Breaking News

பெரியார் நெடுஞ்சாலையின் பெயர் மாற்றம் பாஜகவின் ஆட்டத்திற்கு அடிபணியும் அதிமுக!

மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் பத்திரிகை அறிக்கை:

சென்னையில் உள்ள ஈவேரா பெரியார் நெடுஞ்சாலையின் பெயரை கிராண்ட் வெஸ்டர்ன் டிரங்க் ரோடு என மாற்றம் செய்து நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான அறிவிப்பு பலகையில் வெளியிடப்பட்டுள்ளது.
1979ல் பூவிருந்தவல்லி நெடுஞ்சாலை என்ற பெயரை பெரியார் ஈவேரா நெடுஞ்சாலை என்று மாற்றி அதற்கான ஆணையையும் வெளியிட்டவர் அதிமுக நிறுவனரும் முன்னாள் முதலமைச்சருமான மறைந்த திரு. எம்ஜிஆர் அவர்கள், அந்த எம்ஜிஆரின் பாதையில் ஆட்சி நடத்திக் கொண்டிருப்பதாக கூறிக் கொண்டுள்ள தற்போதைய தமிழக அரசு ஈவேரா நெடுஞ்சாலை என்ற பெயரை மாற்றி உள்ளது கண்டனத்திற்குரியது.
மத்திய பாஜகவின் ஆட்டத்திற்கு அடிபணிந்து இந்த பெயர் மாற்றம் நடந்துள்ளது என்பது வெட்ட வெளிச்சமான உண்மையாகும். இந்த பெயர் மாற்றத்தை தமிழக மக்கள் ஒருபோதும் ஏற்றுக் கொண்டு அங்கீகரிக்க மாட்டார்கள்.
எனவே இந்த புதிய பெயரை உடனடியாக நீக்கி, மீண்டும் பெரியார் ஈவேரா நெடுஞ்சாலை என பெயர் மாற்றம் செய்திட உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசை மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கின்றேன்.
இப்படிக்கு,
எம்.எச்.ஜவாஹிருல்லா
தலைவர்
மனிதநேய மக்கள் கட்சி

Check Also

புதிய முறையில் பல சிக்கல்களை விவசாயிகள் எதிர்கொள்வதால் பழைய முறையிலேயே நெல் கொள்முதல் தொடர நடவடிக்கை எடுக்க வேண்டும்!

தமிழக முதல்வருக்கு மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும் பாபநாசம் சட்ட மன்ற உறுப்பினருமான எம் எச் ஜவாஹிருல்லா கடிதம் புதிய …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *