Breaking News

கொரோனாவை வென்று உலக மக்கள் சீரோடும், சிறப்போடும், செழிப்போடும் வாழ வகைசெய்வோம்..!

மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் மே தின வாழ்த்து செய்தி:
உலகமெங்கும் உள்ள உழைக்கும் மக்களின் உரிமைத் திருநாளான மே தின நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். கொரோனா இரண்டாவது அலையை வென்று உழைக்கும் வர்க்கம் சீரோடும், சிறப்போடும், செழிப்போடும் வாழ எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்போம்.
தங்களின் வாழ்வாதாரத்தை ஈட்டும் அதேநேரத்தில் நாட்டின் வளர்ச்சிக்காக உழைக்கும் தொழிலாளர்கள் அனைவரும் கவுரவிக்கப்பட வேண்டிய சிறப்பான நாள் இந்த மே தினம். 8 மணி நேர வேலை, முறையான ஊதியம் ஆகியவற்றை வலியுறுத்தி ரத்தம் சிந்திப் போராடி தொழிலாளர்கள் பெற்ற உரிமை வரலாற்றை நினைவுபடுத்தும் இந்நன்னாளில் தொழிலாளர்களைச் சுரண்டும் அனைத்து சக்திகளையும் ஒழித்து தொழிலாளர்களுக்குக் கிடைக்க வேண்டிய உரிமைகளையும், பயன்களையும் அடைய உறுதியேற்போம்.
உழைப்பாளியின் நெற்றி வியர்வை உலரும் முன் அவரது கூலியைக் கொடுத்துவிட வேண்டும் என்ற நபிகளாரின் நன்மொழியை நினைவுகூர்ந்து உழைப்பாளிகளின் உரிமையைக் காக்கும் நல்லரசு அமைந்திடவும் இந்நன்னாளில் வாழ்த்துகிறேன்.
இப்படிக்கு,
எம்.எச்.ஜவாஹிருல்லா
தலைவர்
மனிதநேய மக்கள் கட்சி

Check Also

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கொரோனா தொற்றால் உயிரிழந்த அவர்களின் உடலை அடக்கம் செய்த தமுமுகவினர்!

கொரோனா தொற்றால் உயிரிழந்த வடசென்னை வண்ணாரப்பேட்டையை சேர்ந்தவரின் உடலை ராயபுரம் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தினர் நல்லடக்கம் செய்தனர். கொரோனா …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *