Breaking News

தலித் இளைஞர்கள் கொலை: மனிதநேய மக்கள் கட்சி கடும் கண்டனம்!

மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் பத்திரிகை அறிக்கை:
அரக்கோணம் அருகேயுள்ள சோகனூர் காலனியைச் சேர்ந்தவர் அர்ஜுனன் (20), செம்பேடு காலனியைச் சேர்ந்தவர் சூர்யா (25). நண்பர்களான இருவரும் நேற்று இரவு கௌதம நகர் பகுதியில் 20 பேர் கும்பலால் கொடூரமாக அடித்து கொலை செய்யப்பட்டனர். தாக்குதலுக்கு ஆளான மேலும் 3 பேர் திருத்தணி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார்கள்.
அ.தி.மு.க-வின் காவேரிப்பாக்கம் மேற்கு ஒன்றியச் செயலாளர் பழனி என்பவர் மணல் கடத்தலில் ஈடுபட்டு வந்துள்ளார். திருட்டு மணல் ஏற்றிய வாகனங்கள் தலித் குடியிருப்பின் வழியாக வந்தபோது அங்கிருந்த இளைஞர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தற்போது நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் வி.சி.க வேட்பாளர் கௌதமசன்னாவுக்கு ஆதரவாக பானைச் சின்னத்துக்கு அந்த கிராம இளைஞர்கள் வாக்குகள் சேகரித்துள்ளனர். அத்துடன், பா.ம.க ஆதரிக்கும் அ.தி.மு.க வேட்பாளரை ஊருக்குள் அனுமதிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.
இவற்றையெல்லாம் மனதில் வைத்துக்கொண்டு தேர்தல் சூழலைப் பயன்படுத்தி, பழனியின் மகன்களும் சாதிவெறியர்களும் கூட்டுசேர்ந்து இந்தப் படுகொலையை நடத்தியுள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
இந்தப் படுகொலையை மனிதநேய மக்கள் கட்சி சார்பாக வன்மையாகக் கண்டிக்கிறேன். படுகொலை செய்யப்பட்ட இருவரின் குடும்பத்தினருக்கும் தமிழக அரசு தலா ரூ.25 லட்சம் வழங்க வேண்டுமெனவும், படுகாயத்துடன் சிகிச்சைப் பெற்று வரும் 3 பேருக்கும் தலா ரூ.2 லட்சம் வழங்க வேண்டுமெனவும் கேட்டுக் கொள்கிறேன். மேலும் கொலை பாதகச் செயலில் ஈடுபட்ட அனைவரையும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டுமெனவும் கேட்டுக் கொள்கிறேன்.
இப்படிக்கு,
எம்.எச்.ஜவாஹிருல்லா
தலைவர்,
மனிதநேய மக்கள் கட்சி

Check Also

சமுதாய கண்மணிகளே..!

அன்பார்ந்த சகோதரர்களே அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)… கொரோனாவினால் உயிரிழந்தவர்களை மதங்களைக் கடந்து இறுதி கடமைகளை நமது சகோதரர்கள் உயிரைப் பணயம் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *