Breaking News

பத்ம சேஷாத்திரி பள்ளியில் பாலியல் குற்றம் – தமிழக அரசு உயர் நிலை விசாரணைக் குழு அமைக்க வேண்டும்

மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை

கே.கே.நகரிலுள்ள பத்ம சேசாதிரி பால பவன் பள்ளியில் ஆசிரியர் ஒருவர், மாணவிகளைப் பாலியல் துன்புறுத்தல் செய்வதாக எழுந்துள்ள புகார் அதிர்ச்சியளிக்கிறது.

பத்மா சேஷாத்திரி பள்ளிக்கூடத்தில் குழந்தைகள் மீது நடந்த பாலியல் வன்முறைகள் தொடர்பாக விசாரிக்கச் சென்ற மாவட்ட குழந்தை பாதுகாப்புக் குழுவை அனுமதிக்காதது மிகவும் கண்டிக்கத்தக்கது

தங்கள் பள்ளியில் நடைபெற்ற இந்த கொடுமை தொடர்பாகப் பள்ளிக்கூடம் கொடுத்த விளக்க அறிக்கையில் செக்சுவல் என்ற சொல்லை திட்டமிட்டே மறைத்துள்ளார்கள். இதற்குக் காரணம் (குழந்தைகள் தொடர்பான பாலியல் துன்புறுத்தல் தொடர்பான போஸ்கோ. சட்டத்தின் படி பாலியல் வன்முறை நடந்திருந்தால், அந்த பள்ளியோ அல்லது நிறுவனமோ தன்னிச்சையாக வழக்குப் பதிவு செய்ய வேண்டும். இதனைச் செய்யத் தவறிய பள்ளியின் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பத்மா சேஷாத்திரி பள்ளியில் நடைபெற்ற பாலியல் வன்முறை குறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக பள்ளிக் கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. . கல்வித் துறை, குழந்தைகள் பாதுகாப்பு சட்டம் இவற்றில் நிபுணத்துவம் பெற்றவர்கள் மற்றும் பெண் உறுப்பினர்கள் இடம் பெறும் வகையில் தமிழக அரசு உடனடியாக உயர் நிலை விசாரணைக் குழு ஒன்றை அமைக்க வேண்டும். பத்ம சேஷாத்திரி பள்ளி புகழ்பெற்ற அதிகார தன்மை உடைய பள்ளியாகும். இப்பள்ளியில் நடைபெற்ற பாலியல் வன்முறைக்கு உரியத் தண்டனை அளிக்கத் தமிழக அரசு முழு முயற்சி எடுத்து இது போன்ற குற்றங்கள் இனியும் பள்ளிக்கூடங்களில் நடக்காதவாறு தொடர்புடைய அனைவரையும் தண்டிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

இப்படிக்கு
எம் எச் ஜவாஹிருல்லா
தலைவர்,
மனிதநேய மக்கள் கட்சி

Check Also

வேலைக்காகவும், மேற்படிப்பிற்காகவும் வெளிநாடு செல்பவர்களுக்கு தடுப்பூசி செலுத்த முன்னுரிமை அளிக்க கோரி முதலமைச்சருக்கு பேரா.ஜவாஹிருல்லா கடிதம்!

மனிதநேய மக்கள் கட்சி துணைத் தலைவர் பி.எஸ்.ஹமீது வெளியிடும் அறிக்கை: வேலைவாய்ப்புக்காகவும் கல்வி மேற்படிப்புக்காகவும் வெளிநாடு செல்லும் தமிழர்களுக்கு கொரோனா …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *