Breaking News

திருக்குர்ஆன் வசனத்தை நீக்கக்கோரி வழக்கு: முஸ்லிம்களை சீண்டிப் பார்ப்பதை பாஜக நிறுத்திக்கொள்ள வேண்டும்!

மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை:

இந்தியாவின் சல்மான் ருஷ்டியாகவும், தஸ்லீமா நஸ்ரீனாவும் தன்னைத்தானே பிரபலப்படுத்தும் நோக்கில் உ.பி.யைச் சேர்ந்த ஷியா பிரிவு நபரான வசீம் ரிஸ்வி என்பவர், இஸ்லாத்தின் மீது அவதூறுகளை அள்ளி வீசுவதை வழக்கமாகவும், பாஜகவின் ஆதரவாளராகவும் தன்னை பகிரங்கப்படுத்திக் கொண்டு வருபவராவார். இந்த வசீம் ரிஸ்விவை தங்களது கைப்பாவையாகப் பயன்படுத்தி முஸ்லிம்களின் புனித குர்ஆனின் சில வசனங்கள் தீவிரவாதத்தை போதிப்பதாக அபாண்டமான குற்றச்சாட்டுகளுடன், குர்ஆனுக்கு தடை கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளது பாசிசத்தின் மறுஉருவமான பாஜக.

மேலை நாடுகள் என்று அழைக்கப்படும் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட பல நாட்டு அறிஞர்களும், ஆய்வாளர்களும் திருக்குர்ஆன் பற்றி பலநூறு ஆய்வுகளை மேற்கொண்டும், கடந்த 1500 வருடங்களாக திருக்குர்ஆன் வசனங்கள் மீது எந்த தவறையும் கண்டுபிடிக்க முடியாமல் பின்வாங்கி விட்டனர் என்பதும், பல கிறிஸ்தவ, யூத மத அறிஞர்கள் குர்ஆன் பற்றாளர்களாக மாறிவிட்டனர் என்பதும் பதிவு செய்யப்பட்ட வரலாறு ஆகும்.

உ.பி. மாநிலத்தில் மத்திய ஷியா வக்பு வாரியத்தின் தலைவராக 2016, 2017ல் இருந்த இந்த வசீம் ரிஸ்வி மீது, தனது பதவிக் காலத்தில் வக்பு வாரிய நிலங்களை ஆக்ரமித்தது, அபகரித்தது மற்றும் லஞ்சம் வாங்கியது ஆகிய வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த வழக்குகளில் இருந்து தன்னை தற்காத்துக் கொள்ள இவர் தன்னை பிரதமர் மோடியின் தீவிர ஆதரவாளர் என்று பகிரங்கமாக அறிவித்து, தொலைக்காட்சி விவாதங்களில் பாஜக மற்றும் இந்துத்துவா அமைப்புகளுக்கு ஆதரவாகவும், ராமர் கோயில் கட்டுவதற்கு ஆதரவாகவும் பேசி வருகிறார். இப்படிப்பட்ட ஒரு பெயர்தாங்கியைப் பயன்படுத்தி பாஜக உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருப்பது முஸ்லிம்களை சீண்டிப் பார்க்கும் செயலாகும்.

முஸ்லிம்களின் சட்டம், கல்வி முறை உள்பட பல உரிமைகளில் மூக்கை நுழைக்கும் பாஜகவும், சங்பரிவார்களும் தற்போது உலகம் போற்றும் பொதுமறையாம் திருக்குர்ஆன் மீது கைவைப்பதை நாட்டு முஸ்லிம்கள் மட்டுமின்றி உலக முஸ்லிம்கள் அனுமதிக்கவோ, வேடிக்கைப் பார்க்கவோ மாட்டார்கள் என்பதை எச்சரிக்கையாக தெரிவித்துக் கொள்கிறேன்.

இப்படிக்கு,
எம்.எச்.ஜவாஹிருல்லா
தலைவர்
மனிதநேய மக்கள் கட்சி

Check Also

விடியலுக்கான திமுகவின் தொலைநோக்கு திட்டங்கள்:தமிழக முன்னேற்றத்தின் அடித்தளம்!

மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலையொட்டி திமுக சார்பில் அதன் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *