Breaking News

Daily Archives: April 18, 2021

சமுதாய கண்மணிகளே..!

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) சிறந்த உடல் நலத்துடனும் சீரான உணர்வுகளுடனும் இக்கடிதம் உங்களை சந்திக்கட்டும் என்று வல்ல இறைவனிடம் பிரார்த்தனை புரிந்து தொடங்குகிறேன். நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலின் போது மிகுந்த அர்ப்பணிப்புடன் பாசிசத்தை வீழ்த்த உத்வேத்துடன் பணியாற்றிய உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் எல்லாம் வல்ல இறைவன் நிறைவான அருள்வளங்களை வழங்க வேண்டும் என்று முதலில் பிரார்த்தனை செய்கிறேன். இறைவனின் அருள்வளம் நிறைந்த ரமலான் நம்மை வந்தடைந்துள்ளது.உலக மக்களுகெல்லாம் வழிகாட்டியாக …

Read More »

பெரியார் நெடுஞ்சாலையின் பெயர் மாற்றம் பாஜகவின் ஆட்டத்திற்கு அடிபணியும் அதிமுக!

மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் பத்திரிகை அறிக்கை: சென்னையில் உள்ள ஈவேரா பெரியார் நெடுஞ்சாலையின் பெயரை கிராண்ட் வெஸ்டர்ன் டிரங்க் ரோடு என மாற்றம் செய்து நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான அறிவிப்பு பலகையில் வெளியிடப்பட்டுள்ளது. 1979ல் பூவிருந்தவல்லி நெடுஞ்சாலை என்ற பெயரை பெரியார் ஈவேரா நெடுஞ்சாலை என்று மாற்றி அதற்கான ஆணையையும் வெளியிட்டவர் அதிமுக நிறுவனரும் முன்னாள் முதலமைச்சருமான மறைந்த திரு. எம்ஜிஆர் அவர்கள், அந்த …

Read More »

ரமலான் முபாரக்…

இந்த ரமலானின் முழு பலன்களை நாம் அனைவரும் அனுபவிக்க இறைவன் கிருபை செய்வானாக. இது வரை வாழ்வில் சந்தித்திராத கொரோனா அச்சுறுத்தலை துணிச்சலாக எதிர்கொள்ளும் வகையில் நமது இறையச்சத்தை வலுப்படுத்திக் கொள்ளவும் இந்த ரமலானை பயன்படுத்திக் கொள்வோம்.. கொடிய நோயிலிருந்து மனிதகுலத்தை இறைவன் காப்பானாக. எம்.எச்.ஜவாஹிருல்லா தலைவர், தமுமுக

Read More »

தலித் இளைஞர்கள் கொலை: மனிதநேய மக்கள் கட்சி கடும் கண்டனம்!

மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் பத்திரிகை அறிக்கை: அரக்கோணம் அருகேயுள்ள சோகனூர் காலனியைச் சேர்ந்தவர் அர்ஜுனன் (20), செம்பேடு காலனியைச் சேர்ந்தவர் சூர்யா (25). நண்பர்களான இருவரும் நேற்று இரவு கௌதம நகர் பகுதியில் 20 பேர் கும்பலால் கொடூரமாக அடித்து கொலை செய்யப்பட்டனர். தாக்குதலுக்கு ஆளான மேலும் 3 பேர் திருத்தணி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார்கள். அ.தி.மு.க-வின் காவேரிப்பாக்கம் மேற்கு …

Read More »

ஆசிரியை சபரிமாலா மீது தாக்குதல் நடத்த முயற்சி மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்!!

மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் ப.அப்துல் சமது வெளியிடும் பத்திரிக்கை அறிக்கை: பெண் விடுதலை கட்சியின் நிறுவனர் ஆசிரியை சபரிமாலா மீது தாக்குதல் நடத்த முயற்சி நடந்துள்ளது என்ற செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. இந்த தாக்குதலின் போது அவர் தங்கியிருந்த வீட்டின் வெளியே நிறுத்தப்பட்டிருந்த அவரது வாகனம் அடித்து நொறுக்கப்பட்டுள்ளது. இந்த கொலைவெறித் தாக்குதலை மனிதநேய மக்கள் கட்சி சார்பில் வன்மையாகக் கண்டிக்கின்றேன். பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளின் …

Read More »

புனித ரமலான் மாதத்தில் இரவு 10 மணி வரை பள்ளிவாசல்கள் திறந்திருக்க அனுமதி அளிக்க வேண்டும்! தமுமுக கோரிக்கை!!

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் பத்திரிகை அறிக்கை: தமிழகத்தில் கொரோனா 2வது அலையின் காரணமாக அதிகரித்து வரும் பாதிப்பினைக் கட்டுப்படுத்தும் நோக்கில் தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி, தமிழகத்தில் வரும் ஏப்ரல் 10ம் தேதி முதல் அனைத்து வழிபாட்டுத் தலங்களும் இரவு 8 மணி வரை மட்டுமே பொதுமக்களுக்கு அனுமதியளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. புனித ரமலான் மாதம் வரும் 14ஆம் தேதி …

Read More »