Breaking News

சமுதாய கண்மணிகளே..!

அன்பார்ந்த சகோதரர்களே அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)…

கொரோனாவினால் உயிரிழந்தவர்களை மதங்களைக் கடந்து இறுதி கடமைகளை நமது சகோதரர்கள் உயிரைப் பணயம் வைத்துச் செய்து வருகின்றீர்கள். தினமும் பல உடல்களை அடக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. தமுமுககாரன் எந்த சவாலையும் முறியடிப்பான் என்பதற்கு எடுத்து காட்டாக உங்கள் பணிகள் அமைந்திருக்கின்றன. இதனால் தான் தி இந்து, ஹிந்துஸ்தான் டைம்ஸ் உள்ளிட்ட ஆங்கில பத்திரிகைகளும் நமது பணிகளை சிலாகித்து எழுதியுள்ளன. இப்பணியில் இடைவிடாமல் பணியாற்றி வரும் நமது சகோதரர்களுக்கு எல்லாம் வல்ல அல்லாஹ் நல்ல உடல் நலனையும் அவர்கள் வாழ்வில் நலங்கள் அனைத்தையும் வழங்க இறைவனிடம் ஐவேளையிலும் பிரார்ததிப்போம்.

தமுமுகவின் தலைவர் என்ற பொறுப்பில் இப்பணியில் ஈடுபட்டுள்ள சகோதரர்கள் குறித்து நான் பெரிதும் கவலைகொண்டுள்ளேன். இந்த இரண்டாம் அலை மிக மோசமாக உள்ளது. நமது சகோதரர்கள் பல சந்தர்ப்பங்களில் உரியப் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை இல்லாமல் செயல்படும் செய்திகளும் வருகின்றன. கோவித் 19 காரணமாக உயிரிழந்தவர்களுக்கான இறுதி சடங்களில் பரிந்துரைக்கப்பட்டுள்ள அனைத்து அரசு விதிமுறைகளையும் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். தயவு செய்து அடக்கம் பணி முடிவடைந்தவுடன் வீட்டுக்குச் செல்வதற்கு முன்பு நன்றாகக் குளித்து விட்டு வேறு ஆடைகளை மாற்றிவிட்டுச் செல்லுங்கள். வீட்டில் உள்ளவர்களைப் பாதுகாப்பதும் உங்கள் கடமை என்பதை மறந்து விடாதீர்கள்.

ஒரு நாள் சேவையில் ஈடுபட்ட சகோதரர்கள் மறுநாள் விடுப்பு எடுத்து விட்டு வேறு சகோதரர்கள் மறுநாள் பணியாற்றும் வகையில் மாவட்ட நிர்வாகிகள் ஏற்பாடு செய்யுங்கள். ஒரே அணி சகோதரர்கள் மட்டுமே இந்த நற்பணியைச் செய்யட்டும் என்று இல்லாமல் மற்ற சகோதரர்களும் இந்த நன்மையில் பங்கு கொள்ளுங்கள்.

மொத்தத்தில் சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும். உங்களைத் தற்காத்துக் கொண்டு மக்கள் சேவையில் ஈடுபடுங்கள். எல்லாம் வல்ல அல்லாஹ்வே அறப்பணியில் உயிரைப் பணயம் வைத்து ஈடுபட்டுள்ள எங்கள் சகோதரர்களுக்கு நல்ல ஆரோக்கியத்தை அளித்து அவர்களுக்கும் அவர்கள் குடும்பத்தாருக்கும் உன் அருள் வளங்களைப் பொழிவாயாக.

அன்புடன்
எம் எச் ஜவாஹிருல்லா

Check Also

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கொரோனா தொற்றால் உயிரிழந்த அவர்களின் உடலை அடக்கம் செய்த தமுமுகவினர்!

கொரோனா தொற்றால் உயிரிழந்த வடசென்னை வண்ணாரப்பேட்டையை சேர்ந்தவரின் உடலை ராயபுரம் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தினர் நல்லடக்கம் செய்தனர். கொரோனா …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *