றனர். கடல் மீன்களை உண்ணும் பழக்கமுள்ள மக்களைக்  கொண்ட லட்சதீவு பள்ளிகளில் அசைவ உணவிற்குத் தடை போன்ற மக்கள் விரோத சட்டங்களை கொண்டுவந்துள்ள பிரபுல் கோடா பட்டேல்  பிரதமர் மோடியின் குஜராத்  அமைச்சரவையில் உள்துறை அமைச்சராக இருந்தவர்.

லட்சத்தீவில் பொறுப்பேற்ற நான்கு மாதங்களில் அந்தத் தீவின் அமைதியையும் மக்களின் வாழ்க்கையையும் சீர்குலைக்கும் வகையில் மிக மோசமான சட்டங்களைக் கொண்டுவந்துள்ள பிரபுல் கோடா பட்டேலை உடனடியாக மத்திய அரசு திரும்ப அழைக்க வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.

இப்படிக்கு,
எம்.எச்.ஜவாஹிருல்லா
தலைவர்
மனிதநேய மக்கள் கட்சி

Check Also

வேலைக்காகவும், மேற்படிப்பிற்காகவும் வெளிநாடு செல்பவர்களுக்கு தடுப்பூசி செலுத்த முன்னுரிமை அளிக்க கோரி முதலமைச்சருக்கு பேரா.ஜவாஹிருல்லா கடிதம்!

மனிதநேய மக்கள் கட்சி துணைத் தலைவர் பி.எஸ்.ஹமீது வெளியிடும் அறிக்கை: வேலைவாய்ப்புக்காகவும் கல்வி மேற்படிப்புக்காகவும் வெளிநாடு செல்லும் தமிழர்களுக்கு கொரோனா …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *