Breaking News

கொரோனா நோயாளிகளுக்கான ரெம்டெசிவிர் மருந்து அனைத்து மாநகராட்சிகளிலும் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்!

மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல்!!
மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் பத்திரிகை அறிக்கை:
கொரோனா 2வது அலை இந்தியாவில் மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்திலும் இதன் தாக்கம் அதிகரித்து வருகிறது. தற்போது கொரோனா தொற்று ஏற்பட்டவர்கள் “ரெம்டெசிவிர்” மருந்துக்காக அலையும் சூழல் ஏற்பட்டுள்ளது. தனியார் மருத்துவமனைகள், மருந்தகங்களில் மிகப்பெரிய தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் தமிழக மருத்துவப் பணிகள் கழகம் சார்பில், சென்னை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை வளாகத்தில், ‘உயிர் காக்கும் மருந்தகம்’ துவக்கப்பட்டு மருந்து ரூ.9400-க்கு 6 டோஸ் மருந்து விற்பனை செய்யப்படுகிறது.
இதனையறிந்த நோயாளிகளின் உறவினர்கள், ரெம்டெசிவிர் மருந்து வாங்க, கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் திரண்டு வருகின்றனர். வெளியூர்களில், சிகிச்சை பெறுவோர், சென்னையில் உள்ள தங்கள் நண்பர்கள், உறவினர்கள் வாயிலாக மருந்துகளைப் பெற்று வருகின்றனர். இதனால் இந்த மருந்தகத்தில் கூட்டம் அலைமோதுகிறது. மேலும் இந்த மருந்தகத்தில் ஒரே ஒரு கவுண்டர் செயல்படுவதாகவும், மாலை 5 மணிக்கு இந்த மருந்தகம் மூடப்படுவதாகவும் இதனால் மருந்து வாங்க வந்தவர்கள் ஏமாற்றத்துடன் திரும்புவதாகவும் புகார் எழுந்துள்ளது.
எனவே, தமிழக அரசு இதுபோன்ற மருந்தகத்தை, திருச்சி, மதுரை, கோவை, சேலம் உள்ளிட்ட அனைத்து மாநகராட்சிகளிலும் அமைக்க வேண்டும் எனவும், மேலும் இந்த மருந்தகத்தை 24 மணி நேரமும் விற்பனை செய்ய வேண்டும் எனவும் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன்.
இப்படிக்கு,
எம்.எச்.ஜவாஹிருல்லா
தலைவர்,
மனிதநேய மக்கள் கட்சி

Check Also

சமுதாய கண்மணிகளே..!

அன்பார்ந்த சகோதரர்களே அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)… கொரோனாவினால் உயிரிழந்தவர்களை மதங்களைக் கடந்து இறுதி கடமைகளை நமது சகோதரர்கள் உயிரைப் பணயம் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *