Breaking News

உரிமை காக்க உறுதி ஏற்போம் மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா வெளியிடும் குடியரசு தின வாழ்த்துச் செய்தி.

உலகின் மாபெரும் ஜனநாயக நாடான நம் தாய்த் திருநாட்டின் 72வது குடியரசு தினத்தைக் கொண்டாடும் அனைவருக்கும் இதயங்கனிந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்து மகிழ்கிறேன். இந்திய அரசியல் சாசனம் நடைமுறைக்கு வந்த நன்னாளையே நாம் அனைவரும் குடியரசு தினமாகக் கொண்டாடி மகிழ்கிறோம்.

உலகின் மகிச் சிறந்த அரசியல் சாசனம் இந்திய அரசியல் சாசனம் என்ற பெருமிதம் நமக்கு எப்போதும் உண்டு. இந்நாட்டை வெள்ளை ஏகாதிபத்திய அடிமைத் தளையிலிருந்து விடுவிக்க நடந்த மாபெரும் விடுதலைப் போராட்டத்தில் தமது இன்னுயிரை ஈந்த, உடல், பொருள், ஆவியைத் தியாகம் செய்த மாவீரர்களான சான்றோர் பெருமக்களின் கனவுகளே நமது அரசமைப்புச் சட்டமாக மலர்ந்தன என்றால் மிகையில்லை.

இந்திய அரசியல் சாசனத்தை முழுதும் முடக்குவதையே இலட்சியமாக கொண்டவர்கள் இப்போது அதிகாரப் பதவிகளில் அமர்ந்திருப்பதால், அரசியல் சட்டம் குடிமக்களுக்கு வழங்கியுள்ள உரிமைகள் கொடுமையான முறையில் களவாடப்படுகின்றன.

மாநில உரிமைகளை மத்திய அரசு மண்ணில் புதைக்கும் மாபாதகத்தை செய்து வருகிறது.

விவசாயம் என்பதை இந்திய அரசியல் சாசனம் மாநிலப் பட்டியலில் வைத்துள்ளது. ஆனால் மத்திய அரசு இயற்றியுள்ள விவசாய விரோத வேளாண் சட்டங்கள் மாநில உரிமைகளைக் காலில் போட்டு மிதிக்கும் வகையிலும், விவசாயிகளின் நில உரிமையையே பறிக்கும் வகையிலும் அமைந்துள்ளன.

இலட்சக்கணக்கான விவசாயிகள் தலைநகர் டெல்லியில் பல நாட்களாக முற்றுகையிட்டுப் போராடிய போதும், மனிதநேயமற்ற மதவாத மத்திய அரசு மனமிறங்க மறுக்கிறது. இது மிகவும் வேதனைக்குறியது.

அரசியல் சாசனம் மக்களுக்கு அளித்துள்ள அனைத்து உரிமைகளையும் பாதுகாத்திட இந்நாளில் உறுதி மேற்கொள்வோம். மாநில உரிமைகளையும் பாதுகாத்திட எழுச்சி கொள்வோம். அனைவருக்கும் இனிய குடியரசு தின நல்வாழ்த்துகள்.

அன்புடன்

எம் எச் ஜவாஹிருல்லா

தலைவர்

Check Also

தமிழக மக்களின் மனம் குளிரும் அறிவிப்புகள் திமுகவின் தேர்தல் அறிக்கை வாக்குறுதிகள் தமிழகத்தை சீர்தூக்கி தலைநிமிர்த்தும்!

மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: “ஸ்டாலின்தான் வாராரு, விடியலைத் தரப் போறாரு” என்ற தலைப்புடன் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *